பல்வேறு பணிகளில்(?) கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் ஏ.எஸ்.அலாவுதீன் ராஜினாமாவா

மரியாதையுடன் ஒதுங்கிய ம.ஜ.க. மாநில இணைப் பொதுச் செயலாளர்  ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை
*எனது நட்பு தொடரும்...*

எனது அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய மனிதநேய சொந்தங்களே! உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

நான்  பல்வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தவிர்க்க இயலாத சூழலில்,  மஜகவின் இணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி உள்ளேன்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/03/blog-post_16.html

14/03/2019 அன்று சென்னையில் கூடிய தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில்,எனது விலகல் குறித்து  நீண்ட நேரம் எடுத்து விவாதித்து, யாருக்கும் என்னை விடுவிக்க விருப்பமில்லாமல் சங்கடத்துடன் எனது விலகலை ஏற்றுக் கொண்டதாக அறிந்தேன். இந்த கண்ணியமான அணுகுமுறை நெகிழ்ச்சியளிக்கிறது

இறைவன் இம்முடிவை நம் அனைவருக்கும் நன்மையாக்கி வைக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.

நான் கண்ட அரசியல் கட்சிகளில் தெளிவான கொள்கைகளையும், முதிர்ச்சியான அணுகுமுறைகளையும் கொண்டதாக மஜக இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.  அதற்கு சமீபத்திய உதாரணம், அனைவரும் பாராட்டும் வகையில் வரும் மக்களவை தேர்தலில் மஜக எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு.

நான் ஏற்றுக் கொண்ட பணிகளில் ஓராண்டுக்கும் மேலாக முழு ஈடுபாட்டுடன் இருந்தது மன நிறைவை அளிக்கிறது. அதன் பணிகள் மென்மேலும்  சிறக்க பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகிறேன்.

மஜக சொந்தங்களுடனான எனது நட்பும், உறவும் என்றென்றும் தொடரும்.

வஸ்ஸலாம்

என்றும் அன்புடன்,

ஏ.எஸ்.அலாவுதீன்
16.03.19

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

இஸ்லாத்தின் பார்வையில் தொப்பி, தலைப்பாகை

பாபா படுகொலையில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்- குணங்குடிஹனீபா