2:58 “ஃகர்ய” என்பது கிராமமா? பட்டிணமா? ஊரா? நகரா? நாடா? “பாப” என்பது கதவா? வாசலா?

இந்த வசனத்தில் “ஃகர்ய” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. ஆகவே முதலில் இது சம்பந்தமாகவும். இது போன்ற  வார்த்தைகள் தரும் பொருள் பற்றியும் காண்போம்.  

அரபு மொழி படிக்காத அரபக வாழ் தமிழ் மக்கள்  “ஃகர்ய” என்பதற்கு கிராமம் என்று மட்டுமே விளங்கி வைத்து இருக்கிறார்கள். 

காரணம், Furniture village, Bicester village, Valuevillage, Food village  இப்படியான   வில்லேஜ்கள் அரபகத்தில் உள்ளன.

இவற்றில் மிக பிரபல்யமானது,  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்தது.

ஃகர்யதுல் ஆலமிய்யா”  -  
Global Village  என்பது. இதற்கு உலக கிராமம்  அல்லது உலகளாவிய கிராமம் என்று தமிழில் போட்டு இருப்பார்கள்.



ஆகவே அரபு மொழி படிக்காதவர்கள் பெரும்பாலும்  “ஃகர்ய” என்பதற்கு   Village  கிராமம் என்றே  விளங்கி  இருக்கிறார்கள்.

இப்படி விளங்கியவர்கள்  இந்த வசனத்திலும் இன்னுமுள்ள வசனங்களிலும் வரும் “ஃகர்ய” என்பதற்கு  என்னதான் பொருள்  என்ற கேள்வியுடன் உள்ளார்கள். ஏன் இந்தக் கேள்வி?

2:58ல் உள்ள “ஃகர்ய”வுக்கு ஜான் டிரஸ்ட்  பட்டிணம் என்றும்

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி  நகர் என்றும்

இலங்கை மவுலவிகள் மேற்பார்வை குழுவால் சரி காணப்பட்ட சவூதி வெளியீடு ரியாத் பதிப்பில் கிராமம் என்றும்

தமிழக மவுலவிகளாலும் சரி காணப்பட்டு சவூதி வெளியீடு  மதீனா முனவ்வரா பதிப்பில்  ஊர் என்றும் உள்ளன.  

ஆகவே “ஃகர்ய என்பது  கிராமமா? பட்டிணமா?  ஊரா?  நகரா? என்ற கேள்வி உள்ளது. 

“ஃகர்ய என்பது நாம் அறிந்தவரை குர்ஆனில் 54 வசனங்களில் இடம் பெற்றுள்ளன. அவை 2:58, 2:259, 4:756:92 , 6:123,  6:131, 7:47:82, 7:88, 7:94, 7:96, 7:97, 7:98,  7:101, 7:161, 7:163, 10:98, 11:100, 11:102,  11:117,  12:82, 12:109, 15:4, 16:112, 17:16, 17:58, 18:59, 18:77,  21:6,  21:11, 21:74,  21:95,  22:45,  22:48,  25:40,  25:51,  26:208,  27:34,  27:56,  28:58,  28:59, 29:3129:34, 34:18, 34:34, 36:13, 42:7, 43:23, 43:31, 46:27, 47:13, 59:7, 59:14, 65:8 ஆகியவையாகும். 

இவை அனைத்தையும் பார்த்தால் ஒரு இடத்தில் கிராமம் என்றவர்கள் இன்னொரு இடத்தில் பட்டிணம் என்றும் வேறு இடங்களில் ஊர், நகர், நாடு என்றும்  மொழி பெயர்த்து உள்ளார்கள். மொழி பெயர்க்காமலும் விட்டுள்ளார்கள் என்பதை அறிய முடியும்.

ஆக “ஃகர்ய என்று வந்துள்ள எல்லாவற்றையும் பார்த்தால் அனைவருமே “ஃகர்ய என்பதற்கு கிராமம், பட்டிணம், ஊர், நகர் என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். 

இதே வார்த்தையிலிருந்துள்ள “உம்முல் ஃகுரா” என்பது 6:92, 42:7  ஆகிய இரு வசனங்களில் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் தாய் நாடு என்று அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம் தந்துள்ளார். 

6:92ல் உள்ள “உம்முல் ஃகுரா”வுக்கு  தலைநகர் என IFT மொழி பெயர்த்துள்ளது.

மற்றவர்கள் 
தாய் கிராமம் என்றும்  நகரங்களின் தாய் என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள். 

----------------------
அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள் ஊர் என்பதற்கு அறிந்து வைத்துள்ள வார்த்தை “பிலாது” என்பதாகும்.

அரபி இடம் ஊருக்குப் போகிறேன் என்பதை சீர் 
பிலாது” ரூஹ் 
பிலாது” என்பார்கள். பிலாதுஷ் ஷாம்” போன்று அரபிகள் கடைகளுக்கு பெயரும் வைத்து இருக்கிறார்கள்.  இது பலது என்பதிலிருந்து உள்ளதுதான். 
 
பலதிய்யா” என்பது மாநகராட்சி என உலகில் தமிழ் பேசும் பெரும்பாலானவர்களுக்கு  தெரிந்த வார்த்தையாக ஆகி விட்டது. 

இந்த பலது” என்ற வார்த்தை  2:126, 7:57, 7:58, 14:35, 16:7 , 25:49,  27:91, 34:15, 35:9, 40:4, 43:11, 50:11, 50:36, 90:1, 90:2, 95:3 ஆகி வசனங்களில் இடம் பெற்றுள்ளது. பலது” என்பதற்கு பட்டணம், ஊர், நகர் என்று தமிழாக்கம் தந்துள்ளார்கள்.

7:57, 7:58, 25:49, 43:11, 50:11  ஆகிய  வசனங்களில் இடம் பெற்றுள்ள  பலது” என்பதற்கு    பூமி, நிலம் என்று இடத்துக்கு தக்கவாறு தமிழாக்கம் தந்துள்ளதையும் காண்கிறாம்.

34:15, 40:4. ஆகிய  வசனங்களில் இடம் பெற்றுள்ள  பலது” என்பதற்கு நாடு என்று IFTயினர் மொழி பெயர்ப்பு  செய்துள்ளார்கள்.

----------------

அரபிகளுக்கு மட்டுமல்ல உலகில் எல்லாருக்கும் தெரிந்த பிரபல்யமான வார்த்தை மதீனா.

இதற்கும் 
பட்டணம், ஊர், நகர் என்ற பொருள் தந்துள்ளார்கள். இதை 7:111, 9:101, 9:120, 12:30, 15:67 , 18:19, 18:82, 26:36, 26:53, 36:20 ஆகிய  வசனங்களில் காணலாம்..  ..

------------------------

2:61, 10:87 ஆகிய இரு வசனங்களில் இடம் பெற்றுள்ள  மிஸ்ர் என்பதற்கும் பட்டணம், நகரம் என்றும் எகிப்து என்றும் மொழி பெயர்த்து உள்ளார்கள்.

----------

நாம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்றாலும் பெரும்பாலான அரபிகள் நம்மிடம் அன்த மதராஸ் லா மலபார்?  என்றே கேட்பார்கள். மதராஸ் என்றதும்

ன்த மதராஸி ( நீ மதராஸ்காரன்) என்பார்கள். மலபார்  என்றால் மலபாரி என்றும் சிலோன் என்றால் சிலோனி (சிலோன்காரன்) என்றும் கூறுவார்கள். 

அது போல் தான் 9:90, 9:97, 9:98, 9:99, 9:101, 9:120,33:20, 48:11, 48:16, 49:14 ஆகிய வசனங்களில் இடம் பெற்றுள்ள அஃராபி என்பதற்கு கிராமவாசி - கிராமத்துக்காரர்  என்று பொருள் வரும்.

الْاَعْرَابِ

அஃராபி, அஃராபு என்று வரக் கூடிய இடங்களில்  காட்டரபிகள் - கிராமத்து அரபிகள் -நாட்டுப் புற அரபிகள் என்று சிலர் மொழி பெயர்த்துள்ளார்கள். இணைப்பில் காணலாம். 


கிராமவாசிகள் என்று கண்ணியமான சரியான மொழி பெயர்ப்பு செய்தவரும் உண்டு..
------------------
بدو
“பதுா” இது கிராமத்தில் உள்ள அரபிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இன்றைக்கும் மின்சாரத்தை உபயோகிக்காமல் பாலைவனத்தில் வசிக்கக் கூடிய அரபிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் 
“பதுா” பதுாவிகிராமவாசி என்று அழைக்கப்படுகறார்கள். 33:20ல் இடம் பெற்றுள்ள
 بَادُوْنَ
“பாதுான” என்பது கிராமங்களில் என்று பொருள் தருகிறது. 
 فِى الْاَعْرَابِ 
“Fபில் அஃராபி” என்பது கிராமவாசிகள் என்று பொருள்.
بَادُوْنَ فِى الْاَعْرَابِ 
“பாதுான Fபில் அஃராபி”  என்றால் கிராமவாசிகளுடன் கிராமங்களில் என்று பொருள் தருகிறது. 
-----------------
அரபு மொழியில் “தார்” என்றால் வீடு - இல்லம் (ஒருமை)

தாரைன் என்றால் . இரண்டு வீடு. (இருமை)

தியார் என்றால் வீடுகள் (பன்மை) என்று விளங்கி வைத்து இருக்கிறோம். 

அல் குர்ஆன் 17:5 ல் 
 خِلٰلَ الدِّيَارِ
கிலாலத்தியாரி என்ற வார்த்தை. இடம் பெற்றுள்ளது.

இதற்கு 
வீடுகளுக்குள்ளேயும்  - வீடுகளில் புகுந்து - வீடுகளுக்கு ஊடுருவிச் சென்று  என்று  மொழி  பெயர்ப்புகள் உள்ளதைக் காண்கிறோம்.

உங்கள் நாட்டில் ஊடுருவி என்று IFT மொழி பெயர்த்துள்ளதையும் காண்கிறோம்

ஜஸாகல்லாஹு கைரன் “பித்தாரைன்” என்று நன்றி  சொல்வோம்.

இதில் உள்ள “தாரைன்”என்பதற்கு  ஈருலகில் என்று எல்லாரும் விளங்கி வைத்து இருக்கிறோம். 

ஆக  அரபு மொழியில் “தார்” என்றால் வீடு, நாடு, உலகம் ஆகிய பொருள் தருகிறது. இடத்துக்கு தக்கவாறு பொருள் கொண்டால் குழப்பம் வராது. 

குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து படிக்கும் போது. அரபு, தமிழ் ஆகிய இரு மொழி அறிவையும் குர்ஆன் பற்றிய ஆய்வுத் திறனையும் விபரமுள்ளவர்கள் பெறுகிறார்கள்.

அல்லாஹ்வின் பேரருள் சுயமான முதர்ஜிமீன் (மொழி பெயர்ப்பாளர்)கள்  மீது உண்டாகட்டுமாக ஆமீன்.

------------------


இனி 2:58 வார்த்தைக்கு வார்த்தை

وَإِذْ قُلْنَا - வயி(ர்)து ஃகுல்னா  
நாம் கூறிய போது

ادْخُلُوا - உத்ஃகுலுா 
நுழையுங்கள் - செல்லுங்கள்!

هَٰذِهِ - ஹா(ரி)திஹி 
இதில் - இந்த

الْقَرْيَةَ அல் ஃகர்யத 
பட்டிணம் - ஊர் - கிராமம் - நகர்

فَكُلُوا - Fபகுலுா 
உண்ணுங்கள் - புசியுங்கள்

مِنْهَا மின்ஹா 
அதிலிருந்து

حَيْثُ - ஃஹை(ஸு)து
முறைப்படி -   -விதத்தில் -

شِئْتُمْ ஷிஃதும்
நீங்கள் விரும்பினீர்கள் - நாடினீர்கள்

رَغَدًا ரஃகதன்வ்
தாராளமாக

وَادْخُلُوا - வத்ஃகுலுா 
நுழையுங்கள்

الْبَابَ - அல் பாப 
வாயில் - வாசல் 

سُجَّدًا ஸுஜ்ஜதன் 
பணிவுடையவர்கள் - 

 وَّقُوْلُوْا- ஃகூலுா 
கூறுங்கள்

حِطَّةٌ ஃஹித்ததுன்
பாவம் நீங்கட்டும் -  "மன்னிப்பு'

نَّغْفِرْ  நஃக்Fபிர் 
மன்னிப்போம்

لَكُمْ லகும் 
உங்களுக்கு

خَطَايَا - ஃகதாயா 
தவறுகள் - குற்றங்கள்

كُمْ - கும்
உங்கள் -உங்களுடைய

خَطَايَاكُمْ - ஃகதாயாகும் 
உங்கள் தவறுகளை - உங்களுடைய தவறுகள்

 وَسَنَزِيدُவஸநZஸீது 
அதிகமாக வழங்குவோம் - அதிகமாக்குவோம் - அதிகப்படுத்துவோம்


الْمُحْسِنِينَ - அல் முஹ்ஸினீன
நன்மை செய்வோர் -நன்மக்கள்  - நல்லறம் புரிவோர் 


 وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ  وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ‎‎ 

வயி(ர்)து ஃகுல்னாத்ஃகுலுா  ஹா(ரி)திஹில் ஃகர்யத Fபகுலுா    மின்ஹா    ஹை(ஸு)து ஷிஃதும் ரஃகதன்வ் வத்ஃகுலுால் பாப ஸுஜ்ஜதன்வ் ஃகூலுா  ஃஹித்ததுன் நஃக்Fபிர்லகும் ஃகதாயாகும் வஸநZஸீதுல் முஹ்ஸினீ(ன)ன்


மொழிப்பெயர்ப்பு :


இன்னும் (பாருங்கள்) "இந்த ஊருக்குள் நுழைந்து, அங்கு நீங்கள் விரும்பியவற்றைத் தாராளமாக உண்ணுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி "ஹித்ததுன்(எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்)" என்று கூறுங்கள். நாம் உங்கள் தவறுகளை மன்னிப்போம். மேலும் வள்ளல் தன்மை உடையோருக்கு நாம் அதிகமாக வாரி வழங்குவோம்" என்று கூறினோம். - (அதிரை ஜமீல்

"இவ்வூருக்குள் செல்லுங்கள்! அங்கே விரும்பியவாறு தாராளமாக உண்ணுங்கள்! வாசல் வழியாக பணிவாக நுழையுங்கள்! "மன்னிப்பு' என்று கூறுங்கள்! உங்கள் தவறுகளை மன்னிப்போம். நன்மை செய்வோருக்கு அதிகமாக வழங்குவோம்'' என்று நாம் கூறியதை எண்ணிப்பாருங்கள்! -(PJதொண்டி)

58.இன்னும் இந்த பட்டிணத்துள் நுழைந்துஅங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போதுபணிவுடன் தலைவணங்கி ஹித்ததுன்” (பாவம் நீங்கட்டும்) என்று கூறுங்கள்நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம் என்று நாம் கூறியதை (நினைவு கூறுங்கள்).- (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)

இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். - ஜான் டிரஸ்ட்

அன்றி (உங்கள் மூதாதையர்களை நோக்கி) "நீங்கள் இந்த நகருக்கு சென்று அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தில் (விருப்ப மானவற்றைத்) தாராளமாகப் புசியுங்கள். அதன் வாயிலில் (நுழையும் பொழுது) தலைகுனிந்து செல்லுங்கள். "ஹித்ததுன்" (எங்கள் பாவச்சுமை நீங்குக!) எனவும் கூறுங்கள். உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்துவிடுவோம். நன்மை செய்தவர்களுக்கு (அதன் கூலியை) அதிகப்படுத்தியும் கொடுப்போம்" எனக் கூறியிருந்தோம். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

மேலும் “(அருகிலிருக்கும்) இந்த ஊருக்குள் நுழையுங்கள். பிறகு அங்கு (கிடைப்பனவற்றை) நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள். ஊருக்குள் நுழையும்போது அதன் தலைவாசலில், சிரம் தாழ்த்திய வண்ணமும் “ஹித்தத்துன்” என்று சொல்லியவாறும் நுழையுங்கள்! உங்கள் குற்றங்களை நாம் மன்னிப்போம். மேலும் சிறந்த முறையில் நற்செயல்கள் புரிவோருக்கு விரைவில் அதிக நற்கூலி வழங்குவோம்” என நாம் கூறியதையும் நினைவுகூருங்கள். (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

இன்னும் (நினைவு கூறுங்கள்:) இந்த ஊருக்குள் நுழைந்து அதில் நீங்கள் விரும்பியவாறு தாராளமாகப் புசியுங்கள், தலை குனிந்தவர்களாக (அதன் வாயிலில் நுழையுங்கள்,(எங்கள் பாவச்சுமைகள்) நீங்கட்டும் என்ற ‘ஹித்ததுன்’ எனவும் கூறுங்கள். அதன் நிமித்தம் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னித்து விடுவோம், மேலும், நன்மை செய்வோருக்கு அதன் கூலியை அதிகப்படுத்துவோம் என்றும் கூறினோம். - (அல்-மதீனா அல்-முனவ்வரா)




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.