பீ.ஜெ.க்கு எதிராக மட்டும் களமாட நாம் தயார் உண்மைகளை ஒப்புக் கொள்ள வைக்க நீங்கள் தயாரா?


இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் வரிசையில் பீ.ஜே. உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் பீ.ஜே. பதவி ஆசைக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பேராசைக்கு பேராசிரியர் காதர் முகைதீன். தவ்ஹீதை விட்டு தடம் புரண்ட(சிக்கன்) 65.  தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது என்று பீ.ஜே. புகழ்பாடி துவங்கி எழுதிய பொய்யான வரலாறு.  கோயம் பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை.
பீ.ஜே. என்ற அந்த ஒருத்தன் ஒழிந்து விட்டாலே எல்லாரையும் திருத்தி விடலாம். பீ.ஜே. சொல்லித்தான் எல்லாமே நடந்தது. ஆகவே பீ.ஜெ.க்கு எதிராக மட்டும் களமாடுங்கள் என்று குறிப்பிட்ட ஒரு சாரார் நம்மை வற்புறுத்தி வருகிறார்கள். எல்லாரும் சேர்ந்துதான் ஆட்டம் போட்டார்கள் என்பதுதான் நமது நிலை. இருந்தாலும் இனி நாம் கேட்கும் விஷயங்களுக்கு விளக்கம் கிடைத்து விட்டால், உண்மைகளை ஒப்புக் கொள்ள வைத்து விட்டால் அவர்களது கூற்றை ஏற்று பீ.ஜெ.க்கு எதிராக மட்டும் களமாட நாம்  தயாராக உள்ளோம்


அண்ணியை அல்லது கொழுந்தியாவை தன் இரு சக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் செல்லும் அக்கிரமக் கலாச்சாரத்தை எதிர்த்து மிகக் கடுமையாகக் குரல் கொடுக்கும் தவ்ஹீது(?) ஜமாஅத்தில், அதன் பொதுச் செயலாளர் ஒருவர், நந்தினி என்ற பெண்ணை அருகில் வைத்துக் கொண்டு கோயம் பேட்டிலிருந்து கோவில்பட்டி வரை பயணம் செய்கின்றார். இந்தக் கண்ணராவியைக் கண்ணாரக் கண்ட குமரி மாவட்ட சாட்சி ஒருவர் மாநில நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதுகிறார்.



மேற்கண்டவாறு 2009 ஏகத்துவம் பிப்ரவரி இதழில் எழுதியது யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. வசன நடையே சாட்சி சொல்லும். இது பீ.ஜே. சொல்லித்தான் இந்த எதுகை மோனையாளர் எழுதினாரா?

பாக்கர் அவர்கள், ததஜவை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று ஒதுங்கினார் என்று பாக்கருடன் உள்ளவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பாக்கர் பல மேடைகளில் கச்சை கட்டி நின்று முழங்கினார். ஒப்பந்த அடிப்படையில் அமைதியாகி ஒதுங்கினார் என்பதுதான் எமது நிலை. இது தவறு என்றால் அடுத்து வரும் நமது கேள்விகளுக்கு பதில் தந்தால் எமது கருத்தை திரும்பப் பெற்று பகிரங்கமாக மன்னிப்பும் கேட்போம்.


11-05-2008 தேதிய வல்லம் மாநாட்டு நிகழ்ச்சியில் பீ.ஜேக்கு தவ்ஹீதை காத்ததற்காக பட்டம் ஒன்று வழங்கப்பட இருந்தது  சில காரணங்களால் அது தடையானது என்ற செய்தியை விட்டு விடுவோம்.


இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் வரிசையில் இப்னு தைமிய்யா அவர்களுக்கு அடுத்தபடியாக உலகில் இஸ்லாத்திற்கு முக்கிய சேவையாற்றியவர் என பீ.ஜே. பற்றிய தகவல் வல்லம் மாநாட்டில் வைத்தார்கள். இது பீ.ஜே. சொல்லித்தான் செய்தார்களா? இதற்கு ததஜ மட்டுமல்ல அதிலிருந்து வந்த இததஜவினரும்தான் பதில் சொல்ல வேண்டும்.



அதே வல்லம் மாநாட்டின் இன்னொரு அரங்கத்தில் பதவி ஆசைக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி படத்தையும், பேராசைக்கு பேராசிரியர் காதர் முகைதீன் படத்தையும்  வைத்திருந்தார்கள்.


மேலும் மவ்லவி கமாலுத்தீன் மதனி, K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, இக்பால் மதனி, அபூ அப்துல்லாஹ், மைதீன் உலவி, மணப்பாறை ஹனீபா,   ரபீக் அஹ்மது, அப்துல் மாஜீத் உமரி, அப்துல் மஜீத், அப்துல் சமத், உஸ்மான் கான், பஸ்லுல் இலாஹி... எ  65 நபர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்கள் தவ்ஹீதை விட்டு தடம் புரண்டவர்கள் என்று எழுதி மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.


இதுவும் பீ.ஜே. சொல்லித்தான் வைத்தார்களா? இதற்கும் ததஜ மட்டுமல்ல அதிலிருந்த இததஜவும்தான் பதில் சொல்ல வேண்டும். இதில் உடன்பாடு இல்லை எனில் இனியாவது பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.


இந்த மாதிரி வைக்க மூல காரணம் இன்றைய ததஜ தலைவர் லுஹா என்பவர் A 4 சைசில் சுமார் 50 பக்கத்தில் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி என்ற தலைப்பில் வெளியிட்ட பொய்யான வரலாறுதான்.


மயிலாடுதுறை அருகில் அமைந்துள்ள சங்கரன்பந்தல் என்ற கிராமத்திலிருந்து தவ்ஹீத் பொறி பற்றத் தொடங்கியது என்று பீ.ஜே. புகழ்பாடி துவங்கி எழுதிய அந்த நுாலில்தான். மவ்லவி கமாலுத்தீன் மதனி என துவங்கி கொள்கையில் முரண்பட்டு ஜாக் இயக்கத்தில் இருந்து வருகின்றனர் என்று எழுதி இருந்தது. இது பீ.ஜே. சொல்லித்தான் எழுதியது எனில் திரும்ப பெற வையுங்கள்.


இததஜவும் இதில் உடன்பாடு இல்லை என்று அறிவிக்கட்டும். இல்லை எல்லாரும் அல்லாஹ்வின் சாபத்தை எதிர் நோக்கட்டும்.


ஐ.ஏ.சிக்கும் அபூ அப்துல்லாஹ்வுக்கும் மத்தியில் பண விஷயத்தில் விவகாரம் ஏற்பட்டது. ஐ.ஏ.சி பக்கம் நியாயம் இருந்ததால் ஐ.ஏ.சி பக்கம் பீ.ஜே நின்றார். மற்ற ஆரம்பகால பிரச்சாரகர்களும் ஐ.ஏ.சி பக்கம் நின்றனர். அபூ அப்துல்லா நஜாத் பத்திரிகையைத் தனது சொந்தப் பத்திரிகை என்று சட்டப்படி பதிவு செய்து கொண்டதால் அவர்களால் நியாயம் பெற முடியவில்லை. அந்த அநியாயத்துக்குத் துணை போகக் கூடாது என்று பீ.ஜே நஜாத் பத்திரிகையிலிருந்து வெளியேறினார் என்று அல்லாஹ்வின் சாபத்துக்குரிய பொய்கள் எழுதப்பட்டிருந்தது.

இது பொய் என்பதற்கும் தனிப்பட்ட பிரச்சனைதான் காரணம் என்பதற்கும் 31-07-1987ல் பீ.ஜே. கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாக உள்ளது. அதைக் காண இதை கிளிக் செய்யவும் ('அந்நஜாத்'துக்கு பி.ஜே. அனுப்பிய ராஜினாமா கடிதம்.) https://mdfazlulilahi.blogspot.com/1990/01/blog-post.html 

பீ.ஜே. கடிதத்தில் எழுதியபடி அந்நஜாத்தில் வந்த அறிக்கை


லுஹா எழுதி உள்ள வரலாறு பொய் என்பதற்காக அந்நஜாத் வரவு செலவு விபரங்கள் சம்பந்தமான ஆதாரங்கள். நிர்வாகக் குழு முடிவுகள் இதோ. இதில் 1986 ஏப்ரலில் அந்நஜாத்துக்கு வந்து சில மாதங்களிலேயே (1986லேயே) திரும்பவும் சுன்னத் ஜமாஅத்துக்கு திரும்பி விட்ட  லுஹாவுடைய கையெழுத்து இருக்காது. S.K, PJ, SSU, KMH, KSR என 50க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து இருக்கிறது.












INTJவில் உள்ளவர்களும் சேர்ந்து இருந்தபோதுதான் லுஹா எழுதிய பொய்யான வரலாற்று நுாலை அபூஅப்துல்லாஹ் மீதான மோசடி குற்றச்சாட்டை வல்லம் மாநாட்டில் வெளியிட்டார்கள்.  


இதுவும் பீ.ஜே. சொல்லித்தான் எழுதினார் என்றால் இப்பொழுது இதை பொய் என்று ஒப்புக் கொள்ளட்டும். நாம் பீ.ஜெ.க்கு எதிராக மட்டும் களமாடுவோம். இல்லையெனில் இதை எழுதிய பொய்யன் மீதும் இந்த பொய்யனை ஆதரித்து நிற்பவர்கள் மீதும் இந்த பொய்யை ஆதரித்து நின்றவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்கி குடும்பத்துடனும் கூண்டோடும் அழித்தொழிப்பாயாக ஆமீன்.

மீண்டும் கேட்கிறோம் பீ.ஜெ.க்கு எதிராக மட்டும் களமாட நாம்  தயார்  மேலே ஆதாரங்களுடன் கூடிய உண்மைகளையும் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி எனும் நுாலில் மேலும் உள்ள பொய்களையும்  ஒப்புக் கொள்ள வைக்க நீங்கள் தயாரா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.