முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் - #துஆ_செய்யுங்கள்.


தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M. காதர் மொகிதீன் சாஹிப் அவர்கள் சற்று உடல்நலம் குன்றிய நிலையில் நேற்று 03/08/2020 அன்று மாலை திருச்சி மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 




சாதாரண சளி, இருமல் தொந்தரவு சற்று கூடுதலாக இருந்ததால் அவர்களின் பிள்ளைகள் விருப்பத்தையும் ஆலோசனையையும் ஏற்று, வீட்டிலேயே இருந்து மருந்து மாத்திரைகள் என சாப்பிடுவதைவிட மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பே சிறந்தது என மருத்துவமனை சென்றிருக்கிறார்கள்.
உரிய சிகிச்சையும் மிகுந்த கவனத்தோடு நடந்து வருகிறது. நமது தலைவர் அவர்கள் விரைவில் பூரண குணம் பெற்று நலமுடன் இல்லம் திரும்ப வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம். 

'தலைவரைப் பார்த்து வரலாம்' எனும் ஆர்வத்தில் உடனே திருச்சிக்கு செல்லலாம் என்றோ, தொலைபேசியில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசலாம் என்றோ நினைப்பதை இந்த நிலையில் நாம் தவிர்த்துக் கொள்வோம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

வல்ல இறைவனின் பேரருள் கொண்டு அவர்கள் விரைவில் நல்ல சுகம் பெற்று இல்லம் திரும்பியபின் கிடைத்திடும் வாய்ப்புகளுக்கேற்ப நேரில் சந்தித்துக் கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ். அது வரையிலும் நம்முடைய கடமை தலைவர் அவர்களுக்காக துஆ செய்வது மட்டும்தான். 

எல்லாவற்றிற்கும் வல்ல அல்லாஹ் போதுமானவன். ஆமீன். 

M.அப்துல் ரஹ்மான் 
மாநில முதன்மை துணைத் தலைவர் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.