முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் - தி.மு.கவும் அ.இ.அ.தி.மு.கவும்

தி.மு.க, அ...தி.மு.க முஸ்லிம்களே உங்கள் தலைமையை கேட்டு பதில் தருவீர்களா?

நாட்டில் முக்கியமான தலைவர்களின் பிறந்த நாட்களிலும் முக்கியமான விசேஷமான நாட்களிலும் சிறைகளில் இருப்பவர்களை கருணை அடிப்படையில் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்கிறார்கள். முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுது இல்லை.


ஒவ்வொரு வருமும் செப்டம்பர் மாதம் வந்துவிட்டாலே,  ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்காக முஸ்லிம்களின் கோரிக்கைகள் ஓங்கி ஒலிக்கும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டங்களை அறிவிக்கும். விசாரணை கைதிகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை போல் பேசுவார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/09/blog-post_71.html


அதுபோல்தான் இந்த ஆண்டும் 2019 செப்டம்பர் 15 ஞாயிறன்று அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட இருக்கும் ஆணையை எதிர்பார்த்து முஸ்லிம் சிறைவாசிகள் குடும்பங்கள் காத்துக் கிடக்கின்றன.


தி.மு.க. ஆட்சியில் கலைஞர் அவர்கள் 2009 ம் ஆண்டு 10 ஆயுள் தண்டனை கைதிகளையும் 2010 ம் ஆண்டு 13 ஆயுள் தண்டனை கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய்தார்.  இவர்களில் அன்றைய நிலையில் 15, 16 ஆண்டுகளைத் தாண்டிய கோவை, மேலப்பாளையம் வழக்கு முஸ்லிம்கள் யாரும் விடுதலை செய்யப்பட்டவில்லை.

அ.தி.மு.க  ஆட்சியில் புரட்சித் தலைவி என்றழைக்கப்பட்ட  முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 1992 ஆம் ஆண்டு 230 ஆயுள் தண்டனை கைதிகளும் 1993ல் 132 ஆயுள் தண்டனை கைதிகளும் விடுதலை செய்யப்பட்னர். 

அந்த விடுதலைப் பட்டியலில் முஸ்லிம்களும் இருந்தார்கள். வ்வளவு பேருக்கு பொது மன்னிப்பா என்று  அன்று 230ஐயும் 132ஐயும் பத்திரிக்கைகளில் பெரிதாக எழுதினார்கள். பொதுக் கூட்டங்களிலும் பேசினார்கள். தனியார் T.V.சேனல்கள் இல்லாததால் விவாதங்கள் அவ்வளவு பெரிதாக ஆகவில்லை.


230ஐயும் 132ஐயும்  முறியடித்து 1400க்கும் மேற்பட்டவர்களை 2008 தி.மு.க. ஆட்சியில் முஸ்லிம்களின் நண்பர் கருணாநிதி விடுதலை செய்து மெகா சாதனை படைத்தார். அதிலும் கோவை வழக்கு முஸ்லிம்கள் யாரும் விடுதலை செய்யப்பட்டவில்லை. 1400க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்ததன் நோக்கம் பின்னணி என்ன?


1997ம் ஆண்டு மதுரையில் பட்டப் பகலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெண் கவுன்சிலர் லீலாவதியை தி.மு.க.வினர் வெட்டிக் கொலை செய்தார்கள். இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட தி.மு.க.வினர் அனைவரையும் விடுதலை செய்யத்தான் 1400க்கும் மேற்பட்டவர்களை விடுதலை செய்து மெகா சாதனை படைத்தார் கருணாநிதி. தி.மு.க.வினரை விட முஸ்லிம்களுக்குத்தான் கருணாநிதி அதிக கடமைப்பட்டவர்.


ஆனால்ந்த மெகா சாதனை விடுதலையிலிலும் இந்த ஆண்டுடன்  25 ஆண்டுகளைத் தாண்டி சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைக் கைதிகளில் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை. துதான் ஒவ்வொரு தேர்தலிலும் 6 வது கடமையை முறையாக நிறைவேற்றி வரும் முஸ்லிம்களின் வேதனைக்குரிய விஷயமாகும்.


அக்கா கனிமொழி அக்கா என்று உயிரை விடும் ஸ்டாலினை தலைவராகக் கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் பதில் சொல்ல வேண்டுகிறேன். அதனால் என்னை தி.மு.க.வின் எதிரி என்று கூறி பிரச்சனையை திசை திருப்பி விடாதீர்கள்.


முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக அறிக்கை விட்ட TTV கூட்டணி தெஹ்லான் பாகவி ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை – எண்ணம் என் உள்ளத்தில் இருந்தது.  ஆனால் போனில் கேட்டவர்களிடம் த.மு.மு.க. ஆதரவு பெற்ற தயாநிதி மாறனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னவன் நான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


சுதந்திரத்திற்காக எவ்வளவோ தியாகங்கள் செய்து, ஆங்கிலேயர்களை விரட்டியடித்தது நம் முஸ்லிம் சமுதாயம். அது இன்று குற்றப் பின்னணியோடு வாழ்ந்து வருகிறது.

இந்திய தேசத் தந்தை  மகாத்மா என்றழைக்கப்பட்ட காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வை யாரும் மறந்துவிட முடியாது. இந்த பயங்கரவாத செயல்களை செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஆனாலும்,  இன்று முஸ்லிம்களுக்கு விடுதலை இல்லை.


அரசியலில்னித்தன்மையுடன் தன்னுடைய ஆளுமைத் தன்மையை பறை சாற்றி வந்த இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா என்று புகழப்பட்டவர் அன்னை இந்திரா  காந்தி. அவரைப் பெண் என்றும் பாராமல் சுட்டுப் பொசுக்கினார்கள். இந்த பயங்கரவாத செயலை செய்தவர்கள் முஸ்லிம்கள் இல்லை. ஆனாலும், இங்கு முஸ்லிம்களுக்கு நீதி இல்லை. விடுதலை இல்லை.


அன்னை இந்திரா காந்தியின் அருந்தவப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்துக் கொன்றார்கள். இந்த பயங்கரவாத செயலை செய்தவர்களின் விடுதலைக்கு குரல் கொடுத்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்கிறார்கள்.  இந்த பயங்கரவாத செயலை செய்ததிலும் முஸ்லிம்களுக்கு பங்கில்லை. 


இந்தியாவின் அரசியல் தலைவர்களையும், பிரதானமானவர்களையும் பிரபலமானவர்களையும் கொன்றொழித்தவர்கள் இன்று மதிக்கப்படுகிறார்கள். 

ந்த மாதிரி எந்தப் பெருந் தவறையும் செய்ததாக ஒரு சிறு துரும்பையும் எடுத்து போட்டு விட முடியாத முஸ்லிம் சமுதாயத்தவர் நிலை என்ன?   


முஸ்லிம்களுக்கு விடுதலை பற்றி தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறச் செய்ய முஸ்லிம்களின் நண்பன் என்று சொல்லப்பட்ட கட்சியினருக்கு மனம் இல்லை. மன வலிமை இல்லை.


இந்த நாட்டின் விடுதலைக்காக தன்னுயிரை நீத்து, பொருளாதாரத்தை அள்ளி வீசி சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த முஸ்லிம்களின் வாரிசுகள் நிலைமை இன்று சிறைக் கொட்டடிகளில் வாடிக்கொண்டிருக்கின்றது. 

அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்வதிலும் அரசு தன்னுடைய மனசாட்சியை திறக்க மறுக்கிறது. ஏன்? ன்? ன்?

தி.மு.க, அ...தி.மு.க முஸ்லிம்களே உங்கள் தலைமையை கேட்டு பதில் தருவீர்களா?

25 ஆண்டுகளைத் தாண்டி சிறையில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் குடும்ப பெண்களின் மனக் குமுறல்களுக்கு தி.மு.க, அ...தி.மு.க முஸ்லிம்கள் தீர்வைத் தருவார்களா?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.