குர்ஆன் ஹதீஸில் சபிக்கப்பட்டு உள்ளவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது?

யா அல்லாஹ் உன் ரஹ்மத்பரகத் எனும் பேரருளைப் பொழிவாயாக குர்ஆன் ஹதீஸ்கள்தான் மார்க்கம் என்ற கொள்கையை நிலைநாட்ட வேண்டும். அதற்காக பாடுபடுபவர்கள் அடி, உதை, வெட்டுக் குத்து  ஊர் நீக்கம் என பாதிக்கப்படும்பொழுது உதவ வேண்டும். இந்த நிய்யத்துடன் நல்ல நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்பு. 

அதன் மறு பெயர்தான் இன்றுள்ள தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத். இந்த அமைப்பை சுய நலன் இன்றி துவங்க யார் கடுமையாக உழைத்தார்களோ அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் அவர்களுடன் உள்ளவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் ரஹ்மத், பரகத் எனும் பேரருளைப் பொழிவாயாக!
http://mdfazlulilahi.blogspot.com/2018/08/blog-post_3.html

இந்த அமைப்பை வியாபாரம், தொழில், வருவாய், பதவி, மாத சம்பளம் மற்றும் கமிஷன் தரும்  பிழைப்பு கூடாரமாக ஆக்கி அனைத்து அயோக்கியத்தனங்கள் செய்தவர்களுக்கும் செய்ய துணை நின்றவர்களுக்கும் திருந்தி உண்மையை மக்களிடம் சொல்லும் மன நிலையை ஏற்படுத்துவாயாக யாஅல்லாஹ்.

மனமுரண்டாக திருந்தாத ஜென்மங்கள் என்றால் மண்டல தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டன் வரை அவர்கள் அத்தனை பேர் மீதும் அவர்களைச் சார்ந்தவர்கள் மீதும் யா அல்லாஹ் உன் சாபத்தை இறக்குவாயாக! 

மார்க்கம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்பும் பதவி, வருவாய், மாத சம்பளம், வியாபாரம்  மற்றும் கமிஷன் நோக்குடன் மக்களை ஏமாற்றி மார்க்கத்தை பிழைப்பாக ஆக்கி விட்ட ஆலிம்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் உன் சாபத்தை இறக்கி கூண்டோடு அழித்தொழிப்பாயாக

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் சபித்ததைக் கேள்விப்பட்ட உம்மு யஅகூப் என்ற பெண், 'என்ன இது இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே?' என்று கேட்டார்கள். தற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், 'அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?' என்று கேட்டார்கள். 

அதற்கு அந்தப் பெண், குர்ஆன் பிரதியில் இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்ட அதை நான் காணவில்லையே!' என்று கேட்டார்கள். 

அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் நீ குர்ஆனைச் சரியாக ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்: 

'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதிலிருந்து உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகி இருங்கள்' (எனும் 59:7 வது வசனமே அது) என்று பதிலளித்தார்கள். (புஹாரி: 4886, முஸ்லிம்)

அறிந்துக் கொள்ளுங்கள் அநீதி இழைத்த அநியாயக்கார்களா  - அக்கிரமக்காரர்கள் -அக்கிரமஸ்தன்கள் - அனியாயஸ்தன்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் (அல் குர்ஆன் 11 :18, 07 : 44)
இது லுஹா மகனார் உஸாமா வெளியிட்டு டெலிட் செய்து விட்டார். 






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.