கணக்கில் இல்லாமால் காட்டிக் கொடுப்பவர்களைக் கொண்ட சமுதாயம் எது?


முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையாகாவண்ணம் சட்டம் கொண்டு வந்தது யார்?

காட்டிக் கொடுத்த அவனை நாசமாக்கு என்று யாரோ ஒரு ஆளுக்கு எதிராக மட்டும் துஆச் செய்யச் சொன்னவர்கள் துஆச் செய்தவர்கள் ஆலிம்கள் உட்பட பலர் உள்ளனர். அவர்களில் யாருமே காசுக்காக காட்டிக் கொடுத்த கயவர்கள் அனைவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் பிடி இருகட்டுமாக!


பணப் பேரம் பேசி அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சம்பந்தமில்லாத பொய் வழக்குகளில் மாட்டிக் விடுவதையே தொழிலாக ஆக்கிக் கொண்ட ஒவ்வொருவன் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! என்ற துஆவுக்கு இவர்கள் யாராவது ஆமீன் சொன்னார்களா

தங்களை போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் தங்களை போராளிகளாக காட்டிக் கொள்பவர்களும்  தான் துஆக் கேட்டார்களா? ஆமீன் சொன்னார்களா? இதைத்தான் சமுதாய நலனில் அக்கறையுள்ள நல்லவர்கள் சிந்திக்க வேண்டும். 
https://mdfazlulilahi.blogspot.com/2019/09/blog-post_29.html

டீன் ஏஜ்வாலிபம் - இளமை என்பது நீருள்ள களி மண்ணுக்கு சமமானது. ஈரமான களி மண்ணில் என்ன விதை போட்டாலும் விளையும். அதுதான் டீன் ஏஜ் இளைஞர்கள் நிலை. நான் 1980 - 1998ஐ சொல்லவில்லை. 2005 - 2019 என்ற கால கட்டத்தையே சொல்கிறேன்.


இன்றைக்கும் இளைஞர்களின் உணர்ச்சிகளை துாண்டி விட்டுப் பேசி அவர்களை சிறைவாசிகாளாக ஆக்கி விட்ட தொண்டைச் தொழிலாளிகள் நிறைய உள்ளார்கள். அவர்களைப் பற்றி பல தவ்ஹீது பள்ளி நிர்வாகிகளுக்கு எச்சரித்து இருக்கிறேன்.


அந்த தொண்டை தொழிலாளிகள் திருந்த வேண்டும். இல்லை எனில் யா அல்லாஹ் உன் பிடி இவர்கள் மீது இருகட்டுமாக என்று சமுதாய நலனில் அக்கறையுள்ள நல்ல மனிதர்கள் நிச்சயமாக துஆ கேட்பார்கள். அந்த துஆவை அல்லாஹ் கபூல் செய்து இன்றைய இளைஞர்கள் வாழ்வை பாழாக்குபவர்கள் வாழ்வை பாழாக்குவானாக ஆமீன்.


ஹை கோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவு போட்ட பின்பும் விடுதலை ஆவதில்லையே ஏன், அரசாங்கம் விடுதலை செய்வதில்லையே ஏன்? முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலைக்கு தடையாக இருப்பது எது? 


பண்டமன்டலிஸ்ட்ல் - அடிப்படை வாதத்தில் கைதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு கிடையாது. குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முஸ்லிம் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் பொது மன்னிப்புக்கு தகுதியற்றவர்கள். என்று தலைமைச் செயலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்கள்.


இது அரசின் தனிப்பட்ட கொள்கை முடிவு என்று  அந்த கொள்கை முடிவு G.O.வாகஅரசாணையாக கெஜட்டில் இருக்கிறது. அண்ணா, M.G.R பிறந்த நாள் போன்ற எந்த பொது .மன்னிப்பிலும் கருணை அடிப்படையில் விடுதலை ஆகாததற்கு இதுதான் காரணம். அந்த G.O.வைஅரசாணையை ரத்து செய்தால் தான் குண்டு வெடிப்பு வழக்கு முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய முடியும்.


இப்பொழுது ஆட்சியில் உள்ள முதல்வர் துணை முதல்வர்களிலிருந்து அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்தால் கண்டிப்பாக செய்கிறோம் என்று உளமாற சொல்வார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

பிறகு அவர்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளைக் கூப்பிட்டு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக சொல்வார்கள். அதிகாரிகள் இந்த மாதிரி ஒரு G.O. – அரசாணை இருக்கிறது என்ற உடன் இவர்கள் பேசாமல் இருந்து விடுவார்கள்.

இரும்பு மனுஷி ஜெயலலிதாவும் விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்து விட்டு விடுதலை செய்யாமல் போனதற்கு இந்த G.O. தான் காரணம்.

சிறைவாசிகளை விடுதலை செய்யச் சொல்லி போராடக் கூடிய கோவை CTM போன்ற சிறைவாசிகளின் அமைப்புகளாக இருக்கட்டும் மற்ற கட்சிகள் நடத்தும் போராட்டங்களாகட்டும் யாருக்கு எதிராக எதிராக நடத்தப்படும்

அரசுக்கு - ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் நடத்தப்படும். அதை ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டமாகத்தான் ஆளுங்கட்சியினர் பார்ப்பார்கள்.

போராட்டங்கள் எப்படி இருக்க வேண்டும். விடுதலை செய் என்று போராட்டம் பண்ணக் கூடாது. விடுதலைக்கு தடையாக இருக்கின்ற காரணிகளை சட்டத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டி அந்த G.O.வைஅரசாணையை ரத்து செய்ய வேண்டும். என்று போராடி வெற்றி பெற வேண்டும்.

சட்டமன்றத்தைக் கூட்டி இந்த ஆணை ரத்து செய்யப்படுகிறது. இந்த கைதிகள் மற்ற கைதிகள் போல் நடத்தப்படுவார்கள். மற்றவர்கள் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படுவது போல் இவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். 

இப்படி புதிய G.O.வைஅரசாணையை போட வேண்டும். இதற்கு மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். அதாவது முதல்வர் எடப்பாடி நினைத்தால் மட்டும் போதாது. எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.  ஸ்டாலின் அவர்களும் மனது வைக்க வேண்டும்.

எல்லாரும் சேர்ந்து புதிய G.O.வை போட்டு விட்டார்கள் என்றால் பிரச்சனை முடிந்து விடும். அந்த G.O. – அரசாணை நீக்கப்பட்டு விட்டால் இவர்கள் விடுதலை அரசு ரீதியானது மட்டும் எளிதாகி விடும். மற்ற போராட்டங்கள் எதுவுமே தேவை இல்லை.  

முஸ்லிம் கைதிகள் விடுதலைக்கு தடையாக உள்ள அரசாணை யாருடை ஆட்சியில் போடப்பட்டது? அதையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.  டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் தான் போடப்பட்டது

1998 ஜனவரி 29 அன்று இப்தார் நிகழ்ச்சியில் கலந்து. நோன்பு கஞ்சி குடித்து விட்டு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருப்போம் என்று எந்தக் கலைஞர் கருணாநிதி பேசினாரோ அவரது ஆட்சியில்தான், அதே 1998ல்தான் இந்த கொள்கை முடிவு G.O.வாக அரசாணையாக போடப்பட்டது.


கலைஞர் கருணாநிதியை - தி.மு.க.வை குறை சொல்வதற்காக இதை சுட்டிக் காட்டுவதாக எண்ணி விடக் கூடாது. இது போன்ற விஷயத்தில்  கருணாநிதியை தி.மு.க.வை குறை சொல்ல முடியாது என்று கோவை பாஸித் முன்பு எழுதியதை நினைவூட்டி வழி மொழிந்துக் கொள்கிறேன்.


தி.மு.க.வின் 2006-2011 ஆட்சியில் அதே கலைஞரைக் கொண்டு அந்த தடையை G.O.வை நீக்க அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் பாடுபட்டார்கள். சமுதாய விரோதிகளின் செயல்பாடுகள். அதற்கு தடை இருந்தன. யாருடை செயல்பாடுகள் எல்லாம் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கு தடையாக இருந்ததோ அவர்களுக்கு எதிராக சமுதாய நலனில் அக்கரை உள்ளவர்கள் இருகரமேந்துவீர்களா?.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.