பிஜேபி விஷயத்தில் இஸ்லாத்தின் நிலை என்ன? இதிலாவது ஒன்றுபட்ட ஒற்றுமையான கருத்து உள்ளதா?

ஆட்டோ டிரைவராக இருந்த குணங்குடி ஹனீபா அவர்களால் சுயநலமின்றி சமுதாய நல நோக்குடன் துாய உள்ளத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு த.மு.மு.. அதன் ஆதரவாளன் நாம். அதனால் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். பீ.ஜே.பியை கடுமையாக எதிர்க்கக் கூடிய  .மு.மு..வின் மமக போன்ற முஸ்லிம்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு எந்த கூட்டணியும் 2019ல் சீட் கொடுக்காது என்று 2017லேயே நண்பர்களிடம் சொல்லி விட்டவன் நான்.

*பேரா.அ.மார்க்ஸ்* அவர்களின் முகநூல் பதிவை ஏராளமானவர்கள் பார்வேடு செய்து உள்ளார்கள். அதில் RSS என்பதன் வீச்சை நாம் பா.ஜக வுடன் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. அது பா.ஜ.கவைத் தாண்டி 

பல அரசியல் கட்சிகளிலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவு வலுவாக மட்டுமல்ல, நுணுக்கமாகவும், அர்ப்பணிப்புடனும், தொலை நோக்குத் திட்டங்களுடன் செயல்படுகிறது. 

என்றுள்ள இதனை யாரும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இதைத்தான் 2017லேயே அறிந்து லீக் தவிர முஸ்லிம் அமைப்புகளுக்கு சீட்டு கிடைக்காது என்று சொன்னோம்.

மு.லீக்கைப் பொறுத்தவரை என்றுமே நளினமான போக்குதான். கடுமையாக விமர்சித்து எதிர்க்கக் கூடிய அமைப்பு அல்ல. அதனால் லீக்குக்கு என்றைக்கும் எங்கும் சீட்டு கிடைக்கும்.


முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளராக உள்ள LKS மீரான் மைதீன் அவர்கள். அவரை தாளாளராகக் கொண்ட முஸ்லிம் ஹை  (ஹையர் செகண்ட்ரி) ஸ்கூலுக்கு பீ.ஜே.பி.யில் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அவர்களை அழைத்து கவுரவித்தார்கள். அதை பலர் கடுமையாக விமர்சித்தார்கள். 

பீ.ஜே.பி. தலைவர்களை பகிரங்கமாக சந்தித்தவர்கள் முனாபிக்குகள் அல்ல. சமுதாய விரோதிகள் அல்ல. சொந்த அமைப்பில் உள்ள முஸ்லிம் சகோதரனை சிறையில் தள்ள பீ.ஜே.பி. தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேரம் பேசிய நாய்கள் தான் சமுதாய துரோகிகள் அவர்கள் மீதுதான் அல்லாஹ்வின் சாபம் இறங்க வேண்டும்.  இறங்கும் இன்ஷாஅல்லாஹ்


Saleemkaraikal 
ஓட்டு கேட்டு பள்ளிவாசலுக்கு வரும் பிஜேபி ஆதரவு கட்சிகளை அனுமதிப்பதா? விரட்டியடிப்பதா என்பது குறித்து இரு வேறு கருத்துகள் பதியப்பட்டு வருகிறது.

இது போன்ற சந்தர்ப்பத்தில் நபி(ஸல்) எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பதே நமக்கு வழிகாட்டுதல்.

மக்கத்து முஷ்ரிக்குகளுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே போடப்பட்ட ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை...

மக்கா முஷ்ரிக்குகளின் நேச கோத்திரமான பக்ர் கோத்திரத்தார், நபியவர்களின் நேசகோத்திரமான குஸாஅ கோத்திரத்தார் சிலரை கொலை செய்து ஒப்பந்தத்தை மீறி விட்டதால் நபி (ஸல்) கடும் கோபம் கொள்கிறார்கள்.

பதறிப்போன மக்கா முஷ்ரிக்குகளின் தலைவர் அபூ சுஃப்யான் நபியை சமாதானப்படுத்த மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிக்கு வருகிறார். 

நபி (ஸல்) அவர்கள் அவரை வரவேற்கவும் இல்லை, முகம் கொடுத்து பேசவுமில்லை. முகத்தை திருப்பிக் கொண்டார்கள். 

அருகிலிருந்த அபூபக்கரும் உமரும் அபூ சுஃப்யானை கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக அங்கிருந்து வெளியேற்றினார்கள். 

இந்த சம்பவம்தான் மக்கா வெற்றியின் அடித்தளமாக அமைந்தது.

பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசியை மன்னித்து மென்மையான போக்கை கடைபிடித்த நபி (ஸல்) அவர்கள்...

நம்ப வைத்து கழுத்தறுத்த துரோகிகளை பள்ளிக்கே வந்தாலும் அங்கே அவர்களிடம் நபியவர்கள் நல்லிணக்கம் பாராட்டிக் கொண்டிருக்கவில்லை.

எங்கே நல்லிணக்கம் காட்ட வேண்டுமோ அங்கே நல்லிணக்கம் காட்ட வேண்டும்.
எங்கே போர்க்குணம் காட்ட வேண்டுமோ அங்கே போர்க் குணம் காட்ட வேண்டும்.

இதுவே இஸ்லாத்தின் அணுகுமுறை.


செல்லூர் ராஜூவை துரத்தியது சரியா?வஹ்சியை நபி (ஸல்) அவர்கள் துரத்தினார்களா?
(இஸ்லாமிய இளைஞர்கள் படிக்க)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ஒரு சமூகத்தின் தலைவர் கட்டப்பட்டிருந்ததை பார்த்து, உடனே அவரின் கட்டை அவிழ்க்கச் சொல்லி அவருக்கு உரிய மரியாதை கொடுத்து பேசினார்கள். 

பள்ளிவாசல் மட்டுமல்ல, போர்களத்தைத் தவிர எந்த இடத்திலும் எதிரியைக் கூட மரியாதையாக நடத்த வேண்டும் என்பது தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்தது. 

நேற்று அண்ணன் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பதிவை சுட்டிக்காட்டி, நபி (ஸல்) அவர்கள் ஹம்சா (ரலி) அவர்களை கொன்ற வஹ்சியை முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று கூறினார்கள் என்று சொல்லி, ஜூனைத், அஹ்லாக் போன்றோரை கொன்றவர்களோடு கூட்டணி வைத்த அதிமுக வை விரட்டியது சரிதான் என்று பதிவு செய்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸில் வஹ்சியை பார்த்து நபி(ஸல்) அவர்கள் அப்படி கூறவே இல்லை. வஹ்சி விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படி நடந்தார்கள்?

இஸ்லாத்தை அறிந்து ஏற்றுக் கொள்ள விரும்பிய வஹ்சி, தனியாக சென்றால் நம்மை துரத்தி விடுவார்களோ என நினைத்துக் கொண்டு, தூதுக் குழுவை நபி (ஸல்) விரட்ட மாட்டார்கள் என நினைத்து, நபி (ஸல்) அவர்களை சந்திக்கச் சென்ற தூதுக்குழுவுடன் சேர்ந்து செல்கிறார் வஹ்சி.

கூட்டத்தில் வஹ்சியை பார்த்த நபி (ஸல்) அவர்கள், நீ வஹ்சி தானே, நீ தானே ஹம்சா வை கொன்றாய் எனக் கேட்டார்கள். நீங்கள் கேள்வி பட்டது உண்மை தான் என்கிறார் வஹ்சி. அப்போது நபி (ஸல்) அவர்கள் என் முகத்தில் முழிக்காதே என்று விரட்டவில்லை. 

"உன்னைப் காணும் போது எனக்கு ஹம்ஸா முகம் நினைவுக்கு வருகிறது. எனவே என்னை விட்டு உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா? என்று கூறுகிறார்கள். 

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். முடியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கோரிக்கையாக ஒரு வேண்டுகோளாக தான் வைத்தார்களே தவிர என் முகத்தில் விழிக்காதே என்று கட்டளை இடவில்லை.

அப்படி கட்டளை இட்டிருந்தால், இவர்களும் குறைசி போல தான் போல என்று வஹ்சி இஸ்லாத்தை ஏற்றிருக்க மாட்டார். நபி (ஸல்) அவர்களே துரத்தி விட்டிருந்தால், அவரது இறப்புக்கு பின்பு சகாபாக்களும் அவரை விரட்டியிருப்பார்கள். ஆனால் அப்படியா நடந்தது? எல்லா போர்களிலும் வஹ்சி கலந்து கொண்டார். தன்னை நபி என அறிவித்துக் கொண்ட முஸைலமாவை கொன்றதே இந்த வஹ்சி தான். 

இதிலிருந்தே வஹ்சி புறக்கணிக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். பின்பு ஏன் நபி(ஸல்) அவர்கள் வஹ்சியிடம் அப்படி கூறினார்கள்? ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது, குறைசிகள் தந்த குடைச்சலில் இருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாத்தவர் ஹம்சா (ரலி) அவர்கள். எனவே ஹம்சா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் நபி (ஸல்) அவர்கள். நபி என்பதை தாண்டி, ஒரு மனிதனுக்கு இருக்கும் பாச பிணைப்பினாலேயே நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அதுவும் எப்படி கூறினார்கள். ஹம்சா முகம் நினைவுக்கு வருவதால் தவிர்த்து கொள்கிறாயா என்று தான் கூறினார்கள். 

எனவே சில சகோதரர்கள் இந்த ஹதீஸை தவறாக பரப்புகிறார்கள். செல்லூர் ராஜூ வந்த போது, அவரிடம் நாம் எப்படி நடந்திருக்க வேண்டும்?

அவரை திட்டி துரத்தாமல், அம்மையார் பாஜகவை கடுமையாக எதிர்த்த காரணத்தால் தான் உங்களுக்கு ஓட்டுப் போட்டோம். ஆனால் நீங்கள் அவர்களோடு கூட்டணி வைத்துவிட்டீர்கள். உங்கள் மீது தனிப்பட்ட முறையில் நாங்கள் அனைவரும் மதிப்பு வைத்துள்ளோம். ஆனால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டதால் எங்களின் ஓட்டை எதிர் பார்க்க வேண்டாம் என்று கூறி இருக்க வேண்டும். அப்படி நாம் கூறியிருந்தால், செல்லூர் ராஜூ கூனி குறுகிப் போயிருப்பார். 

அதிமுக வேறு வழி இல்லாமல் தான் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாளை திமுக - பாஜக கூட்டணி ஏற்ப்பட்டால் செல்லூர் ராஜூ முகத்தில் எப்படி முழிப்பீர்கள்?

மேடையில் எச்.ராஜாவையும், மோடியையும் ஸ்டாலினும், தினகரனும் திட்டுவார்கள். ஆனால் மேடையை விட்டு இறங்கிவிட்டால், மோடி மற்றும் எச்.ராஜாவிடம் கை குலுக்குவார்கள். அது தான் அரசியல். அரசியல் பேச்சு என்பது மேடையோடு முடிந்து விடும். தனிப்பட்ட முறையில் யாரும் யாரோடும் பகையை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

ஆனால் பாஜக கூட்டணி வைத்துவிட்டார்கள் என்பதற்காக அதிமுக விடம் தனிப்பட்ட முறையில் நாம் பகையை வளர்த்துக் கொள்கிறோம். அரசியல் மேடை போட்டு ஆயிரம் வசவுகளை அதிமுக மீது சொல்லுங்கள் அது வேறு. ஆனால் ஸ்டாலின், தினகரன் என யாருமே எந்த சமூகமுமே அதிமுக வுடன் தனிப்பட்ட பகையை வளர்த்துக் கொள்ளாத போது நாம் மட்டும் ஏன் பகையை வளர்க்க வேண்டும்?

தனிப்பட்ட பகை உருவானால் அரசியல் அனாதையாகி விடுவோம் தோழர்களே. ஏனெனில் திமுக - அதிமுக - தினகரன் என எல்லோருமே அரசியல் தவிர்த்து கூட்டு தான். 

பள்ளிவாசலில் சத்தம் போட்டால் கூட நபி (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டிப்பார்கள். ஆனால் புதூர் பள்ளியில் மிக ஆபாசமான கெட்டவார்த்தை ஒருவர் பேசுகிறார். இது தான் நபி (ஸல்) அவர்கள் காட்டிய பண்பாடா?

ஓட்டுக் கேட்டு வருகிறார்களா? நபி (ஸல்) அவர்களைப் போல, எடுத்துச் சொல்லுங்கள். அதை விடுத்து துரத்தி விடுவது அநாகரீகமான ஆபத்தான செயல். இஸ்லாமிய இளைஞர்கள் இந்த மாய வலையில் விழுந்து விடக் கூடாது. 

ஓட்டுக் கேட்பவர்களை விரட்டுவது ஜனநாயக விரோதம், அநாகரீகம் என்பதை எல்லாம் தாண்டி, அது நபி (ஸல்) காட்டிய வழி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன். அரசியலைத் தாண்டி தனிப்பட்ட பகையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். அது சமூகத்திற்கு தான் ஆபத்தை ஏற்படுத்தும். 

எனதருமை இளைஞர்களே, உணர்ச்சியால் அரசியல் சூழ்ச்சியில் மாட்டிக் கொள்ளாமல், அறிவார்ந்து செயல்பட்டு உங்கள் கோபத்தை ஓட்டில் காட்டுங்கள். அதுவே இங்குள்ள அரசியல் கட்சிகளை பாஜக வுடன் கூட்டணி சேரவே தயங்க வைக்கும். அது தான் அரசியல்.

யாசிர்
மதுரை


*செல்லூர் ராஜா* *விசயத்தில் சமுதாயம்,....*

*தவறிழைத்து விட்டதோ ?!*

*அர்ஜுன் சம்பத்தின் முகத்தில்....*
*கரியைப் பூசியிருக்கலாமே....*

*✍ ஆவடி முஹைதீன்💐🤝*

அல்லாஹ்வின்  ஆலயம்....

அரசியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் இடமுமல்ல....?

அரசியல் ஆலோசணை செய்யக்கூடாது 
என்கிற தடையுமில்லையே...!

இந்த *இஸ்லாமிய அடிப்படை கல்வி பயிலாத*.... ?!

இஸ்லாமிய இளைஞர்களால்
இறையில்லம் நோக்கி...

 ஒருதாய் வயித்து (மாற்றுமத )
சகோதரரான 

அமைச்சர்
*செல்லூர் ராஜா* அவர்கள் 

தன் தலமையின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து!
இஸ்லாமியர்களின் வாக்குகளை சேகரிக்க...

 இறையில்லம் நோக்கீ,,.,.

 இருகரம் கூப்பீ வந்தவரை இழித்துரைத்து அனுப்புவது

 இஸ்லாமிய மரபுமல்ல...
நபிவழியுமல்லவே !

எதிரியைக்கூட
 தன் தேவையைகருதியை...

 ஏந்தல் நபியவர்களின்  உதவி நாடி வந்து விட்டால்....

 இன்முகத்தோடு வரவேற்று உபசரித்த வரலாற்று நிகழ்வுகள்தாம் எத்துனை எத்துனை ? 

*சமுதாயம் தவறிழைத்து விட்டதே....😔*

*கரம் கூப்பி வந்த சகோதரர் செல்லூர் ராஜாவை...*

 *கைகோர்த்து (முஸாபாஹ் செய்து) அழைத்துச் சென்று...*

அமைச்சர் அவர்களே..
நீங்களோ நீங்கள் ஏற்றிருக்கும் தலமையோ

 *எங்களுக்கு எதிரிகளல்ல...*

அம்மாவின் ஆட்சிக் காலத்தில்...

தாங்கள் தற்போது செய்துள்ள       *கூட்டணி த் தவறை*

 அம்மா அவர்கள்  செய்துவிட்டு...

 *பகிரங்க மன்னிப்புக்* கேட்டபோது...

அதை இஸ்லாமியச் சமூகம்  இன்முகத்தோடு அதை ஏற்றுக் கொண்டதுபோல...

தற்போது தாங்களும் *அதே தவற்றை* செய்துள்ளீர்கள்

 *தவறைத் தாங்களும் உங்களது தலமையும் திருத்திக் கொண்டால்...*

 இஸ்லாமியச் சமூகம் இன்முகத்தோடு வரவேற்கும்💐🤝

 என்பதை
 நபிவழிப் பண்போடும் இஸ்லாமிய மாண்போடும்,.,,

 *திருக்குர்ஆன் பிரதியையும்.... நபி(ஸல்)அரசியல் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தையும் கொடுத்து*

 ஒட்டுமொத்த
 *மீடீயாவின் முன் தாஃவா அடிப்படையில்*

*அன்போடு வழியனுப்பி வைத்திருந்தால்.....?*

மஸ்ஜிதின் மாண்பும் பாதுகாக்கப்பட்டிருக்கும்

 நபியின் சுன்னாஹ்வும் ஹயாத்தாக்கப்பட்டிருக்கும்
*இந்திய*
*வரலாற்றில்* *இஸ்லாமியர்கள் இங்கீதமானவர்கள்* *எனப் பதியப் பட்டிருக்கும்* 

 *குறுமதி* கொண்டு....

*அல்லாஹ்வின் ஆலயம் அரசியல் மேடையாகப் பயன்படுத்தப்படுகிறது*

 என்கிற அர்ஜுன் சொம்பத்தின்

 *அவதூறுச் சொல்லின் வாய் பூட்டப்பட்டிருக்கும்....*

இதில்...
தவறு இழைத்து விட்டதோ இஸ்லாமிய சமூகம் ???

அல்லாஹ்வின் அருள்பெறும்😭🤲
 *இபாதத்தான*

 நோன்புக் கஞ்சி குடிக்கும்
 *இஃப்தார் நிகழ்சியைக் கூட அரசியலாக்கத் தெரிந்த இயக்கங்களுக்கு....*

*மீலாது நபிவிழாவைக்கூட....*
*அமைச்சர்களை பேச வைத்து அரசியலாக்கத் தெரிந்த ஜமாஅத்களுக்கு*

இதில்... 
கோட்டை விட்டது ஏனோ ?

உபியில் ஒரு *முதலமைச்சர் படுத்தும்பாடு...*

ஒட்டுமொத்த இந்தியாவிலும்

 *ஒரு பிரதமந்திரி படுத்தும்பாடு...*

இஸ்லாமியர்களாகிய நாம் சொல்லி மாளாது😟😞

நாளை அல்லாஹ்வின் நாட்டத்தால்...

சாகோதரர் *செல்லுர் ராஜா*

*காவல்துறை or சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுவிட்டால்.*

பொறுப்பற்ற 
இந்த நம்
இழி செயலின்...

 *வடு அவரை எப்படி சிந்திக்க வைக்கும்*

என்கிற கவலையோடு😔🤔

 உங்கள் அன்புச் சகோதரன் 
*✍ஆவடி முஹைதீன்💐🤝* 30 - 03 - 2019




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.