K.K. அகமது கான் M.E, V.O.H. ஈமான் B.Sc திருமண நிகழ்ச்சியில் கஜாப் புயல் இயற்கையா? இறைவனின் கையா?

கஜப்புயலால் நிற்கதியாய் ஆகி விட்டவர்களுக்கு அரசு தரப்பிலான  கோடிகளாகட்டும் அமைப்புகளெல்லாம் திரட்டி தந்திடும் கோடான கோடிகளாகட்டும் நிரந்தர நிவாரணமாகி விடுமா?  நிரந்தர நிவாரணத்திற்கு நபி வழி நடை முறை சாத்தியம் இல்லையாஅண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்பது மேடைப் பேச்சுகளுக்கு கொடுக்கப்படும் வெறும் அலங்கார தலைப்புகள்தானா? 1453 ஆண்டுகளுக்கு முந்தைய இறை வசனங்கள் கூறும் உண்மைகளை எடுத்துச் சொல்ல இதுவா நேரம்?
https://mdfazlulilahi.blogspot.com/2018/11/kk-me-voh-bsc.html
----------------------------------------------------------------------
எல்லாம்   வல்ல   அல்லாஹ்வின்   பேரருளால்,  முத்திரை நபி முஹம்மது  (ஸல்)  அவர்கள் வழிமுறைப்படி  இன்று ஹிஜிரி 1440  ரபிய்யுல் அவ்வல் பிறை 16 (25-11-2018)    ஞாயிறு காலை 10 மணிக்கு
காயங்கட்டி அஹமது அலி ரஹிமஹுல்லாஹ், M.K.காதர் முஹைதீன்   ஆகியவர்களின்  பேரன்   K.A. முஹம்மது பஸ்லுல் இலாஹி, தம்பி K.A. கலீலுர்றஹ்மான்  மகனார்
K.K. அகமது கான் M.E.
(K.S.A. Power Infra Pvt Lbd, Chennai)
மணமகனுக்கும்
V.O.A. காஜா மைதீன்,
அல்ஹாஜ் K.B. முகைதீன் பிச்சை
ஆகியவர்களின்  பேத்தி
V.O.K. ஹைதர் அலி B.A.
அவர்களின் மகளார்

V.O.H. ஈமான்  B.Sc
மணமகளுக்கும்
93/96 சாயன் தரகன் தெரு மணமகள் இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.   இனிமையான  இந்த இல்லற   வாழ்க்கை   ஒப்பந்த  நிகழ்ச்சியில் மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி உரையாற்றினார்.


இஸ்லாமிய திருமணம் என்றால் என்ன? வரதட்சணை திருமணங்களை வரிந்து கட்டிக் கொண்டு நடத்தும் மவுலவிகள். மஹர் கொடுக்கும் திருமணங்களை எதிர்ப்பது ஏன்? என விலாவாரியாக விளக்கினார். 

நேரு நகர், சாயன் தரகன் தெரு ஜமாஅத்தார்களான நிஸ்டார், மணிக்குட்டி போன்றவர்கள். ம.ம.க. நகர செயலாளர் மவுதலி காஜா.  த.மு.மு.க. துணைச் செயலாளர்கள் கம்மலெப்பை அஜீஸ். .ஓதி இஸ்மாயில் 38வது வார்L த.மு.மு.க. தலைவர் ராஹத் செய்யது அலி, அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் கூலி ஷம்சுத்தீன், Er மக்துாம் அலி மற்றும் சமுதாய பிரமுகர்கள்.  கலந்து கொண்டார்கள்.

அதில் கஜாப் புயல் இயற்கையின் சீற்றமா இறைவனின் கோபமா? என்ற தலைப்பில் நாம் ஆற்றிய உரையின் விரிவாக்கம்.


குறி வைத்தாற்போல் தாக்கும் புயல்களும் பூகம்பங்களும் சுனாமி கடல் கொந்தளிப்புகளும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு பாதிப்பின் போதும் வரலாறு காணாத பாதிப்பு என்ற வசனத்தை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.


பாதிப்புகள் நல்லடியார்களுக்கு சோதனையாகவும் மற்றவர்களுக்கு தண்டனையாகவும் தான் வருகின்றன. சோதனையா? தண்டனையா? என்பதை அவரவர்களை அல்லாஹ் அறியச் செய்யாமல் இருப்பதில்லை.


ந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்பொழுதெல்லாம் ஆட்சியாளர்கள் ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் வந்தும் எதிர் கட்சித் தலைவர்கள் தரை மார்க்கமாக  நே(கா)ரில் சென்றும் பார்வை இடுவார்கள். செல்ல இயலாதவர்கள் அறிக்கை வெளியிடுவார்கள். நிதி திரட்டுவார்கள். இதுதான் வாடிக்கை. அந்த வாடிக்கையான வேடிக்கைகளைத்தான் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறார்கள்.


ந்த மாதிரி நிகழ்வுகள் பற்றி, 1453 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இறை வேதமாம் திருக்குர்ஆனில் அன்றே இடம் பெற்று விட்டது.


(நன்றி கெட்ட மனிதர்களே!) உங்களை பூமி விழுங்கி விடாதென்றோ, அல்லது உங்கள்மீது கல்மழை பொழியாதென்றோ, நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (17:68)


... கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக, உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (17:69) என்று அல்லாஹ் கேட்கிறான்.


இது எதனால் வந்ததென்றால் மனிதர்களின் கைகள் தேடிக் கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால், கடலிலும் தரையிலும் (நாசமும் அராஜகமும்) குழப்பமும் தோன்றின (30;41)  என்றும் கூறியுள்ளான். 


1453 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த இறை வசனங்கள் கூறும் உண்மைகளை எடுத்துச் சொல்ல இதுவா நேரம்? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வேலையையா செய்யச் சொல்கிறீர்கள் என்று அறிவாளிகள்(?) கேட்கலாம்.


ஆம் இதுதான் நேரம். ஆனால் இதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்களோ அப்படிச் சொன்னால்தான் பலன் தரும்.


கஜப்புயலால் நிற்கதியாய் ஆகி விட்டவர்களுக்கு அரசு தரப்பிலான கோடிகளாகட்டும் அமைப்புகளெல்லாம் திரட்டி தந்திடும் கோடான கோடிகளாகட்டும் நிவாரணமாகி விடுமா?


இந்த கோடிகள் முழுமையும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேருமா? சேர்ந்தாலும் நிச்சயமாக இவைகளெல்லாம் உடனடியான நிரந்தரமான நிவாரணங்களையும் தீர்வுகளையும் தருமா? என்றால் நிச்சயமாக தராது. தரவில்லை என்பதுதான் களத்தில் உள்ள அனைவரின் தகவல்களாக உள்ளன.

ரோட்டோரம் உள்ளவர்களுக்கு கிடைக்கும் உதவிகள் சாலை வசதிகள் இல்லாத உள் கிராம மக்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு பகுதிக்கு என்று கொண்டு செல்லும் நிவாரணம் பொருட்கள் வேறு பகுதி மக்களால் மறித்து கேட்கப்படுகிறது. அவர்களையெல்லாம் சமாளித்து சமாதானம் செய்து உரிய இடத்திற்கு கொண்டு செல்வதில் சிரமமோ சிரமம் என அறிகிறோம். இவற்றை குறை சொல்ல முடியாது சூழல் அவர்களை அப்படி ஆக்கி விட்டது. 


ஆனால் நிவாரண முகாம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் கும்பல்களால் திடீர் முகாம்கள் முளைத்து விட்டன. பாதியை பதுக்கி மீதியை கொடுக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆக இவை நல்ல தீர்வாக, நிரந்தர தீர்வாக  இல்லை என்பதுதான் அனுபவ உண்மை.


நிச்சயமாக நபி வழியில்தான் நல்ல தீர்வுகள் உள்ளன. நபி வழியை செயல்படுத்தினால் ஓராயிரம் கோடி அல்ல ஒரு ரூபாய் கூட நிதி திரட்ட தேவை இல்லை.


சுனாமி, புயல், பூகம்பம் போன்றவற்றால் எப்படி வீடு வாசல் சொத்து சுகம் ஊர்  உறவு என எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாய் நிற்கிறார்களோ அதை விட மோசமாக ஓட்டு மொத்தமாக நிற்கதியாய் வந்து நின்றவர்கள்தான் அன்றைய மக்கத்து முஹாஜிர்கள் 


மச்சான் மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜி அவர்கள் உரையாற்றும்போது சொல்லிக் காட்டிய அப்துர்றஹ்மான் இப்னு அவ்பு அவர்களும் நிற்கதியாய் வந்து நின்ற முஹாஜிர்களில் ஒருவர்தான்.

அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் இது மாதிரி நிதி திரட்டிக் கொண்டிருக்கவில்லை. அன்று பல் வேறு குலங்களாகவும் கோத்திரங்களாகவும் மக்கள் இருக்கத்தான் செய்தார்கள். அந்தக் குலம்  கோத்திரங்களுக்கிடையே வசூல் போட்டியை ஏற்படுத்தவில்லை. 


திருமணங்கள் மட்டும்தான் நபி வழியில் இருக்க வேண்டுமா? நிவாரணங்களும் நபி வழியில் இருக்க வேண்டும். வீடு வாசல்களை மனைவி மக்கள்களை இழந்து நிற்கதியாய் வந்து நின்ற மக்காவாசிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் வழங்கிய நிவாரண திட்டமே -  நபி வழியே இன்றைக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புகளுக்கும் சரியான உடனடியான நிரந்தர நிவாரணங்களும் தீர்வுகளுமாகும். 


பாதிக்கப்பட்டவர்களில் தனி மரமாகிவிட்ட ஒருவரை நம் சகோதரனாக அல்லது சகோதரியாக ஏற்று நம் வீட்டுக்கு அழைத்துச் சென்று நம் குடும்பத்தில் ஒருவராக வைத்துக் கொள்கிறேன் என்று ஒவ்வொரு முஸ்லிமும் நபி வழியை நிலை நாட்ட முன் வர வேரண்டும்.


தனி நபர்களுக்கு இது சரி குடும்பத்துடன் நிற்பவர்களுக்கு சாத்தியமா? என்ற கேள்வி வரலாம். எத்தனையோ ஊர்களில் நமது சமுதாயம் சார்பில் 20லிருந்து 200பேர் வரை ஓதக் கூடிய மதரஸாக்களை நடத்தி வருகிறோம். பெரும்பாலான மதரஸாக்கள்  பல வீடுகளிலிருந்தும் அனுப்பப்படும் உணவுகளைக் கொண்டே நடந்து வருகின்றன.


ஆகவே குடும்பத்துடன் வீடு வாசல்களை இழந்து நிற்பவர்களுக்கு பள்ளிவாசல் மதரஸா வளாகங்களில் தங்க வைத்து உதவலாம். அப்படி முன் வந்தால், மேலே குறிப்பிட்டுள்ள ஆயத்துகளை மட்டுமல்ல, இன்னுமுள்ள ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் நமது மக்களுக்கு உபதேசிக்கும்பொழுது மற்றவர்களும் அறிவார்கள். புரிவார்கள்.


பொதுவாக ஒரு சாராருக்கு நேரிடையாக செய்யும் உபதேசம் அவர்களிடம் எடுபடாது. அடுத்தவர்களுக்கு செய்யும் உபதேசம் இவர்களிடம் எளிதில் எடுபடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கி விட்டு அவர்கள் அறிய பள்ளிவாசல்களிலும் மதரஸாக்களிலும் நம்மவர்களுக்கு செய்யும் உபதேசம் அவர்களிடம் எளிதில் எடுபடும். இதுதான் மனித இயல்பு.


இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வகுத்தளித்த நிவாரண திட்ட அடிப்படையிலானதுதான் மேலே நாம் கூறி உள்ளது. அண்ணல் நபியே அழகிய முன் மாதிரி என்பது மேடைப் பேச்சுகளுக்கு கொடுக்கப்படும் வெறும் அலங்கார தலைப்புகள் அல்ல.

எனவே நிற்கதியாய் நிற்பவர்களில் ஒருவரை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராய் ஏற்றுக் கொள்கிறோம் என்று முஸ்லிம்கள் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.


குடும்பம் குடும்பமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை பள்ளி ஜமாஅத்களும் மதரஸாக்களும் முஸ்லிம் அமைப்புகளும் ஏற்று செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.


நபி வழிக்கு செயல் வடிவம் கொடுத்தால் இஸ்லாத்தைப் பற்றி அறியாத உலகில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களின், குறிப்பாக முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களின் கவனம் இஸ்லாத்தின் பக்கம் திரும்பும். 

இதன் மூலம் முஸ்லிம் அல்லாத மக்களிடமும் ஆட்சியாளர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றி அறியச் செய்திட முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இது. 


பொறுப்பெடுத்தல் என்பது வாழ்நாள் முழுவதும் என்பது அல்ல. இது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். உழைக்கவே முடியாதவர் என்றால் அவரை வாழ்நாள் முழுவதும் வைத்து பராமரிக்க வேண்டும் அதற்குரிய மகத்தான கூலி அல்லாஹ்விடம் உண்டு.


உழைக்க தகுதி உடையவர் என்றால் அவர் மனம் ஒரு நிலைக்கு வரும்வரை சும்மா இருப்பார். பிறகு அவருக்கு என ஒரு வேலையையோ தொழிலையோ காட்டி விட்டால் நன்றியுடன் ஈடுபட்டு நமது தேவைகளிலிருந்து விடுபட்டு அவரும் இதுபோல் உதவக் கூடியவராக ஆகி விடுவார். 


குடும்பத்துடன் உள்ளவர்கள் என்றால் சாலைகள் சீரமைப்பு, மின்சார இணைப்பு, நீர்நிலைகள் சரி செய்தல் போன்ற அரசு செய்ய வேண்டிய பணிகள் நிறைவு பெற்றதும் அவரவர் இல்லங்களுக்கு சென்று விடுவார்கள்.


கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி சமுதாயத்தை கூறு போட்டு வசூல் ராஜாக்களாக வலம் வந்து கொண்டிருக்கும் சுயநலவாதிகளிடமும். கள்ளக் கணக்கு பேர்வழிகளிடமும். முதியோர், சிறுவர் இல்லங்கள் பெயரால் மோசடி செய்தவர்களிடமும். பள்ளிவாசல் கட்டிடப் பணிக்கு வந்த பணத்தில் மோசடி செய்தவர்களிடமும். ள்ளிவாசல் கட்டிடப் பணிக்கு வந்த பணத்தில் சம்பளத்தின் பெயரால் மோசடி செய்தவர்களிடமும்.  தன்னை முஸ்லிம் என்று சொல்லக் கூடாது தமிழன் என்று சொல்ல வேண்டும் என்று சொல்லக் கூடிய இஸ்லாமிய பெயர் தாங்கிகளான இழி பிறவிகளிடமும் இந்த நபி வழியை அமுல் படுத்துவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது.


கலிமாச் சொன்னவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாக ஏற்று செயல்படும் த.மு.மு.க, முஸ்லிம் லீக் போன்ற சமுதாய அமைப்புகளும் அமைப்பு சாரா ஜமாஅத்களும்தான் இந்த நபி வழியை செயல்படுத்த முன் வர வேண்டும்.


அனாதைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டவர்களும் நானும் சுவர்க்கத்தில் இப்படி இருப்போம் என தனது இரு விரல்களைக் காட்டி நபி (ஸல்) கூறியுள்ள ஹதீஸ்களை முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்லி தயார் படுத்திட வேண்டும்.


நபி(ஸல்) அவர்கள் வகுத்தளித்த நிவாரண திட்டத்தை ஆட்சியாளர்களுக்கு எத்தி வைத்து அணுமதி பெற வேண்டும். இந்த நபி வழியை செயல்படுத்த எந்த அமைப்பு முன் வந்தாலும் நிற்கதியாய் ஆகி விட்டவர்களில் ஒருவரை என் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ள நான் தயாராக உள்ளேன் என்று ஒவ்வாரு முஸ்லிம்களும் தெரிவிக்க வேண்டும். அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!
---------------------------------------------------------------------------------

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிடமிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அல்குர்ஆன்4:1)

பலமான பூமி அதிர்ச்சி ஏற்பட்டு, பூமி, தான் சுமந்திருப்பவைகளை (எல்லாம் வெளியில் ) எறிந்து விடும்போது, மனிதன் திடுக்கிட்டு 'இதற்கென்ன நேர்ந்தது? (ஏன் இவ்வாறு அதிர்ந்தது?) என்று கேட்பான். (அல்குர்ஆன் 99:1-3)


பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காண மாட்டீர்கள். 17;68

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.