2:68 ஆளுக்கு தக்கவாறு மாற்றிக் கூறும் வழக்கம்

இந்த வசனத்தில் லனா என்று இரண்டு இடத்தில் வருகிறது.  ஒரு இடத்தில்  எங்களுக்கு என்றும் இன்னொரு இடத்தில்  எங்களுக்காக என்றும் மொழி பெயர்த்துள்ளதைக் காண்கிறோம்.  ஒரே வார்த்தை என்றாலும் இடத்திற்கு தக்கவாறு  மொழி பெயர்ப்பு மாறும் என்பதை இதன் மூலமும் அறியலாம். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/09/268.html




இந்த (2:68) வசனத்திலும்  இதற்கு முந்தைய  2:54 2:61. 2:67.  போன்ற வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ஃகால   என்பதற்கு  கூறினார் என்று  பன்மையில்  மொழி  பெயர்த்துள்ளார்கள். 



2:30. 2:31. 2:33.  போன்ற வசனங்களிலும் இடம் பெற்றுள்ள ஃகால   என்பதற்கு  கூறினான் என்று ஒருமையில்  மொழி பெயர்த்துள்ளார்கள். 


வார்த்தை ஒன்று  என்றாலும் இடத்திற்கு தக்கவாறு  மொழி பெயர்ப்பு மாறும் என்பதை  ஃகால  என்ற இந்த  வார்த்தை மூலமும் அறியலாம். 


அது மட்டுமா?  அல்லாஹ் சொன்னான் என்றாலும்  அரபு மொழியில்     ஃகால  என்றுதான்  சொல்வார்கள்.


மூஸா, ஈஸா போன்ற  நபிமார்கள் சொன்னார்கள் என்றாலும்    ஃகால  என்றுதான்  சொல்வார்கள்.


பிர்அவ்ன்  சொன்னான் என்றாலும்    ஃகால  என்றுதான் சொல்வார்கள்.


இது போன்றவற்றை குர்ஆனிலும் ஏராளமான இடங்களில் காணலாம்.


தமிழ் போன்ற மொழிகளில் தான்  சொன்னான்  சொன்னார் என்று ஆளுக்கு தக்கவாறு  மாற்றிக் கூறும் வழக்கம் உள்ளது. 



قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَٰلِكَ ۖ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ ﴿٦٨﴾


قَالُوا -  ஃகாலுா 
கூறினார்கள் - என்றார்கள் - கேட்டனர்

ادْعُ - உத்உ
பிரார்த்திப்பீராக - வேண்டுவீராக! - கேட்பீராக

لَنَا -  லனா 
எங்களுக்காக

رَبَّكَ - ரப்பக 
 உமது இறைவனிடம்

يُبَيِّن - யுபய்யின்
தெளிவுபடுத்துவான் - விவரிப்பான் -  காட்டுவான்

لَّنَا -லனா  
எங்களுக்கு


مَا -  மா
என்ன

هِيَ- ஹிய
அது

قَالَ - ஃகால 
கூறினார்

إِنَّهُ - இன்னஹு
அவன்

يَقُولُ - ஃகூலு  
கூறுகிறான்

إِنَّهَا -  இன்னஹா 
அது

بَقَرَةٌ - பகரதுன் 
மாடு

لَّا فَارِضٌ ல்லாFபாரிழுன் 
கிழடு அல்ல

وَلَا بِكْرٌ - வ்வலா பிக்ருன்  
இளங்கன்றல்ல

عَوَانٌ - ஃஅவானுன் 
நடுத்தரமானது

بَيْنَ - பைன 
இடைப்பட்ட - மத்தியில் -நடு

ذَٰلِكَ - தா(ரா)லிக 
அதற்கு

فَافْعَلُوا - Fபப்ஃஅலுா 
எனவே செய்யுங்கள்

مَا - மா
எதை

تُؤْمَرُونَ -  துஃமரூன
 கட்டளையிடப்படுகிறீர்கள் - ஏவப்படுகிறீர்கள்



2:68. இதில் உள்ள தஃகீத் சொற்கள்  இரண்டையும் ஜான் மொழி பெயர்க்கவில்லை.  

இரண்டில்  ஒன்றை  பாகவி, பஷாரத், (IFT)     தாருஸ்ஸலாம் - ரியாத் ஆகிய பதிப்பினர்  மொழி பெயர்க்கவில்லை.


மொழிப்பெயர்ப்பு :



"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார். - (PJதொண்டி)



 "அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அறிவிக்கும்படி உங்களது இறைவனைக் கேளுங்கள்" என்றார்கள். (அதற்கு மூஸா) "நிச்சயமாக அது கிழடும் அல்ல; இளங்கன்றுமல்ல. மத்திய பருவத்திலுள்ள ஒரு மாடு என அவன் கூறுகிறான்" எனக் கூறி "உங்களுக்கிடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்" என்றார். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)



அவர்கள் கூறினார்கள்: “அது (பசு) எத்தன்மையுடையது என எங்களுக்கு விவரிக்கும்படி உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது கிழடாகவோ, கன்றாகவோ இல்லாமல் நடு வயதுள்ளதாய் இருக்க வேண்டும் என இறைவன் கூறுகின்றான்; எனவே, உங்களுக்கு இடப்படுகின்ற கட்டளையைச் செயல்படுத்துங்கள்!” என்றார். -  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)



அப்பசு எத்தகையது? என்பதை எங்களுக்கு விளக்கும்படி எங்களுக்காக உம் இறைவனிடம் கேட்பீராக! என்றார்கள். "அப்பசு அதிகக் கிழடாகவோ கன்றாகவோ இருக்கக் கூடாது; இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும். உங்களுக்கு இடப்பட்ட (இக்)கட்டளையை நிறைவேற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்" என்று (மூஸா) கூறினார்.- (அதிரை ஜமீல்)



எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக ! அ( ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான் எனக் கூறினார்கள். நிச்சயமாக அது கிழடும் அல்லஇளங்கன்றுமல்ல. அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள் எனக் கூறினார்  - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)




 

 

“அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக!” என்றார்கள். “அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்“ என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக” (மூஸா) கூறினார்.- ஜான் டிரஸ்ட்

 

அவர்கள் மூஸாவே! “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக.! (அவ்வாறு பிரார்த்தித்தால்) அது எத்தகையது என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்” என்று கூறினார்கள். அவர் “நிச்சயமாக அது கிழடுமல்ல; இளங்கன்றுமல்ல; இதற்கிடையிலுள்ள மத்தியதரமான ஒரு பசு மாடாகும்” என நிச்சயமாக அவன் கூறுகிறான் எனக்கூறினார். ஆகவே உங்களுக்கிடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள் என்று மூஸாவாகிய அவர் கூறினார்.  -(அல்-மதீனா அல்-முனவ்வரா)




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.