முஸ்லிம் சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவது இல்லை என்பது உண்மையா?



DMK, ADMK முஸ்லிம்களிடம் என்ன கேட்கிறோம்? அண்ணா பிறந்த நாள் போன்ற பொது .மன்னிப்பில் விடுதலையாகும் சிறைவாசிகளில் முஸ்லிம் சிறைவாசிகள் பெயர் ஒன்று கூட இல்லை என்பது உண்மை இல்லை. கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளான முஸ்லிம் சிறைவாசிகள் கருணை அடிப்படையிலான பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தி.மு.க, அ.தி.மு.க, முஸ்லிம்கள் பதில் அளித்துள்ளார்கள்.

அவர்கள் நமது பதிவை நன்றாக கவனித்து படிக்கவில்லை என்று தெரிகிறது. கோவை போன்ற வழக்குகளில் உள்ள முஸ்லிம்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்கள் என்றுதான் எழுதி உள்ளோம். கொலை வழக்கு என்பது வேறு கோவை போன்ற வழக்குகள் என்பது வேறு. புரிந்து கொண்டு தி.மு.க, அ.தி.மு.க,  முஸ்லிம்கள் உங்கள் தலைமையில் கேள்வி கேட்டு பதில் தாருங்கள்.



சிலர் அருமையான பதிவு, நல்ல பதிவு என்று பதில் அனுப்பி உள்ளார்கள். கூட்டமைப்பில் உள்ள  இயக்க தலைமைகள் சிறைவாசிகளின் விடுதலைக்காக போட்ட மாநாட்டு தீர்மானங்கள் அதிமுக திமுக தலைமைகளிடம் உள்ளதே இதைவிட என்ன செய்ய முடியும்??? என்கின்ற மாதிரியும் கேள்விகள் கேட்டுள்ளனர்.


06.09.2019 தேதிய மேலப்பாளையம் சிறைவாசிகள் சந்திப்புகளில். தி.மு.. ஆட்சி வந்து விட்டால் முஸ்லிம் சிறைவாசிகளுக்க விடுதலை கிடைத்து விடும் என்று சிறைவாசிகளும் குணங்குடி ஹனீபா அத்தா அவர்களும் மற்றும் பலரும் நம்பிக்கை தெரிவித்தார்கள். உடனே நாம் 2006 முதல் 2011 வரை யாருடைய ஆட்சி இருந்தது? என்று கேட்டோம்.


2006 2011  முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை .மு.மு.. தலைவர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் .மு.மு.. தலைமையினர் பல முறை சந்தித்தார்கள். அதில்  .மு.மு.. நிறுவனர் அத்தா குணங்குடி ஹனீபா அவர்கள் விடுதலை விஷயமாக பேசாதா சந்திப்பே கிடையாது


குணங்குடி ஹனீபா  விடுதலை விஷயமாக பேச ஆரம்பித்ததும் டாக்டர் கலைஞர் அவர்கள் வெற்றி, விடுதலை என்று சப்தமிடுவார். வெற்றி, விடுதலை என்ற பெயருடைய வழக்கறிஞர்களை சப்பதமிட்டு கூப்பிடுவார்.


இந்த மாதிரி .மு.மு.. தலைமையினர் முதல்வரை சந்தித்து விட்டு வரும்பொழுதெல்லாம் .மு.மு.. முன்னாள் பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு போன் போட்டு கேட்பேன். என்ன கேட்பேன்


பாளைத் தொகுதிக்கு பதிலாக வக்பு வாரியம் வாங்கித் தருவதாக பல முறை சொன்னீர்களே. இப்படி சொல்லி விட்டு நீங்களே வக்ஃபு வாரிய தலைவராக ஆகி விட்டீர்களே நியாயம்தானா? என்றா? கேட்டேன். குணங்குடி ஹனீபா  விடுதலை விஷயம் என்ன ஆயிற்று என்றுதான் கேட்பேன்.


.மு.மு.. தலைமையினர் குணங்குடி ஹனீபாவுக்கு வழக்கிலிருந்து விடுதலை என்றெல்லாம் வேண்டாம். நாங்கள் ஜாமீன் கேட்டு மனு போடுகிறோம். அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும் என்ற மிகக் குறைந்த பட்ச கோரிக்கையையும் வைத்துப் பார்த்தார்கள்

அதைக் கூட அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் நிறைவேற்றிக் கொடுக்க முடிந்ததில்லையே ஏன்? கடைசியில் குணங்குடி ஹனீபா மீதான 120 பி உடைக்கப்பட்டது. அதனால் கோர்ட் மூலம் அனைவரும் வழக்கிலிருந்து விடுதலையானார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.


அதே மாதிரி, முதல்வர்களிலேயே ஆளுமைமிக்க முதல்வர் என்று பெயர் பெற்ற ஜெயலலிதா அவர்களும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். அந்த ஆளுமைமிக்க முதல்வர் ஜெயலலிதா அவர்களாலேயே விடுதலை செய்ய  முடிந்ததில்லையே ஏன்?.


பீ.ஜேபி. தலைவர்களை, K.T.ராகவன் போன்றவர்களை தங்கள் சுயநலத்துக்காக  கள்ளத்தனமாக சந்திந்தவர்கள் சந்திந்துக் கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்

யார் குத்தியும் அரிசியானால் சரி என்ற அடிப்படையில். முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்காக பீ.ஜே.பி. தலைவர்களை பகிரங்கமாக சந்தித்து கோரிக்கை வைத்த நல்லவர்கள் இருக்கிறார்கள்.


எல்லாரையும் விடுதலை செய்யுங்கள் என்று கேட்காமல். சம்பந்தமில்லாத அப்பாவிகளை விடுதலை செய்யுங்கள். திண்ணையில் படுத்து கிடந்தவர்கள் கடைக்கு காய்கறி வாங்கப் போனவர்கள் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பிய நிலையில் பிடிக்கப்பட்டவர்கள் என 20 வருஷமாக சிறையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என்று வலியுறுத்தினார்கள் இன்று வரை நடக்கவில்லை.


நான் கூட மேலப்பாளையம் தடா புகாரி விடுதலை விஷயமாக பி.ஜே.பி. மத்திய தலைவர்களிடம் பேசும்படி கோரிக்கை வைத்தேன். கிட்னி பாதிக்கப்பட்ட  திண்டுக்கல் மீரான் விடுதலை விஷயமாக பேசி உள்ளதாகவும் திண்டுக்கல் மீரான் விடுதலைக்கு பிறகு பார்ப்போம் என்றார்கள். அதுவும் முடியவில்லை.


முஸ்லிம்களின் நண்பர் எனப்படும் கருணாநிதியால் முஸ்லிம்களை விடுதலை செய்ய முடியவில்லை. இரும்பு மனுஷி ஜெயலலிதாவால் விடுதலை செய்ய முடியவில்லை. பி.ஜே.பி.யாலும் முடியவில்லையே ஏன்? இதைத்தான் ஆட்சியில் இருந்த தி.மு.க, ஆட்சியில் இருக்கின்ற அ.தி.மு.க, முஸ்லிம்களிடம் கேட்கிறோம். உங்கள் தலைமையை கேட்டு பதில் சொல்லுங்கள் என்று.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.