மொட்டை மாடியில் வெடி ரயில்வே ஸ்டேஷனில் பிடி என்று மேலப்பாளையம் ஆனதற்கு காரணம் என்ன?


கவ்மின் காவலர்கள் என்போர் கவனிப்பார்களா? குழந்தைகளுக்காக மனம் இறங்கி விட்டுக் கொடுப்பார்களா? 

நள்ளிரவு வெடியும் தர்ம அடியும்.

சில நாட்களுக்கு முன் மேலப்பாளையம் பங்களாப்பா நகரில் உள்ள ஒரு தெருவில் நடுநிசியில் எல்லாரும் நன்றாக துாங்கிக் கொண்டிருக்கும் போது திடீர் வெடி சத்தம் கேட்டது. 

சத்தம் வந்த திசை நோக்கி ஓடினார்கள். வெடி வெடித்த வீட்டு வாசலில் கூட்டம் கூடியது. எந்த வீட்டு  வாசலில் வெடி வெடித்து கிடந்ததோ அந்த வீட்டு பையனுக்கு ஆளாளுக்கு தர்ம அடி கொடுத்தார்கள். நான் வெடிக்கவில்லை என்று எவ்வளவோ கெஞ்சி கூறியும் அவனை விடவில்லை. https://mdfazlulilahi.blogspot.com/2019/09/blog-post_16.html

உன் வீட்டு பக்கம் இருந்து வந்த சத்தத்தை காதால் கேட்டோம். உன் வீட்டு வாசலில் வெடி வெடித்ததை கண்ணால் கண்ட சாட்சிகள் உள்ளார்கள். உன் வீட்டு வாசலில் சிதறி கிடக்கும் பட்டாசு பேப்பர்கள் ஆதாரங்களாக உள்ளன. இதைவிட என்ன ஆதாரம் வேண்டும் என்று தர்ம அடி குரூப் வழங்கிய அடிக்கும் தர்மத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து அடி வழங்கியது.


நாங்களும் வெடி சத்தம் கேட்டுத்தான் வெளியில் வந்தோம். எங்க வீட்டு வாசலில் வெடி வெடித்ததை பார்த்தவர்கள் என் பையன்தான் வெடித்தான் என்று பார்த்தார்களா? அதற்கு சாட்சிகள் உண்டா? என்று கேட்ட அவரது தாயையும் விட்டு வைக்கவில்லை. அந்த அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆகி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு த.மு.மு.க. ஆம்லன்ஸில் கொண்டு போகும் அளவில்  தர்ம அடி கொடுத்துள்ளார்கள்.


இவ்வளவு சம்பவங்களுக்குப் பிறகுதான்  எந்த வீட்டு  வாசலில் வெடி வெடித்து கிடந்ததோ அந்த வீட்டு பையன் வெடி வெடிக்கவில்லை. 2 தெருவுக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியிலிருந்து  வான வெடி போட்டுள்ளார்கள். அது பறந்து அடிவாங்கியவர்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்து வெடித்துள்ளது.

தீர விசாரிக்காமல், காதால் கேட்ட ஆதாரம் உள்ளது, கண்ணால் கண்ட ஆதாரங்கள் உள்ளன என்றவர்கள் கூற்று  பொய் என்றானது. பெண் என்றும் பாராமல் ஹார்ட் அட்டாக் ஆகும் அளவுக்கு அடித்த அடியை திரும்ப எடுக்க முடியுமா? கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய் என்பது இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொட்டை மாடியில் வெடியை படித்து விட்டீர்கள். இனி ரயில்வே ஸ்டேஷனில் பிடியை படியுங்கள்.

15.09.2019 அன்று மாலை மேலப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் சிறு பையன்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே ஆட்டோவைக் கொண்டு வந்து நிறுத்திய வாட்டசாட்டமானவர்கள் 10 பையன்களை ஆட்டோவில் ஏறுங்கள். இல்லை அடி விழும் என்று மிரட்டி இருக்கிறார்கள். 

பயந்த 10 ஸ்கூல் பையன்களும்  ஆட்டோவில் ஏற ஆட்டோ பறந்து விட்டது. பிள்ளை பிடிப்பவர்கள்தான் பிடித்து செல்கிறார்கள் என்ற பீதியில் பிடிபட்ட மாணவர்கள் இருந்துள்ளார்கள்.

பிறகு ஒவ்வொரு பையன்கள் வீடுகளுக்கும் போன் வந்துள்ளது. திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் பையன் இருப்பதாகவும் பெற்றோர் வாருங்கள் என்று. 

ஒவ்வொரு பெற்றோரும் என்னவோ ஏதோ என்று பதறி உள்ளார்கள். நம்ம பிள்ளையை போலீஸ் பிடித்து விட்டான் என்று அக்கம் பக்கத்துக்கு தெரிந்தால் வெட்கம் என்று. அக்கம் பக்கத்துக்கு தெரியாமல் சொல்லாமல் கொள்ளாமல் அலறி அடித்து திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே போலீஸீக்கு போய் உள்ளார்கள்.

ரொம்ப நேரம் காத்துக் கிடந்தும் விடவில்லை. இன்ஸ்பெக்டர் வந்துதான் விட்டாலும் விடுவார். விடாமலும் இருக்கலாம்.  இன்ஸ்பெக்டர் வர இரவு 9 மணி கூட ஆகலாம் என்று சொன்ன பிறகுதான் ஒரு பையனின் தரப்பில் இருந்து போன் வந்தது. 

உடனே த.மு.மு.க, ம.ம.க.வினருக்கு போன் பண்ணி சொன்னேன். அவர்கள் நொடிப்பொழுதில் மேலப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் சென்றார்கள்.

அதற்குள் இன்ஸ்பெக்டர் வந்து விட்டு விட்டார் என்று தகவல் வந்தது. ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்தும் சிக்கனல் வேலை செய்யாத  வண்ணமும் வேலை செய்யும் சமூக விரோத கும்பலை பிடிக்க வந்த மப்டி ரயில்வே போலீஸ்தான் இவர்களை பிடித்து உள்ளது. 

மேலப்பாளையம்  ரயில்வே ஸ்டேஷன் வள்ளியூர் ரயில்வே போலீஸ் சரகத்தையும் திருவனந்தபுரம் கோட்டத்தையும் சார்ந்தது.

திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே மதுரை கோட்டத்தை சார்ந்தது. அதிகாரிகளும் இன்ஸ்பெக்டரும் நல்லவர்களாக இருந்ததால் விட்டு விட்டார்கள். வழக்கு என்று வந்து விட்டால் மதுரை அல்லது திருவனந்தபுரம் என்று அழைய வேண்டியது இருக்கும். இதை பிள்ளைகளின் பெற்றோர் கவனத்தில் கொள்ளவும்.

பையன்மார் தவறு செய்யும் போது தாயன்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டோ திட்டு என திட்டி சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஆகவே பெற்றோர் பிள்ளைகளை திட்டி வளர்க்காதீர்கள் தட்டி வளருங்கள்.

மொட்டை மாடியில் வெடி ரயில்வே ஸ்டேஷனில் பிடி என்று மேலப்பாளையம் ஆனதற்கு காரணம் சமுதாய பெரியவர்கள் தான். மேலப்பாளையத்தில் பல தெருக்களின் முனைகளில் மேடைகள் உள்ளன.  
பெரும்பாலான தெருக்களில் பிள்ளைகள் விளையாடுவதற்கு வசதியாக  மேடையை குழந்தைகள் விளையாட்ரங்கமாக ஆக்கி கொடுத்துள்ளார்கள். அதற்கு T.P.M மைதீன் கான் M.L.A.  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உதவி உள்ளார்.

பெரும்பாலான மேடையை வயதானவர்கள் ஊர்ப் பலாய் கழுவ ஆக்கிரமித்து குழந்தைகள் விளையாட்ரங்கம் அமைக்க தடையாக உள்ளார்கள். பி.ஜே.பி. வந்து விடும் என்று ஓட்டு கேட்ட மாதிரி. விளையாட்ரங்கம் அமைத்தால் அந்நியர்கள் சிலைகளை கொண்டு வந்து வைத்து இடத்தை ஆக்கிரமித்து விடுவார்கள். ஆகவே அவுலியா கொடி வைத்து காப்பாற்றி வருகிறோம் என்றார்கள். 

கடைசியில் மேடையை தரையோடு தரையாக்கி கவ்மின் காவலர்கள்(?) கார்களை நிறுத்தும் இடங்களாக ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். இவர்களா கவ்மின் காவலர்கள்?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.