காபிர் பத்வா கொடுத்தவர்கள் கொண்டாடிய கொண்டாட்டம்

தினம் ஒரு தினம் என்பது உலக நியதி ஆகி விட்டது. அன்னையர் தினம் என்று உள்ளது. அந்த தினத்தை ஒட்டி தாயின் சிறப்புக்களை பற்றிய இறைமறை, நபிமொழிகள வெளியிட்டார்கள். இந்த மாதிரி அந்த அந்த தினங்களை ஒட்டி குர்ஆன் ஹதீஸ்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய நல்ல செயல்கள் மார்க்க முரணாக ஆகாது. இந்தச் செயலை கொண்டாட்டம் என்று சொல்ல முடியாது.
இஸ்லாத்தில் ஆண்டு தோறும் இரண்டு தினங்கள் மட்டுமே பெருநாட்கள். அதைத்தான் முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். இதைத் தவிர மற்ற நாட்களை கொண்டாடுபவர்கள் முஸ்லிம்களே இல்லை என்று காபிர் பத்வா கொடுத்தவர்களும் உண்டு. அப்படிச் காபிர் பத்வா கொடுத்தவர்கள் தங்கள்  நிகழ்ச்சிகளை இந்த மாதிரி தினங்களை தேர்வு செய்துதான் நடத்துவார்கள். கேடுகெட்ட காதலர் தினத்தைக் கூட தேர்வு செய்து நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார்கள்.
வெளிரங்கமாக அமைப்பின் நிகழ்ச்சி போராட்டம் என்பார்கள். அந்தரங்கத்தில் நடந்தது என்ன? காதலர்கள் சந்திப்பைத்தான் நீல கலர் சட்டை போட்டுக் கொண்டு இட ஒதுக்கீடு  போராட்டம் மார்க்கப் பிரச்சாரக் கூட்டம் என்று நடத்தினார்கள். அல்லாஹ் அவர்களை எப்படி பிடிக்க வேண்டுமோ அப்படி பிடித்து விட்டான். அது போல் இப்பொழுது நண்பர்கள் தினத்தை பலர் கொண்டாடி இருக்கிறார்கள்.

http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_91.html
நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்து விடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர். (அபூமூசா (ரலி) புகாரி 3336) 
இது போன்ற ஹதீஸ்களை வெளியிட்டு இஸ்லாம் பற்றி எத்தி வைத்த நல்ல முஸ்லிம்களும் இருக்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ்கள் என்றால் நாங்கள் அப்படியே ஏற்று நடப்போம் என்று சொல்லி விட்டு பிரியாணி போட்டு நண்பர்கள் தினத்தை கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். 
குறைந்த பட்சமாக டீ கடைகளில் போய் டீ குடித்து கொண்டாடியவர்களும் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் பேஸ்புக்கில் போட்டோக்களாக போட்டு மகிழ்ந்துள்ளார்கள்.
இந்த தவறை சுட்டிக் காட்டினால் எங்களுடன் ஆலிம்ஸாவும்தானே  வந்தார் அவருக்குத் தெரியாதா? என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ் கூறும் ஆலிம் யார் என்று விடிய விடிய சொல்லியும் விடிந்த பிறகு சொல்லியும். சர்ட்பிகேட் வைத்துள்ளவர்களையே ஆலிம்களாக ஏற்போம். அவர்கள் சொல்லையே கேட்போம் என்பவர்களை அல்லாஹ்விடம் விட்டு விடுவோம். அவன் பார்த்துக் கொள்வான்.
மற்றவர்கள் இனியாவது அந்த அந்த தினங்களை ஒட்டி குர்ஆன் ஹதீஸ்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய நல்ல செயல்களை செய்வார்களாக! நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டாடும் கொண்டாட்டங்களை தவிர்ப்பார்களாக. அல்லாஹ்வின் அருளைப் பெறுவார்களாக!

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.