மேலாண்மைக்குழுத் தலைவருக்கும், அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும்PJ


அஸ்ஸலாமு அலைக்கும்.

மேலாண்மைக்குழுத் தலைவருக்கும்
அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது.

சவூதியில் இருந்து மேலாண்மைக் குழு சார்பில் மேலாண்மைக் குழுத் தலைவர் வெளியிட்ட அறிக்கை மூலம் நம் ஜமாஅத் ஆளுக்கு ஒரு நீதி வழங்கும் ஜமாஅத் அல்ல என்பதை நிலைநாட்டியுள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

யார் மீது புகார் சொல்லப்பட்டாலும் புகார் சொல்பவர் நிரூபிக்கும் பொறுப்பேற்று தலைமையை அணுகினால் தான் அது குறித்து ஜமாஅத் விசாரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு ஜமாஅத்தின் கடந்த கால நடைமுறைக்கு ஏற்பவே அமைந்துள்ளது.

காலம் காலமாக மக்களின் நம்பிக்கை மீது தான் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையை நாம் காலம் காலமாக காப்பாற்றி வருகிறோம்.

அந்த நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு போதுமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன்.

ஆடியோ வெளியிட்டவர்கள் அந்தப் பெண் குறித்த சில விபரங்களையும் வெளியிட்டு உள்ளனர். 
எனவே மேலாண்மைக் குழு தானாக முன் வந்து அந்தக் குடும்பத்தினரையும் விசாரித்து உண்மையைக் கண்டறிந்து  முடிவு செய்வது தான் நல்லது. ஜமாஅத்தின் கண்ணியத்துக்கு உகந்தது.

நிரூபிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது மட்டும் இதற்குப் போதுமானதாக இல்லை.

இந்த ஜமாஅத்தில் மெய்யாக நம்பிக்கை உள்ள ஒரே ஒரு சகோதரன் கூட அதிருப்தி அடையாத வகையில் தான் மேலாண்மைக் குழுவின் முடிவு அமைய வேண்டும்.

எந்த நபரின் மீதும் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்படவில்லை. கொள்கையின் மீதும் தார்மீக நெறிகள் மீதும் தான் இந்த ஜமாஅத் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஐயமற நிரூபிக்க இது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

எனவே அயல்நாட்டில் மேலாண்மைக்குழுத் தலைவர்  இருந்தாலும் இது குறித்து விசாரணைக்குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை, நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை அனைத்துப் பணிகளில் இருந்தும் என்னை விடுவித்து விடுவதே ஜமாஅத்துக்கு  நன்மையானதாகும்.

எதிரிகளின் விமர்சனம் எப்படி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜமாஅத் சரியாகவே செயல்படுகிறது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

எனது கோரிக்கையை நான் அனைத்து உயர்நிலைக் குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தேன். அதை அனைவரும் நிராகரித்து விட்டீர்கள். எனவே தலைமையின் முக நூலில் இதை நானே பதிவிடுகிறேன். 

அனைத்துப் பணிகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
பி.ஜைனுல் ஆபிதீன்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.