2:57. மன்னையும் ஸல்வாவையும் - மன்னும், ஸல்வாவும்- மன்னு, ஸல்வா எது சரி?

'அலைக்கும்" என்பது ஒவ்வொரு நாளும் நாம் ஸலாம் சொல்லும்போது அடிக்கடி உபயோகிக்கும்  வார்த்தை.  எல்லாருக்கும் தெரிந்த அந்த வார்த்தை இதில் (2:57ல்) இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது.

"அலைஹிம்"  என்பதற்கு  அவர்கள் மீது என்றும்  'அலைக்கும்"   என்பதற்கு  உங்கள் மீது  என்றும் எல்லாரும்  விளங்கி வைத்துள்ளோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/08/257.html

அந்த அடிப்படையில் தான் 2:6 , 2:20  2:38 வசனங்களில் வந்துள்ள  "அலைஹிம்"  என்பதற்கும்   2:40. 2:47 2:57. வசனங்களில் வந்துள்ள  'அலைக்கும்"   என்பதற்கும்  மொழி பெயர்த்து உள்ளார்கள்.



ஆனால் 2:54.ல் வந்துள்ள 'Fபதாப  அலைக்கும்" என்பதற்கு உங்கள் மீது  மன்னித்தான் என்று யாரும் மொழி பெயர்க்கவில்லை. அப்படி மொழி பெயர்த்தால் தமிழ் நடையில் கொச்சையாக, விகாரமாக இருக்கும். ஆகவே உங்களை மன்னித்தான் என்ற அழகிய தமிழில் மொழி பெயர்த்து உள்ளார்கள்.

இது போன்றவற்றை அரைகுறைகள்  விமர்சிப்பார்கள். அறிவுள்ளவர்கள் சிறந்த  மொழி  நடை  என்று புரிந்து கொள்வார்கள்.
و   
வாவு   இடத்துக்கு தக்கவாறு பல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும். ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைபெயர்களை இணைக்கக் கூடிய இடங்களில்  ம் என்ற பொருள் தரும்.  இதற்கு உம்மைப் பொருள் என்பார்கள். அவனும் அவளும் அதுவும் இதுவும் என்கிற மாதிரி வருவது உம்மைப் பொருள் ஆகும்இதை விளங்கி இருக்கிறோம்.

الْمَنَّ وَالسَّلْوَىٰ

மன்ன ஸ்ஸல்வா இதில் மன்ன, ஸல்வா என்ற இந்த இரண்டு பெயர்களை இணைக்கக் கூடிய ”ம்” என்ற பொருள் தரும்.  உம்மைப் பொருள் வாவு இடம் பெற்றுள்ளது. 

ஆகவே இலக்கண விதிப்படி ம்”மை சோ்த்து  மன்னையும் ஸல்வாவையும் அல்லது  மன்னும், ஸல்வாவும் என்றே மொழி பெயர்த்து இருக்க வேண்டும். யாரும் அப்படி மொழி பெயர்க்கவில்லை. 

அப்படி மொழி பெயர்த்தால் தமிழ் நடையில் மன்னும், மன்னையும் என்பது தவறான பொருள் தந்து விடும். மூன்று சுழி ”ண்” தான் மண்ணைக் குறிக்கும் என்றாலும் கவனமில்லாத உச்சரிப்பு, செவி சாய்ப்பு தவறான கருத்து  தந்து விடும். அதனால் இலக்கண சட்டத்துக்கு அப்பால் நின்று மன்னு, ஸல்வா என்று மொழி பெயர்த்து உள்ளார்கள். 

இது போன்றுதான் மற்ற இடங்களிலும் ஆய்வில் சிறந்த அறிஞர்கள் மொழி பெயர்த்து உள்ளார்கள். இதை அறியாத அரைகுறைகள் தங்களை மேதாவிகள் என்று எண்ணிக் கொண்டு  விமர்சித்துத் திரிகிறார்கள். அறிவுள்ளவர்கள் அழகிய மொழி  நடை  என்று  புரிந்து  கொள்வார்கள்.  

இலக்கண சட்டங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். குர்ஆன் ஹதீஸுக்கு பின்னால் வகுக்கப்பட்டவைதான். ஆகவே  இலக்கண  விதிகளை குர்ஆன் ஹதீஸ் கொள்கைக்கு உட்பட்டே பேண வேண்டும். குர்ஆன் ஹதீஸுடன் மோதக் கூடிய, குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான இலக்கண  விதிகளை புறந் தள்ள வேண்டும்.

இனி 2:57. வார்த்தைக்கு வார்த்தை


وَظَلَّلْنَا- வழல்லல்னா
நிழலிடச் செய்தோம் - நிழலிடும்படிச் செய்தோம் (இரண்டும் ஒரே பொருள் தான். நிழலிடும்படிச் செய்தோம் என்பதை விட நிழலிடச் செய்தோம் என்பது சுருக்கமானது எளிய தமிழ். நடைமுறையில் உள்ள தமிழ்) 

عَلَيْكُمُ -  ஃஅலைக்குமு 
உங்கள் மீது 

الْغَمَامَ - அல்ஃகமாம  
மேகம்

وَأَنزَلْنَا - வஅன்Zஸல்னா
இறக்கிவைத்தோம்

عَلَيْكُمُ  ஃஅலைக்குமு 
உங்களுக்கு - உங்களுக்காக, 

الْمَنَّ وَالسَّلْوَىٰ அல் மன்ன வஸ்ஸல்வா 
மன்னுஸல்வா  (என்னும்  உணவுகள்)

كُلُوا குலுா
உண்ணுங்கள்புசியுங்கள்

مِن طَيِّبَاتِ -  மின் தையிபாதி
தூய்மையானவற்றிலிருந்து - பரிசுத்தமானவற்றிலிருந்து

مَا رَزَقْنَا -  மாரZஸஃக்னா 
நாம் அருளியவை - வழங்கியவை

كُمْ - கும் 
உங்களுக்கு

وَمَا ظَلَمُو வமா ழலமூ 
அவர்கள் தீங்கு செய்யவில்லை

نَا நா
நமக்கு

وَمَا ظَلَمُونَا -வமா ழலமூனா 
அவர்கள் நமக்குத் தீங்கு செய்யவில்லை - அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. 

وَلَٰكِن வலாகின் 
எனினும் - ஆனாலும் -மாறாக 

كَانُوا கானுா 
ஆகிவிட்டார்கள் - இருந்தனர் - இருந்தார்கள்

أَنفُسَهُمْ - அன்புஸஹும் 
தமக்குத் தாமே- தங்களுக்கே 

يَظْلِمُونَ யழ்லிமூன
தீங்கிழைப்பார்கள் - அநியாயம் செய்வார்கள்

وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ


வழல்லல்னா ஃஅலைக்குமுல்ஃகமாம   வஅன்Zஸல்னா ஃஅலைக்குமுல் மன்ன வஸ்ஸல்வா குலுா மின் தையிபாதி மாரZஸஃக்னாகும் வமா ழலமூநா வலாகின் கானுா அன்புஸஹும் யழ்லிமூ(ன)ன்.


மொழிப்பெயர்ப்புகள் :


உங்கள் (முன்னோர்) மீது மேகம் நிழலிடச் செய்தோம். மேலும் "மன்னு, ஸல்வா" (என்னும் மேன்மையான உணவுகளை) இறக்கி வைத்து, "நாம் உங்களுக்கு அருளியுள்ள இத்தூய்மையானவற்றை உண்ணுங்கள்" என்றோம். (இவ்வளவு சிறப்பளித்தும்) அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டது தமக்குத் தாமேயன்றி நமக்கன்று. - (அதிரை ஜமீல்)


உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மன்னு, ஸல்வா442 (எனும் உண)வை உங்களுக்கு இறக்கினோம். "நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்!'' (என்று கூறினோம்). அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.-(PJதொண்டி)

இன்னும்உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம்மேலும் மன்னுஸல்வா” (என்னும்  உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லைமாறாகதமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.- (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் “மன்னு, ஸல்வா” (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, “நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்” (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். - ஜான் டிரஸ்ட்

அன்றி நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, (உங்களுக்கு உணவாக) "மன்னு ஸல்வா" (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) "நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவைகளைப் புசித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம்முடைய கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர்.  -ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்

மேலும் நாம் உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். உங்களுக்கு மன்னுஸல்வா (எனும் உணவுகளை) இறக்கி வைத்தோம். நாம் உங்களுக்கு உணவாக அருளியுள்ள நல்ல பொருள்களைப் புசியுங்கள்(என்றும் உங்களிடம் கூறினோம்). எனினும் (உங்கள் மூதாதையர் வரம்பு மீறினார்கள்; அதன் மூலம்) அவர்கள் எமக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டனர். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)


இன்னும் உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். மேலும் உங்களுக்காக “மன்னு, ஸல்வா” எனும் மேலான உணவை வானத்திலிருந்து இறக்கி வைத்தோம். நாம் அருளியுள்ள நல்லவற்றிலிருந்து புசியுங்கள் (என்றோம். அதல்லாத மற்ற உணவைக் கேட்டதனால்) நமக்கு அவர்கள் அநியாயம் செய்து விடவில்லை; எனினும் தமக்குத்தாமே அவர்கள் அநியாயம் செய்துக்கொண்டிருந்தனர்.(1) - (அல்-மதீனா அல்-முனவ்வரா)



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.