தவறி விட்ட அஸர் தொழுகையை வரிசைப்படிதான் தொழ வேண்டுமா? மாற்றித் தொழ வேண்டுமா?


ளுஹருடன் அஸர், அல்லது அஸருடன் ளுஹர், மஃரிபுடன் இஷா அல்லது இஷாவுடன் மஃரிபு என ஜம்வு செய்து தொழும்போது வரிசைபடியே தொழுகிறோம்.

ஒருவர் அஸர் தொழுகையை மறதியினாலோ, துாக்கத்தினாலோ, நிர்ப்பந்தத்தினாலோ விட்டு விட்டால். அவர் மஃரிபை அடைந்து இஷாவை நெருங்கி விட்டால்  அப்பொழுது எப்படி தொழ வேண்டும்? என்று ஒருவர் கேட்டார். வரிசைப்படிதான் தொழ வேண்டும் என்றோம்.

இல்லை அஸர் ஏற்கனவே நேரம் தவறி விட்டது. .ஃரிபு நேரமும் குறைவுதான். வரிசைப்படி அஸருக்குப் பின் மஃரிபு என்றால் மஃரிபு நேரமும் தவறி விடும். எனவே  மஃரிபு அதன் பிறகு தவறி விட்ட அஸர் என்பதே சரி என்றார். என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு ஒரு ஆலிம் இப்படித்தான் கூறினார் என்றார்.

திரும்பவும் என்ன ஆதாரம் என்று கேட்டதற்கு கன்தக் போரில் நபி(ஸல்) அப்படித்தான் தொழுதுள்ளார்கள் என்றார்.

நாம் அறிந்த வரையில் அது சம்பந்தமான எல்லா ஹதீஸ்களும் வரிசைபடி தொழுததற்குத்தான் ஆதாரமாக உள்ளன என்றோம்.
நபி(ஸல்) அவர்கள் கன்தக் போரில் மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடையில்தான் அஸர் தொழுதார்கள் என்பதற்கு ஆதாரம் முஸ்லிமில் (ஸும்ம ஸல்லாஹ பைனல் மஃரிபி வல் இஷாயி, ஸும்ம ஸல்லாஹ பைனல் இஷாயீன் என) உள்ளது என்றார். 

நமக்கு அரபி தெரியாததால் தமிழில் தேடினோம் கிடைக்கவில்லை. பிறகு அரபி தெரிந்தவர்களை அணுகினோம். அவர்கள் அனுப்பி தந்த ஆதாரங்கள்
عَنْ جَابِرٍ ، قَالَ : جَعَلَ عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ يَسُبُّ كُفَّارَهُمْ، وَقَالَ : مَا كِدْتُ أُصَلِّي الْعَصْرَ حَتَّى غَرَبَتْ قَالَ : فَنَزَلْنَا بُطْحَانَ فَصَلَّى بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ.
جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ حَتَّى كَادَتِ الشَّمْسُ تَغْرُبُ، وَذَلِكَ بَعْدَمَا أَفْطَرَ الصَّائِمُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وَاللَّهِ مَا صَلَّيْتُهَا ". فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بُطْحَانَ، وَأَنَا مَعَهُ، فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى - يَعْنِي الْعَصْرَ - بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.

 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : جَاءَ عُمَرُ يَوْمَ الْخَنْدَقِ فَجَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ وَيَقُولُ : يَا رَسُولَ اللَّهِ، مَا صَلَّيْتُ الْعَصْرَ حَتَّى كَادَتِ الشَّمْسُ أَنْ تَغِيبَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وَأَنَا وَاللَّهِ مَا صَلَّيْتُهَا بَعْدُ ". قَالَ : فَنَزَلَ إِلَى بُطْحَانَ فَتَوَضَّأَ وَصَلَّى الْعَصْرَ بَعْدَمَا غَابَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ بَعْدَهَا.
மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் புகாரியில் முறையே 598,641,945  எண்களாக இடம்பெற்றுள்ளன.

: عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَوْمَ الْخَنْدَقِ جَعَلَ يَسُبُّ كُفَّارَ قُرَيْشٍ. وَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ مَا كِدْتُ أَنْ أُصَلِّيَ الْعَصْرَ حَتَّى كَادَتْ أَنْ تَغْرُبَ الشَّمْسُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَوَاللَّهِ إِنْ صَلَّيْتُهَا "، فَنَزَلْنَا إِلَى بُطْحَانَ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَوَضَّأْنَا، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعَصْرَ بَعْدَمَا غَرَبَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى بَعْدَهَا الْمَغْرِبَ.
: இந்த ஹதீஸ் 1111 எண்ணாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது

: أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : إِنَّ الْمُشْرِكِينَ شَغَلُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَرْبَعِ صَلَوَاتٍ يَوْمَ الْخَنْدَقِ، حَتَّى ذَهَبَ مِنَ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ، فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعِشَاءَ.
: இந்த ஹதீஸ் திர்மிதீயில் 179 ஹதீஸாக இடம்பெற்றது



அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள். நூல் : புகாரி (2931)

அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசி திட்டிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸர் தொழுகையை தொழ முடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், நானும் (இதுவரை) அஸர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்).நூல் : புகாரி 596, 4112

ஆக எல்லா ஹதீஸ்களையும் இணைத்துப் பார்த்தால் வரிசையாகத்தான் தொழுதுள்ளார்கள் என்ற ஆதாரங்களே உள்ளன

சூரியன் மறைந்த பிறகு அஸர் தொழுததால் மஃரிபு நேரத்திற்கும் இஷா நேரத்திற்கும் இடையிலான நேரத்தில் அஸர் தொழுதார்கள் .அதாவது இரண்டு நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் அஸர் தொழுதார்கள் என்ற நேரம் பற்றிய விளக்கம்தான் உள்ளது. 

தவிர மஃரிபு தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் இடையில் என்றோ, மஃரிபு தொழுகைக்குப் பின் அஸர் தொழுதார்கள் என்றோ, விளங்குவதற்கு அறவே வழி இல்லை. 

காரணம் வரிசையாகத்தான் தொழுதார்கள் என்பதற்கு அந்த தொழுகைகளில் கலந்து கொண்ட ஸஹாபாக்கள் அறிவிப்புகள் மிகத் தெளிவான ஆதாரங்களாக உள்ளன. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.