நாஸர் மதானி, பழனிபாபா, மு.லீக் பற்றி எழுதி பீ.ஜே. புகழ்பாடிய லுஹாவுக்கும் இந்த கதியா?



தவ்ஹீது வரலாறு என்ற பெயரால் JAQH சம்பந்தமாக லுஹா எழுதிய பொய்களை அடையாளம் காட்டி வந்தோம். அஹ்மத் கபீர் ஐ.டி.யில் லுஹா, கோவை றஹ்மதுல்லாஹ் போன்ற  ததஜவினர் படம் போட்டுள்ளது பற்றி கேட்டுள்ளார்கள். ஆகவே ததஜ தலைவர் லுஹா ஸாஹிப் நாஸர் மதானி, பழனிபாபா பற்றி எழுதி பீ.ஜே. புகழ்பாடியதை இதில் தர உள்ளோம்.   
--- தவ்ஹீத்வாதிகளுக்கு சிரமம் தராமல் பிடிபியின் முடிவுரையை நாசர் மதனி தானே எழுதினார். சமுதாயப் போர்க்களத்தில் ஒரு காலை இழந்தும் சிங்கமாய் கர்ஜித்துக் கொண்டிருந்த அவர் சிகரத்தைத் தொடவிருந்தார். ஆனால் அரசியல் கட்சிகளுடனான அவரது கூட்டணி அவரை ஏறிய அதே வேகத்தில் குப்புறத் தள்ளியது. முஸ்லீக் செய்த அதே பிழையை இவரும் செய்தார். அதனால் அதன் விளைவை அவர் சந்திக்க நேரிட்டது.












கேரளத்தில் நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்கு நாஸர் மஃதனி தேவைப்பட்டது போலவே தமிழகத்திற்கு ஒருவர் தேவைப்பட்டார். பழனிபாபா அந்த வெற்றிடச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார்.


இவரிடம் பேச்சுத்திறமை இருந்தது. ஆனால் ஏகத்துவம் இல்லை. தெளிவான இஸ்லாமியக் கொள்கை இல்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் ஒருவரை எழுப்பி, உனக்கு ஐந்து கலிமா தெரியுமா? என்று கேட்பார். இந்த ஐந்து கலிமாக்கள் என்பதெல்லாம் மார்க்கத்தில் இல்லை, இதைத் தெரிந்திருந்தால் தான் ஒருவர் முஸ்லிம் என்பதும் இல்லை என்ற மார்க்க ஞானம் கூட அவருக்கு இருக்கவில்லை.


முன்கர் நகீர் கேள்வி கேட்டால் நான் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்பேன். எனது பேச்சு குற்றம் என்று அல்லாஹ் என்னை நரகில் போட்டால் போடட்டும் என்றெல்லாம் அவரது மேடைப் பேச்சு அமைந்தது.... .


அவரது பேச்சில் அனல் பறக்கும். ஆங்கிலம் ஆட்டம் போடும். பிசிறடிக்காத அந்தப் பேச்சு இளைஞர்களைத் தன் வசப்படுத்தியது. அதன் விளைவு அவர் சென்று வரும் ஊர்களில் கலவரத் தீ பற்றிக் கொள்ளும் என்றானது.


அந்தக் கலவரத் தீயால் உயிர்களும், உடைமைகளும் சேதமாகும். எனவே அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அடிக்கடி சிறைவாசம்!


இங்கே நாம் இதைக் குறிப்பிடக் காரணம், பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு ஒரு வெற்றிடம் நிலவியது. அதை நிரப்புவதற்கு அப்போது யாருமில்லை. சமுதாயத்திலிருந்து யார் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் காத்திருந்தது. அவரிடம் மார்க்கம் இருக்கின்றதா? என்ற தரத்தையெல்லாம் யாரும் பார்க்கத் தயாரில்லை.


சமுதாய உணர்வு, வீரம் உள்ள எவர் வந்தாலும் அவரை ஏற்றுக் கொள்ள சமுதாயம் தயாராக இருந்தது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்த வெற்றிடம் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக் கூட பி.டி.பி மீது பகிரங்கக் காதல்......

இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இது தான் பி.ஜேவை சமுதாயப் பிரச்சனையை நோக்கி கொண்டு சென்றது.

அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு சுழன்றது.  மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.


பழனிபாபா, நாஸர் மஃதனி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந்திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது. அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்திலிருந்து சத்தியப் பாதைக்கு கொண்டு வந்தது.


சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

அந்தக் கட்டத்தில் வெளிநாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி நாடாக்கள் தான். அந்த இடத்தை பி.ஜேயின் ஒலி நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! ஆடியோ,வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.



பி.ஜேயின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகாரவர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.




யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசரநிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த கால கட்டத்தில் பி.ஜே பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேசமாகும்.




சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சனையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பி.ஜே ஆளானார். அதனால் தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.




ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது. இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல்ஜன்னத் தான். அன்று அது மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு, அதில் பி.ஜே தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத்தின் பக்கம் வளைத்துப் போட்டது.




சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கை தான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது.



2000த்திலிருந்து பீ.ஜே.யை பெண்களுடனும் மதரஸா மாணவிகள், உஸ்தாதாக்கள், மற்றும் ரகீபாக்களுடனும் சம்பந்தப்படுத்தி செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறி வந்த லுஹாதான் 2008 வல்லம் மாநாட்டை ஒட்டி வெளியிட்ட தவ்ஹீது வரலாற்றில் மேற்கண்டவாறு பீ.ஜே.யை புகழ்ந்து தள்ளியுள்ளார்.


பீ.ஜே. மீது ஏற்பட்ட அனுதாபத்தை நீக்கும் அஹ்மத் கபீரும் கண்டு கொள்ளாத ததஜவும் என்று எம்மிடம் பேசியவர். ததஜவினருடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களை இழிவுபடுத்த அசிங்கப்படுத்தி படம் வெளியிடும் கேவலமான செயலை கண்டிக்காமல் இருப்பது நியாயமா? எனக் கேட்டார். நாம் ஏற்கனவே அதுபோல் உள்ளவற்றை கண்டித்தே வந்துள்ளோம். அல்லாஹ்விடமும் முறையிட்டு மன்றாடியுள்ளோம்.

அஹ்மத் கபீர் போன்ற ஐ.டி.க்களை ததஜ தலைமை நிர்வாகிகள்தான் உபயோகித்துள்ளார்கள் என்று செயற்குழுவில் ஒப்புக் கொண்டவர் M.S. சுலைமான். அந்த ஐ.டி.க்களை பயன்படுத்திய ததஜ தலைமை நிர்வாகிகள் யார் யார் என்பதை M.S. சுலைமான் அடையாளம் காட்டவில்லை. இப்பொழுது M.S. சுலைமான் தவிர அத்தனை பேரையும் இழிவுபடுத்தி அஹ்மத் கபீர் போன்ற ஐ.டி.யில் படம் வந்துள்ளது. அதை கண்டிக்க வேண்டிய கடமை M.S. சுலைமானுக்கும் படம் வராத ததஜவுக்கும்தான் உண்டு. 

பீ.ஜேமீது ஏற்பட்ட அனுதாபத்தை நீக்கும் அஹ்மத் கபீர் பற்றி பல தலைவர்களிடம் துாது செல்லும் A.S. அலாவுதீன்தான் கவலைப்பட வேண்டும் என்றோம் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.