2:62 வசனமும் வலம்புரி ஜான் போன்றவர்களும்

இஸ்லாமில் இல்லாதவர்களை இஸ்லாமிய  பிரச்சார மேடைகளில் ஏற்றுவார்கள். 

அவர்களை இஸ்லாம் பற்றி பேசச் செய்வார்கள். 

இதை 1980களில் எதிர்த்தவர்களில் மிக  முக்கியமானவர் யார் தெரியுமா?  

ஒரே நேரத்தில் மு.லீக்கின் இரண்டு பொதுச்செயலாளர்களாக  இருந்தவர்களில் ஒருவர்.

யார் அவர்? அவர்தான்  A.M. யூசுப் அவர்கள். தனது மறுமலர்ச்சி வார இதழில் முரசொலி அடியார் என்று அறியப்பட்டவரை  குறிப்பிட்டே எழுதினார். 

https://mdfazlulilahi.blogspot.com/2020/08/262.html

நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிவுடையோரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என்ற குர்ஆனின்  21:7 வசனத்தை அடியார் ஆதரவாளர்கள் பதிலாகக் கூறினார்கள்.  


இதை ஒட்டி வாதப் பிரதி வாதங்கள் கடுமையாக நடந்தன. முரசொலி அடியார்  அப்துல்லாஹ் அடியாராக ஆனார்.  விவாதம்  முற்றுப்  பெற்றது.


1986ல் ஏற்பட்ட இஸ்லாமிய எழுச்சியால் முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாமிய  பிரச்சாரம் செய்ய வைக்கும் செயல்கள் குறைந்தன. 


1996ல் துபையிலுள்ள முஸ்லிம் அமைப்பு சார்பில் நடந்த  இஸ்லாமிய  பிரச்சார நிகழ்ச்சியில். மூப்பனாரின் தமிழ் மாநில காங்ரஸ் பிரமுகராக இருந்த வலம்புரி ஜான் ExM.P, M.L.C  அவர்களை பேச வைத்தார்கள்.


இந்த காலக் கட்டங்களில் துபை வந்த அரசியல் பிரமுகர்களை கட்சி பேதம் பார்க்காமல் த.மு.மு.க. கிளையான தமிழ் முஸ்லிம் பேரவை சார்பில் அழைத்து வருவோம். பைசலில் ரெஸ்ட் மாடியில் வைத்து சிறப்பித்து உரிய முறையில் கவுரவிப்போம் பிறகு, 


தடாக் கைதிகள் விடுதலை சம்பந்தமாக முயற்சி செய்ய வேண்டும். பொது மேடைகளில் பேச வேண்டும் என  கோரிக்கை மனு கொடுப்போம். 


அந்த அடிப்படையில் வலம்புரி ஜான் அவர்களையும் த.மு.மு.க. சார்பில் அழைத்து வந்து கவுரவித்து தடாக் கைதிகள் விடுதலை   விஷயமாக மூப்பனார் மூலம் கருணாநிதியை வலியுறுத்த வேண்டி கோரிக்கை மனு கொடுத்தோம். அந்த நிகழ்ச்சியில்,


குர்ஆன்  பற்றி எங்கள் ஆலிம்களைவிட  இவ்வளவு அழகாக பேசக் கூடிய நீங்கள்  குர்ஆன் கூறும் இஸ்லாத்தை  ஏற்காதது ஏன்? என்று  ஒருவர் கேட்டார். உடனே  வலம்புரி ஜான்  “இரண்டு அறுபத்திரண்டு” என்று பதில் அளித்தார். 


அவரை அழைத்து  வந்த அமைப்பினர் உட்பட பல அமைப்பினர் இருந்ததால் 2:62 ல் கூறப்பட்டுள்ள சரியான கருத்தை சொல்லவிடவில்லை. கோரிக்கை வைத்ததுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கொள்கை வாதம் செய்யாதீர்கள் என்று கூறி விட்டார்கள். 


யூதர்களாயினும்கிறிஸ்தவர்களாயினும் அவர்கள் இனி செய்யும் அமல்களின் கூலி இறைவனிடம் இருக்கிறது  என்பதே வலம்புரி ஜான்  ஆதரவாளர்கள் கருத்து. 


இந்தக் கருத்து அரபிகளிடமும் இருக்கிறது. யூதகிறிஸ்தவ பெண்களை திருமணம் செய்து கொண்டு.  இந்த 2:62 வசனப்படி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது என்கிறார்கள். 


எந்த வசனமாக இருந்தாலும்  அதன் முன் பின்  வசனங்கள் அடிப்படையில் தான்  விளக்கம் பெற வேண்டும். 


இதற்கு  முந்தைய வசனங்களில் இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுத்து  நபிமார்களைக் கொன்ற முன் சென்ற சமுதாய வரலாற்றை கூறிய அல்லாஹ். அவர்கள் மீது இறங்கிய தண்டனைகள் பற்றியும் விவரித்தான். 


அதன் தொடரான இந்த 2:62 வசனத்தில் முந்தைய சமுதாயத்தில்  நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்தோருக்கு  அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள் என்கிறான்.  


விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களாக இருந்தார்களே அவர்களும், ஸாபியீன்களும் அவர்களில் _எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ, அத்தகையவர்கள் அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு


இப்படி இறந்த கால செயலாகத்தான்  சொல்லப்பட்டுள்ளது.


அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. வேதம் கொடுக்கப்பட்டோர்27 தம்மிடம் விளக்கம் வந்த பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண்பட்டனர். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன். 3:19.


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வந்த பிறகு முந்தைய மற்ற மார்க்கங்கள் செல்லாதவை என்று அல்லாஹ் 3:19ல் தெளிவாக அறிவித்து விட்டான். 


ஆகவே முஹம்மது நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என்று ஏற்காமல் இன்று யூதர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்து கொண்டு அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது  என்பது தவறான கருத்தாகும்.


------------


மேலும் 2:62ல் உள்ள  “ஃஅலைஹிம்” க்கு  அவர்கள் மீது என்று ஒருவரது  மொழி பெயர்ப்பு உள்ளது. 


அதாவது அவர்கள் மீது பயமுமில்லை என்று  மொழி பெயர்த்து உள்ளார்.


அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை என்ற  மொழி பெயர்ப்புகளே சரியானவையாகும்.

இனி வார்த்தைக்கு வார்த்தை

إِنَّالَّذِينَ  آمَنُوا - இன்னல்லதீன ஆமனுா

நம்பிக்கை கொண்டோரிலும்,

وَالَّذِينَ - ல்லதீன  

அந்த - எவர்கள் - அவர்கள் -யார் - சிலர்

هَادُوا ஹாதுா 

யூதர்கள்

وَالَّذِينَ هَادُوا -ல்லதீன ஹாதுா 

யூதர்களிலும்,

وَالنَّصَارَىٰ-வன்னஸாரா

கிறித்தவர்களிலும்,

وَالصَّابِئِينَ - வஸ்ஸாபியீன  

ஸாபியீன்களிலும்


مَنْ-மன் 

எவர்

آمَنَ-ஆமன

நம்பிக்கை கொண்டான்

بِاللَّهِ- பில்லாஹி 

அல்லாஹ்வை - அல்லாஹ்வின் மீது

وَالْيَوْمِ -வல்யவ்மி

நாளையும்

 الْآخِرِ-(அ)ல்  ஆஃகிரி   

இறுதி - கடைசி 

 وَعَمِلَ-வஃஅமில 

செய்தான்

صَالِحًا-ஸாலிஃஹன் 

நல்லது - நன்மை 

فَلَهُمْ-Fபலஹும் 

அவர்களுக்கு 

أَجْرُ -அஜ்ரு 

கூலி

هُمْ -ஹும் 

அவர்களின் 

عِندَஃஇன்த 

யிடம்

رَبِّهِمْ -ரப்பிஹிம்

அவர்களின் இறைவன்

عِنْدَ رَبِّهِمْ -ஃஇன்த ரப்பிஹிம் 

அவர்களின் இறைவனிடம் 

وَلَا خَوْفٌ -வலா ஃகவ்Fபுன் 

பயமும் இல்லை.

عَلَيْهِمْ-ஃஅலைஹிம் 

அவர்களுக்கு

وَلَا هُمْ يَحْزَنُونَவலாஹும் யஃஹஃZஸனுான

கவலைப்படவும் மாட்டார்கள்.


2:62 இதில் உள்ள தஃகீத் சொற்கள்  இரண்டில்  ஒன்றை  பாகவி பஷாரத், மலிவு பதிப்பு (IFT)    ஃபஹத் வளாகம் மதீனா,    தாருஸ்ஸலாம் - ரியாத் ஆகிய பதிப்பினர்  மொழி பெயர்க்கவில்லை.


தமிழ் மொழி பெயர்ப்புகள்-


நம்பிக்கை கொண்டோரிலும், யூதர்களிலும், கிறித்தவர்களிலும், ஸாபியீன்களிலும்443 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். -(PJதொண்டி)

https://www.onlinepj.in/index.php/alquran/alquran/quran-explanations/443-sabiyeengal

(இறைமறை அருளப் பெற்ற) ஓரிறை நம்பிக்கையாளர்களாயினும் யூதர்களாயினும் கிருஸ்துவர்களாயினும் (மறையும் நெறியும் அறியா) ஸாபியீன்களாயினும் திண்ணமாக, அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்(து முழு முஸ்லிம்களாகத் திகழ்)கிறவர்களின் கூலி, அவர்களுடைய இறைவனிடம் குறைவற இருக்கிறது. அவர்களுக்கு அச்சமென்பதில்லை; அவர்கள் துயருற மாட்டார்கள்.= (அதிரை ஜமீல்)


நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும் ஸாபியீன்களும் அவர்களில் _எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ, அத்தகையவர்கள் அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும், அவர்களுக்கு (மறுமையைப்பற்றி எவ்விதப் பயமுமில்லை); இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள். - (அல்-மதீனா அல்-முனவ்வரா)


(முஹம்மத் அவர்கள் மீது) நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஸாபீகள் ஆகியோரில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிகிறார்களோ அவர்களுக்கு, அவர்களுடைய கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


ஈமான்கொண்டவர்களாயினும்யூதர்களாயினும்கிறிஸ்தவர்களாயினும்ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும்இறுதிநாள் மீதும் நம்பிக்கைகொண்டு ஸாலிஹான (நல்லஅமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறதுமேலும்அவர்களுக்கு யாதொருபயமும் இல்லைஅவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள் -  (ஜான் டிரஸ்ட், K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.-( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.