2 : 61 தங்கி விடுங்கள் - சென்று விடுங்கள். - இறங்கி விடுங்கள் எது சரி?

மூஸா நபி சமுதாயத்தினர் சிறந்த (நல்ல - மேலான) உணவுக்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்டார்கள். இது பற்றிக் கூறிய அல்லாஹ். எவற்றைக் கேட்டார்கள்? என்று சொல்லும் போது. 

பஃக்லிஹா   வகிஸ்தாஃயிஹா   வFபூமிஹா  வஃஅதஸிஹா வபஸலிஹா என்று கூறி உள்ளான்.

வ்வாறு சொல்வது அரபு மொழியில் சிறந்த நடை. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/08/2-61.html

இப்படியே அரபு மொழி நடையில் தமிழாக்கம் செய்தால் 5 தடவை அதன் என்பது வரும். தமிழ் மொழியில் அது சிறந்த நடையாக இருக்காது.

ஆகவே 
கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் என்று கூறுவது தான் தமிழில் நல்ல மொழி நடை  என்ற கருத்தில் உள்ளவர்கள். இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்கள்.

அரபு மொழியில் உள்ளபடி தான் அரபு மொழி நடையில் தான் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அரபு மொழியில் பெண்பாலைக் குறிக்கும் ஹா இடம் பெற்றுள்ளது. 

தமிழிலில் பெண்பாலை மட்டும் குறிக்கும் அவள்  என்று மொழி பெயர்க்காமல், தமிழுக்கு தக்கவாறு பெண்பாலையும் குறிக்கும் அதன் என்பதை மொழி பெயர்ப்பு செய்துள்ளோம் என்றுள்ளவர்கள். 

அதன் கீரையையும். அதன் வெள்ளரிக்காயையும்அதன்  கோதுமையையும்அதன் பருப்பையும் அதன் வெங்காயத்தையும் என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

சிறந்த நடை எளிய நடை என்பது அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு மாறுபட்டுள்ளது.


-------------------

2:61ல் இடம் பெற்றுள்ள இஹ்பிதுா  என்ற இந்த வார்த்தை  2:362:387:24. ஆகிய வசனங்களிலும் இடம் பெற்றுள்ளன. மற்ற வசனங்களில் இதற்கு இறங்கி விடுங்கள் என்று எல்லாரும் ஒருமித்து மொழி பெயர்த்துள்ளார்கள்.

2:61ல் மட்டும் சிலர்  சென்று விடுங்கள் என்றும் சிலர் இறங்கி விடுங்கள் என்றும் தங்கி விடுங்கள் என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள். 


2:61இதில் உள்ள தஃகீத் சொற்கள்  இரண்டையும்  (IFT)  மொழி பெயர்க்கவில்லை 

இரண்டில்  ஒன்றை   பாகவி, பஷாரத், ஜான், தாருஸ்ஸலாம் -ரியாத் ஆகிய பதிப்பினர்  மொழி பெயர்க்கவில்லை.

இனி வார்த்தைக்கு வார்த்தை



 وَإِذْ قُلْتُمْ - வஇது ஃகுல்தும் 
 நீங்கள் கூறியபோது, 


يَا مُوسَىٰ யா மூஸா
"மூஸாவே!

لَنْ نَصْبِرَ  லன்னஸ்பிற 
சகிக்கவே மாட்டோம் -  சகித்துக் கொள்ளவே மாட்டோம் - பொறுமையாக இருக்க முடியாது - பொறுத்துக் கொண்டிருக்கவே மாட்டோம்.

عَلَىٰ طَعَامٍ - அலா  தஃஆமின் 
ஒர் உணவு  மீது - ஒரே (வகையான ) உணவை - ஒரே (விதமான )உணவை  

وَاحِدٍ வாஹிதின் 
ஒரே

فَادْعُ - Fபத்ஃஉ 
ஆகவே பிரார்த்திப்பீராக  - எனவே பிரார்த்தனை செய்வீராக! -ஆதலால் கேளுங்கள் -வேண்டுவீராக! -

لَنَا -  லனா 
எங்களுக்காக

 رَبَّكَ -  ரப்பக 
உன் இறைவனிடம்

يُخْرِجْ யுஃக்ரிஜ் 
வெளிப்படுத்துவான் - உற்பத்திசெய்வான்

لَنَا - லனா 
எங்களுக்கு - எங்களுக்காக 
 مِمَّا - மிம்மா 
எதிலிருந்து

تُنْبِتُ -  து(ன்)ம்பிது 
விளைவிக்கிறது - முளைவிக்கிறது -முளைப்பிக்கின்றது

الْأَرْضُ அல் அர்ழு 
பூமி

مِنْ - மின் 
இருந்து

بَقْلِهَا -  பஃக்லிஹா 
அதன் கீரையிலிருந்து

وَقِثَّائِهَا வகிஸ்தாஃயிஹா 
அதன் வெள்ளரிக்காய்

وَفُومِهَا வFபூமிஹா
அதன் கோதுமை

وَعَدَسِهَا - வஃஅதஸிஹா
அதன் பருப்பு

وَبَصَلِهَا வபஸலிஹா
அதன் வெங்காயம்

------------

قَالَ - கால
கூறினார்

أَتَسْتَبْدِلُونَ - அதஸ்தப்திலுான
மாற்றிக் கொள்கிறீர்களா ?

الَّذِي- அல்லதீ
எது

 هُوَ - ஹுவ 
அது  

أَدْنَىٰ அத்னா 
மிகத் தாழ்ந்தது - 

بِالَّذِي - பில்லதீ 
எதற்குப் பகரமாக

هُوَ خَيْرٌ -  ஹுவ ஃகைருன்
அது சிறந்தது -- நல்லது -மேலானது 
 

----------

اهْبِطُوا  இஹ்பிதுா 
தங்கி விடுங்கள்  - சென்று விடுங்கள். - இறங்குங்கள் (“இஹ்பிதுா” என்ற இந்த வார்த்தை 2:362:387:24. வசனங்களிலும் பார்த்து இருக்கிறீர்கள்) 


مِصْرًا - மிஸ்ரன் 
ஒரு நகரத்தில் - பட்டணத்தில் - ஊர்

فَإِنَّ لَكُمْ Fபஃ.இன்னலகும் 
உங்களுக்கு

مَا سَأَلْتُمْ - மாஸஅல்தும் 
எது கேட்டீர்கள்

--------

وَضُرِبَتْ  வழுரிபத் 
விதிக்கப்பட்டன 

عَلَيْهِمُ- ஃஅலைஹிமு
அவர்கள் மீது

الذِّلَّةُ - அ(ர்)தில்லது
இழிவு -அவமானம்

وَالْمَسْكَنَةُ  வல்மஸ்கனது 
வறுமையும் வீழ்ச்சியும் - தாழ்வும்

وَبَاءُوا- வபாஊ 
ஆளானார்கள் - சார்ந்துவிட்டார்கள் 

 بِغَضَبٍ - பிகழபின் 
கோபத்திற்கு -கோபத்தில் - சினத்திற்கு

مِنَ اللَّـهِ - மினல்லாஹி 
அல்லாஹ்வின்

--------

ذَٰلِكَ - (ரா)தாலிக  
அது

بِأَنَّهُمْ - பிஅன்னஹும்
அவர்கள் 

كَانُوا -  கானுா 
இருந்தார்கள்

يَكْفُرُونَ யக்Fபுரூன
நிராகரிக்கிறார்கள்

بِآيَاتِ اللَّـهِ - பிஆயாதில்லாஹி 
அல்லஹ்வுடைய வசங்களை

وَيَقْتُلُونَ வயஃக்துலுான 
கொலை செய்கிறார்கள்

النَّبِيِّينَ -அன்னபிய்யீன 
 நபிமார்களை

بِغَيْرِ الْحَقِّ - பிஃகைரில் ஹஃக்கி
நியாயமின்றி

--------------
ذَٰلِكَ (ரா)தாலிக 
அது
بِمَا- பிமா 
காரணமாக

 عَصَوْا  ஃஅஸவ் 
பாவம் செய்தனர்

وَكَانُوا - வகானுா 
இருந்தனர்

يَعْتَدُونَ  - யஃததுான
வரம்பு மீறுவார்கள்



وَإِذْ قُلْتُمْ يَا مُوسَىٰ لَنْ نَصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا ۖ قَالَ أَتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَىٰ بِالَّذِي هُوَ خَيْرٌ ۚ اهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ ۗ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِنَ اللَّـهِ ۗ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّـهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ۗ ذَٰلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ ﴿٦١﴾

வஇது ஃகுல்தும்  யா மூஸா லன்னஸ்பிற அலா  தஃஆமின் வாஹிதின் Fபத்ஃஉலனா  ரப்பக யுஃக்ரிஜ்லனா மிம்மா து(ன்)ம்பிதுல் அர்ழு மின் பஃக்லிஹா வகிஸ்தாஃயிஹா வFபூமிஹா வஃஅதஸிஹா வபஸலிஹா கால அதஸ்தப்திலுான அல்லதீ ஹுவ  அத்னா பில்லதீ ஹுவ ஃகை(ருன்)ர் இஹ்பிதுா மிஸ்ரன்  Fபஃ.இன்ன லகும்   மாஸஅல்தும்  வழுரிபத்  ஃஅலைஹிமு(ர்)தில்லது வல்மஸ்கனது  வபாஊ பிகழபின் மினல்லாஹி  (ரா)தாலிக   பிஅன்னஹும் கானுா யக்Fபுரூன பிஆயாதில்லாஹி வயஃக்துலுான அன்னபிய்யீன பிஃகைரில் ஹஃக்கி (ரா)தாலிக  பிமா ஃஅஸவ் வகானுா யஃததுான


தமிழாக்கங்கள் : 

மூஸாவே! ஒரே விதமான உணவு எங்களுக்கு உண்ணச் சகிக்கவில்லை. ஆதலால், பூமி விளைவிக்கும் கீரை, வெள்ளரி, பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு உம் இறைவனிடம் வேண்டுவீராக! என்று நீங்கள் கூற, "சிறந்தவற்றை விடுத்துத் தரம் தாழ்ந்தவற்றை விரும்புகிறீர்களா? (இவ்வூரை விடுத்து) நீங்கள் விரும்புவது கிடைக்கக் கூடிய ஏதாவது ஓர் ஊருக்குச் சென்று விடுங்கள்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப் பட்டன. இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததாலும் (அல்லாஹ் விதித்த) வரம்புகளைத் தொடர்ந்து மீறிக்கொண்டே இருந்ததாலும் ஏற்பட்டது. மேலும் அல்லாஹ்வின் சினத்திற்கும் அவர்கள் ஆளானார்கள். ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுதலித்து, அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்தார்கள். -(அதிரை ஜமீல்)


"மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப்படுத்துவான்'' என்று நீங்கள் கூறியபோது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார்.389 அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக்கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம். - (PJதொண்டி)


மூசாவே ! ஒரே ஒர் உணவை சகிக்கவே மாட்டோம் ஆகவே . உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக . பூமி விளைவிக்கும் அதன் கீரை. அதன் வெள்ளரிக்காய்அதன் கோதுமைஅதன் பருப்பு அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளிப்படுத்துவான். என நீங்கள் கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள்.

சிறந்த தற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள் நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு உண்டு எனக் கூறினார். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிகப்பட்டன.
அல்லாஹ்வின் கோபத்திலும் சார்ந்து விட்டார்கள் . அதுநிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசங்களை நிராகரிப்பவர்களாகவும்நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும்  இருந்த காரணத்தாலாகும். அதுஅவர்கள் பாவம் செய்து வரம்பு மீறுபவர்களாக இருந்த காரணத்தாலாகும். -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்

இன்னும், "மூஸாவே! ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்" என்று நீங்கள் கூற, "நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா? நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்" என்று அவர் கூறினார். வறுமையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது. -ஜான் டிரஸ்ட் 

ஆனால் (அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! ஒரே (விதமான) உணவை உட்கொண்டிருக்க எங்களால் முடியாது. பூமியில் முளைக்கக்கூடிய கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பருப்பு, வெங்காயம் ஆகியவைகளை வெளிப்படுத்தித் தரும்படி உங்களுடைய இறைவனை எங்களுக்காக நீங்கள் கேளுங்கள்" என அவரிடம் கேட்டார்கள். அதற்கு (மூஸா) "மேலானதற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக்கொள்(ள விரும்பு)கின்றீர்களா? (அவ்வாறாயின்) நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள். நீங்கள் கேட்பது நிச்சயமாக (அங்குதான்) உங்களுக்குக் கிடைக்கும்" என்று கூறிவிட்டார். ஆகவே, வீழ்ச்சியும் இழிவும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் (அவர்கள்) சார்ந்து விட்டார்கள். மெய்யாகவே அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததும், நியாயமின்றி இறைத்தூதர்களைக் கொலை செய்து வந்ததும் இதற்குக் காரணமாகும். இ(வ்வளவு பெரிய குற்றங்களை அவர்கள் செய்யும்படி நேர்ந்த)தற்குக் காரணம்: அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை அடிக்கடி) வரம்பு மீறி பாவம் செய்து கொண்டிருந்ததுதான் -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்) 


மேலும், நீங்கள் (மூஸாவை நோக்கி) இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மூஸாவே! நாங்கள் ஒரே வகையான உணவைக் கொண்டு பொறுமையாய் இருக்க முடியாது; எனவே, பூமி விளைவிக்கின்ற கீரை, வெள்ளரிக்காய், கோதுமை, பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை எங்களுக்காக உற்பத்தி செய்து தரும்படி உமது இறைவனை நீர் பிரார்த்திப்பீராக!” அதற்கு மூஸா கூறினார்: “சிறந்த பொருள்களுக்குப் பதிலாக மட்டமான பொருள்களை நீங்கள் விரும்புகிறீர்களா? (அப்படியானால்) நீங்கள் ஏதாவது ஒரு பட்டணத்திற்குச் சென்று (தங்கி) விடுங்கள். நீங்கள் கேட்பவை எல்லாம் உங்களுக்கு அங்கே கிடைக்கும்.” (இறுதியில் அவர்களின் நிலை என்னவாயிற்று என்றால்) இழிவும், தாழ்வும், (வீழ்ச்சியும்) அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டன. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். இந்த விளைவு ஏன் ஏற்பட்டதென்றால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டும், நபிமார்களை நியாயமின்றி கொலை செய்து கொண்டும் இருந்தார்கள். இந்த விளைவு ஏற்பட்டதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து கொண்டும், (ஷரீஅத்தின்) வரம்பை மீறிக்கொண்டும் இருந்ததுதான்! - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


இன்னும், “மூஸாவே!” ஒரே விதமான உணவின் மீது நாங்கள் பொறுத்துக் கொண்டிருக்கவே மாட்டோம்; ஆகவே, உம்முடைய இரட்சகனிடம் எங்களுக்காக பிரார்த்தித்துக் கேட்பீராக! பிரார்த்தித்தால் பூமி முளைப்பிக்கின்றவற்றில் இருந்து அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் அவன் வெளிப்படுத்தித் தருவான் என்று நீங்கள் கூறினீர்கள் (என்பதையும் நினைவு கூறுங்கள். அவ்வாறு நீங்கள் கூறியதைக் கேட்ட மூஸா) எது மேலானதாக இருக்கிறதோ அதற்குப் பதிலாக எது மிகத் தாழ்ந்ததாக இருக்கின்றதோ அதை நீங்கள் மாற்றிக் கொள்(ள விரும்பு)கின்றிர்களா? அவ்வாறாயின் நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கிவிடுங்கள்; அங்கு நீங்கள் கேட்டது உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும் என்று அவர் கூறினார். இழிவும், வறுமையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டும் விட்டன;. மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களாக அவர்கள் திரும்பினார்கள;. இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் இருந்தார்கள் என்பதன் காரணத்தினால்தான்; இந்நிலைக்கு அவர்கள் ஆளானது அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குப் பணியாது மாறு செய்துக்கொண்டிருந்ததாலும், அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறிக் கொண்டேயிருந்தார்கள் என்ற காரணத்தினால்தான். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.