#எருமை_மாட்டை_குர்பானி_கொடுக்கலாமா?

சமீபகாலமாக எருமை மாட்டை குர்பானி கொடுக்கலாமா? அல்லது கூடாதா? என்ற வாதப் பிரதிவாதிங்கள் முகனூல் முழுக்க பரவியிருப்பதை நாம் அறிவோம்.
TNTJ வைச் சார்ந்த ஒருவரின் குழப்பமான மார்க்கத்தீர்ப்பே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்.

மார்க்கத்தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் பலமுறை நாம் சொல்வது சரியா என்பதை ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டும்.
அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் குர்பானிப் பிராணிகளை பட்டியலிடுகிறான்.

لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَىٰ مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ ۖ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
திருக்குர்ஆன் 22:28

ஆடு மாடு ஒட்டகங்களை துல்ஹஜ் மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் அதாவது 10,11,12,13 ஆகிய நாட்களில் குர்பானி கொடுப்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
ஆடு,மாடு,ஒட்டகங்களில் அனைத்து வகையும் அனுமதிக்கப்பட்டதே என்பதை அல்லாஹ் பின் வரும் வசனத்தில் விளக்குகிறான்.

وَمِنَ الْإِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ ۗ قُلْ آلذَّكَرَيْنِ حَرَّمَ أَمِ الْأُنثَيَيْنِ أَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ أَرْحَامُ الْأُنثَيَيْنِ ۖ أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ وَصَّاكُمُ اللَّهُ بِهَـٰذَا ۚ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

"ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று கேட்பீராக! இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குக் கூறியபோது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? அறிவின்றி மக்களை வழிகெடுப்பதற்காக அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுவோரை விட மிகப் பெரிய அநீதி இழைத்தோர் யார்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.
திருக்குர்ஆன் 6:144

இதில் பகரா இனம் என்பது காளை,பசுமாட்டையே குறிக்கும் அதனால் எருமை மாடு,கலப்பின மாடுகளை அல்லாஹ்விற்காக அறுத்து பலியிடக்கூடாது என்று சொல்கிறார்கள்.
இவ்வசனங்களை சிந்திப்பதில் ஏற்ப்பட்ட கோளாறு தான் முரண்பாடான தீர்ப்பிற்கு காரணம்..
சாதுவான கால்நடை அதாவது ஆடு மாடு ஒட்டகம் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் அந்த இனங்களின் வகையையும் உள்ளடக்கும்..
தமிழ்நாட்டில் மாட்டினம் என்பது எருமை,காளை,பசு என்றிருக்கிறது.ஆனால் கேரளா போன்ற பல மாநிலங்களில் எருமை தான் மாட்டினமாக இருக்கிறது..
வெளிநாடுகளில் ஜெர்ரி போன்ற கலப்பின மாடுகளே ஏராளம்.
நமக்கு நாட்டு ஆடு என்றால் வெளி நாட்டிற்கு செம்மறி மற்றும் கலப்பின ஆடுகள்.
பசுமாட்டை காளைமாடே இல்லாத நாடுகள் தங்களின் குர்பானிக்காக தமிழ்நாட்டிற்கா வரமுடியும்.அவர்களுக்கு சாதுவான எருமை மாட்டையோ அல்லது கலப்பின மாடுகளையோ அல்லாஹ்விற்காக குர்பானி கொடுத்துவிடுவார்கள்.
எருமை மாடு பகராவைச் சார்ந்தது தான் என்பதற்கு கீழே ஆதாரம் தரப்பட்டுள்ளது.
எனவே எருமை மாட்டை அல்லாஹ்விற்காக குர்பானி கொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

جاموس ( اسم ):
الجمع : جَوَاميسُ
الجامُوس : حيوانٌ أَهليٌّ من جنْس البقر والفَصيلة البقريَّة 


எருமை மாடு பகராவில் ஒரு வகை அல்லது இனமாகும்.முஃஜம் அல்மஆநீ,முஃஜமுல் வசீத்,முஃஜமுல் ராஇத்

تعريف و معنى جاموس في قاموس المعجم الوسيط ،اللغة العربية المعاصر. قاموس عربي عربي
جاموس : 
جاموس :- 
جمع الجمع جواميس ، مفرد جاموسة : ( الحيوان ) حيوان أهليّ من جنس البقر
جاموس : 
حيوان أهلي من جنس البقر ، يربى للحرث ، وهو أضخم من البقر بقليل ، والجمع جواميس .
المعجم: مصطلحات فقهية
جاموس : 
جاموس

المعجم: الرائد
الجامُوس: 
الجامُوس : حيوانٌ أَهليٌّ من جنْس البقر والفَصيلة البقريَّة ، يندرج تحت رُتْبة مزدَوجات الأَصَابع المجت...
المزيد

நன்றி 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.