2:59 அநீதி இழைத்தோர் -அந்தப் பாவிகள் - அக்கிரமக்காரர்கள் - வரம்பு மீறியோர்- அநியாயக்காரர்கள்

அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து வேதனையை அவர்களுக்கு இறக்கினோம் என்று இந்த 2:59 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.  

பார்த்தோம் 

ழலமூ என்பதற்கு தலைப்பில் காணும் வார்த்தைகளை அவரவர் ஆய்வுக்கு தக்கபடி மொழி பெயர்ப்பாக தந்துள்ளார்கள். 

முந்தைய தலைப்புகள்

வார்த்தைக்கு வார்த்தை

فَبَدَّلَ -  Fபபத்தல  
மாற்றினார்கள் - மாற்றிவிட்டார்கள்

الَّذِينَ ظَلَمُوا - - அல்லதீன ழலமூ

قَوْلًا -  ஃகவ்லன் 
சொல்லாக - வார்த்தையாக - வார்த்தையில்

غَيْرَ கய்ர 
வேறு - அல்லாதது

الَّذِي قِيلَ -  அல்லதீ ஃகீல 
சொல்லப்பட்டதே அது - (எது கூறப்பட்டது)

لَهُمْ லஹும் 
தமக்கு - தங்களுக்கு - அவர்களுக்கு

فَأَنزَلْنَا -   Fபஅன்Zஸல்னா 
எனவே இறக்கினோம். - எனவே நாம் இறக்கிவைத்தோம் -

عَلَى الَّذِينَ -  அலல்லதீன 
அவர்களுக்கு - அவர்கள் மீது

ظَلَمُوا ழலமூ 

رِجْزًا - ரிஜ்Zஸன் 
வேதனை

  مِنَ - மின 
இருந்து

السَّمَاءِ - அஸ்ஸமா
வானம்

مِّنَ السَّمَاءِ -  மினஸ்ஸமா 
வானத்திலிருந்து

بِمَا- பிமா
காரணத்தினால் - எனவே - ஆகவே

كَانُوا -  கானுா
இருந்தார்கள்.

بِمَا كَانُوا பிமா கானுா 
அவர்கள் இருந்த காரணத்தினால்

يَفْسُقُونَ -  Fப்ஸுஃகூன

குற்றம் புரிவார்கள் - பாவம் செய்வார்கள்


فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ  

மொழிப்பெயர்ப்பு :

ஆனால், அவர்களுக்குக் கூறப்பட்ட சொல்லை, அந்தப் பாவிகள் வேறு சொல்லாக மாற்றிக் கொண்டார்கள். ஆகவே, (நம்) கட்டளையைக் கேலி செய்த குற்றத்திற்காக, அந்தப் பாவிகள் மீது வானிலிருந்து தண்டனையை இறக்கினோம். - (அதிரை ஜமீல்)


ஆனால் அநீதி இழைத்தோர், தமக்குக் (கூறப்பட்டதை விடுத்து) கூறப்படாத வேறு சொல்லாக மாற்றினார்கள். எனவே அநீதி இழைத்து, குற்றம் புரிந்ததால் வானத்திலிருந்து507 வேதனையை அவர்களுக்கு இறக்கினோம். - (PJதொண்டி)


ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்ஆகவே அக்கிரமம் செய்தார்களே அவர்கள் மீது பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்

ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். - ஜான் டிரஸ்ட் 

ஆனால் வரம்பு மீறிக்கொண்டே வந்த அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட வார்த்தையை மாற்றிவிட்டு கூறப்படாத வார்த்தையை ("ஹின்ததுன்"= கோதுமை என்று) கூறினார்கள். அவர்கள் இவ்விதம் (மாற்றிக் கூறி) பாவம் செய்ததனால் வரம்பு மீறிய (அ)வர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம்.  - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

ஆனால் அந்த அக்கிரமக்காரர்கள் தமக்குக் கூறப்பட்ட சொல்லை வேறொன்றாக மாற்றிவிட்டார்கள். இறுதியில் அந்த அக்கிரமக்காரர்கள் மீது, விண்ணிலிருந்து வேதனையை நாம் இறக்கினோம். இறைக் கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ததினால் கிடைத்த தண்டனையாகும் இது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

 

ஆனால், (அவர்களில்) அநியாயம் செய்தார்களே அத்தகையோர் _ தமக்கு கூறப்பட்டதல்லாத வேறு வார்த்தையாக அதனை மாற்றிவிட்டனர்; ஆகவே அநியாயம் செய்துவிட்டார்களே அத்தகையோர் மீது (இவ்வாறு அவர்கள்) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கி வைத்தோம். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.