மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் பெருநாள் அன்று மிம்பரில் ஏறி பயான் செய்தபோது நடந்தது என்ன?

அபூஸயீத் அல்குத்ரீ (ர­லி) அவர்கள் அறிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள்.

தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள்; (கட்டளையிடவேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும் வரை மக்கள் இவ்வாறே (நபி வழியை) கடைப்பிடித்து வந்தனர்.

(மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய (மிம்பர்) மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார்.

நான் அவரது ஆடையைப் பிடித்து கீழே இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர்  மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே  உரை நிகழ்த்தலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றி விட்டீர்கள் என்று கூறினேன்.

அதற்கு மர்வான் நீர் விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறி விட்டது என்றார். நான் விளங்காத (இந்த புதிய) நடைமுறையை விட நான் விளங்கிய வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என நான் கூறினேன்.

அதற்கு மர்வான், மக்கள் தொழுகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன் என்று கூறினார். புகாரி 956

மர்வானே! நீர் சுன்னத்திற்கு மாற்றம் செய்து விட்டீர்! பெருநாள் தினத்தில் மிம்பரைக் கொண்டு வந்து விட்டீர், இதற்கு முன்னர் இவ்வாறு கொண்டு வரப்படவில்லை... என்று கூறியதாகவும் அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மது ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

குர்ஆன் ஹதீஸ்கள் மட்டுமே மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு சுன்னத் ஜமாஅத் மவுலிவிகளை கடுமையாக விமர்சித்தவர்கள் தவ்ஹீதுவாதிகள்.

ஈத் முபாரக் (பெருநாள் பரக்கத்தாகட்டும்) என்று சொல்லாதே அது அந்நிய கலாச்சாரம், ஹேப்பி கிரிஸ்துமஸ் சொல்வது போல்தான் அது.

தகப்பலல்லாஹ் மின்னா வமின்கும் ஸாலிஹல் அஃமால் (அல்லாஹ் எங்களிடமிருந்தும் உங்களிடமிருந்தும் நல் அமல்களை ஏற்றுக் கொள்வானாக!)  என்று சொல்லாதே நபித்தோழர்கள் சொன்னதாக உள்ள இது பலவீனமானது. 

குல்லு ஆம் வஅன்தும் பீ கைர், இன்று போல் என்றும் வாழ்க என்று புதிது புதிதாக உண்டு பண்ணாதே இப்படியெல்லாம் பேசியவர்கள் தவ்ஹீதுவாதிகள்.

அந்த தவ்ஹீதுவாதிகள் தங்களை அறிந்தோ அறியாமலோ விளம்பர நோக்கத்துடனோ இயக்க வெறியுடனோ சார்புத்தன்மையுடனோ அவர்கள் சார்பான பித்அத்களை அரங்கேற்றுவதுடன் மட்டுமன்றி குர்ஆன் ஹதீஸுக்கு விரோதமாகவும் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள்.

வமா அலைனா இல்லல் பலாக்ஃ

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.