மைதீன் உலவி, மைதீன் பக்ரி பற்றி பி.ஜே. சின்ன உலவியை நீக்கியதில் பெரியஉலவியின் சதி திட்டம்

கண்ணியத்திற்குரிய இபுறாஹீம் அவர்களே! ஒழுங்காக வந்து கொண்டிருந்த அல்முபீன் ஆசிரியரை (ம.ஜ.க.) மைதீன் உலவியை  நீக்க பி.ஜே. லுஹா சொன்னதும் பொய்க் காரணம் கூறி முகைதீன் உலவியை நீக்கினீர்களா இல்லையா? இந்த பாவத்தில் உங்களுக்கு எவ்வளவு பங்கு? இதற்காக எத்தனை விருந்துடன் கூடிய கூட்டம் நடத்தி துபை ஐ.ஏ.ஸி யில் உள்ளவர்களை சரி கட்டினீர்கள்? என்று கேட்டுள்ளீர்கள்.
(ம.ஜ.க. மைதீன் உலவியை  நீக்க என்ன மாதிரி குற்றச்சாட்டுக்களை பி.ஜே. என்னிடம்  கூறினாரோ அதை மேடைகளிலும் சொல்லிக் காட்டினார். அதை வீடியோவில் பார்த்துக் கொள்ளுங்கள்)


அல்ஜன்னத்தில் எழுதுவதை நிறுத்திவிட்ட பி.ஜே. அல்முபீனில் எழுத விரும்புகிறார் என்று லுஹா சொன்னார். எழுதட்டும் என்றேன். (மைதீன்) உலவியையும் இக்பால் மதனி மைத்துனர் ஹனீபாவையும் நீக்கி விட வேண்டும்| என்றார். ஏன்? என்றேன் 

அப்படித்தான் அண்ணன்(பி.ஜே.) விரும்புகிறார் நீங்கள் போன் போட்டு பேசுங்கள்என்றார். பி.ஜே. இடம் பேசினேன். (மைதீன்) உலவியை எடுத்து விடுங்கள் என்றார். 

(முகைதீன்) உலவி ஆசிரியராக இருக்கவே நீங்களும் எழுதுங்கள் என்றேன். சாத்தியமில்லை என்றார். 1991ல் நீங்கள்தானே அவர் ஆசிரியராக இருக்க நான் எழுதுகிறேன் என்றீர்கள் என்றேன். சரிபட்டு வராது நாம் எழுதுவதை திருத்தம் பண்ணுவார் என்றார். 

அப்படியானால் புதுப் பத்திரிக்கை துவங்குவோம் நான் பொருளாதார ஏற்பாடு செய்கிறேன் என்றேன். புதுப் பத்திரிக்கை வேண்டாம். அது விளம்பரமாக நாள் ஆகும். பத்திரிக்கைகள் எண்ணிக்கை கூடினால் மக்களுக்கும் பலுவாக இருக்கும் என்றார்.
  
எனவே (முகைதீன்) உலவி இடம் நான் பேசுகிறேன் என்றேன். இப்பொழுது அவர் (முகைதீன் உலவி) வியாபாரி ஆகிவிட்டார். கொள்கை உறுதி இல்லை. நமது எழுத்தில் திருத்தம் செய்வார் எனவே சரிபட்டு வராது. நாம் எழுதுவோம். பத்திரிக்கையை நல்ல தரமாக தலைப்பு வாரியாக முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் வெளியிடுவோம் என்றார். 

எந்த ஒரு தலைப்பாக இருந்தாலும் அது முழுமையாக விரிவாக விலாவாரியாக விளக்கப்பட வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கோரிக்கையாகும். 

தன்னை எதிர்த்தவர்களுக்கு எதிராக எல்லா வழியிலும் கெடுதல் செய்து அவர்களை கொள்கை விரோதிகளாக சித்தரித்து அடியோடு ஒழித்து விடவேண்டும் என்ற வெறி உணர்வில் திட்டமிட்டு செயல்படுபவர் பி.ஜே. என்பதையும் மைதீன் உலவிக்கு கெடுதல் செய்யும் நோக்கில்தான் அல் முபீனில் எழுத விரும்புவதுபோல் காட்டி உள்ளார் என்பதையும் அப்பொழுது நாம் அடையாளம் கண்டிருக்கவில்லை.


தலைப்பு வாரியாக பத்திரிக்கை. பி.ஜே. எழுதினால் நன்றாக இருக்கும். பி.ஜே.யை ஆசிரியராகக் கொண்டு வெளியிடத்தானே மதுரை அப்துல்லாஹ்விடமிருந்து பத்திரிக்கையை ஐ.ஏ.ஸி. வாங்கியது. 

துபை ஐ.ஏ.ஸி. சார்பாக நாகூரில் நடை பெற இருந்த தவ்ஹீது மாநாட்டை நடத்த விடாமல் தடுத்து ரத்து செய்ய வைத்த பி.ஜே. 

ஐ.ஏ.ஸி.யுடன் எந்த தொடர்பும் வைக்க மாட்டேன் என்ற பி.ஜே. தானே தொடர்பு கொண்டு ஐ.ஏ.ஸி. பத்திரிக்கையில் எழுதுகிறேன் என்று முன் வரும்போது ஏன் தவிர்க்க வேண்டும் என்று (ம.ஜ.க) மைதீன் உலவியை நீக்க முடிவு செய்தோம். 

மைதீன் உலவியை நீக்கியதில் பி.ஜே.யின் சதி திட்டம் உள்ளது. இது அப்பொழுது பலமாக பேசப்பட்டாலும் கூறப்பட்ட எதார்த்தமான காரணத்தால் அது எடுபடவில்லை. அதற்காக பொய்யான எந்தக் காணங்களையும் பி.ஜே. மாதிரி நாம் இட்டுக் கட்டவில்லை.


பி.ஜே. இக்பால் மதனி மைத்துனர் ஹனீபாவையும் நீக்க வேண்டும் என்றார். ஒரே நேரத்தில் 2 பேரையும் நீக்க சாத்தியம் இல்லை என்று கூறி ஒவ்வொருவராக நீக்குவோம் என்றேன். இது சம்பந்தமாக மஷுரா செய்தபோது பி.ஜே.யை ஆசிரியராகக் கொண்டு வெளி வருவதில் மகிழ்ச்சி. 

ஏற்கனவே ஐ.ஏ.ஸி.யை உதறி விட்டுப் போனவர். அல்ஜன்னத்தைவிட்டு விட்டு வந்தவர் திடீரென அல்முபீனையும் விட்டு விட்டு போக மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எனவே அவரிடம் எழுத்து மூலமாக எழுதி வாங்குங்கள் என்றார்கள்.


மஷுராவில் இப்படி பேசப்பட்டது என்று கூறாமல் முறையாக எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டால் நன்றாக இருக்குமே என்று பி.ஜே. இடம் கூறினேன். ஒப்பந்தம் எப்படி இருக்க வேண்டும் என்று அவரே கைப்பட எழுதி அனுப்பினார்.

இது ஐ.ஏ.ஸி.யில் உள்ள யாருக்கும் தெரியாது. சரி என ஒப்பந்தம் எழுதி அனுப்பினேன்.

பிரச்சனை என்று வந்து விட்டால் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எப்பொழுதும் செயல்படக்கூடிய பி.ஜே. தனக்கு பத்திரிக்கையும் வேண்டும் எழுத்து மூலமாக தான் எந்த பிடியும் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக வழக்கம்போல் இதிலும் சதி செய்தார்.

அவர் பாஷையில் ஹிக்மத் பண்ணினார். நீங்களாக அல் முபீனுக்கு ஆசிரியர் தேவை என்று த.பி.கு.வுக்கு எழுதுவதுபோல் எழுதுங்கள் என்றார். 

(மவுலவிகளை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பின் பெயர் தவ்ஹீது பிரச்சாரக் குழு. அதன் சுருக்கம்தான் த.பி.கு.) 

லுஹாவும், அவராக வலிய வந்து அல்முபீனில் எழுத வந்த மாதிரி ஆகி விடக்கூடாதே என்று பிரிஸ்டீஜ் பார்க்கிறார் பி.ஜே. அல் முபீனில் எழுத வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எனவே அவர் விருபப்பப்படி பேக்ஸ் அனுப்பி விடுங்கள் என்றார்.


பி.ஜே.யும் லுஹாவும் சொன்னபடி தவ்ஹீது பிரச்சாரக் குழுவுக்கு பேக்ஸ் அனுப்பினோம். சென்னைக்கு அனுப்பப்பட்ட பேக்ஸுக்கு சவூதில் இருந்து பதில் வருகிறது. அப்போதைய பி.ஜே. அமைப்பான த.பி.கு.வின் பினாமி தலைவரான ஹாமித் பக்ரி சவூதில் இருந்ததால் சவூதில் இருந்து பதில் வந்துள்ளது. 

சவூதியிலிருந்து துபை வந்த பக்ரி நாங்களாக அல்முபீனுக்கு த.பி.கு.விலிருந்து ஆசிரியர் வேண்டும் என்று கேட்டதுபோல் எண்ணிக் கொண்டு பல நிபந்தனைகள் வைத்தார். 

என்னங்க பக்ரி ஏகப்பட்ட நிபந்தனைகள் சொல்கிறார் என்று லுஹாவிடம் கேட்டதற்கு பி.ஜே.தானே எழுத விரும்புகிறார். பக்ரிக்கு அது பற்றி தெரியாது பக்ரி நிபந்தனைகளை பிரச்சனையாக கருத வேண்டாம் என்றார்.


இறுதியாக (ம.ஜ.க) மைதீன் உலவி நீக்கப்பட்டு (இன்றைய ததஜ) பி.ஜே. உலவி ஆசிரியர் என்று முடிவானது. பப்ளிஷர் ஹனீபாவின் பணிகள் ஆசிரியர் பி.ஜே.யின் பணிகள் எழுதப்பட்டு முறைப்படி கையெழுத்திட்டு அனுப்பும்படி 2 பேருக்கும் அனுப்பப்பட்டது. ஹனீபா கையெழுத்திட்டு அனுப்பி விட்டார். பி.ஜே. அனுப்பவில்லை. 

இனி ஐ.ஏ.ஸி. இதழில் ஆசிரியராக இருக்க மாட்டேன் என்று 1988ல் பி.ஜே. சொன்ன வரட்டுக் கவுரவ வார்த்தை மீண்டும் குறுக்கிட்டது. ஆசிரியராக மற்றவர்கள் பெயரை போட்டு விட்டு நான் எழுதுகிறேன் என்றார். 

நீங்கள் ஆசிரியராக இருந்து எழுதுவேன் என்றதால்தான் உலவியை நீக்கினோம். இப்பொழுது நீங்கள் ஆசிரியராக இருக்க மாட்டேன் என்றால் மற்றவர்களுக்கு என்ன பதில் சொல்வது இப்படியாக பல முறை பேசி பின் ஒரு முடிவுக்கு வந்தார்.



மாநாடுகள் தவிர எதிலும் பேச மாட்டேன் என்று அறிவிப்பு செய்தார். அதன் பிறகு தான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களையெல்லாம் மாநாடு - இஜ்திமா என்று போடச் சொல்லி கலந்து கொண்டாரல்லவா. அது மாதிரி உலகில் இதுவரை இல்லாத நிவ்ஸ் எடிட்டர் - செய்தி ஆசிரியர் என்று போடச் செய்தார்.

அப்படிப்பட்ட பி.ஜே.க்கு மைதீன் உலவி மீது இருந்த மனக் கசப்பால் 2000 மதுரை மாநாட்டு திடலில் மைதீன் உலவி கடை போட இடம் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். 

மைதீன் உலவி சகலை காஜா கமால் என்னிடம் வந்து சகலைக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார். நான் என்ற அகம்பாவம் பீடித்துள்ளவரை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடிந்ததில்லை. கடைகள் கொடுப்பது சம்பந்தமாக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மனு கொடுங்கள் என்றுதான் கூற முடிந்தது.
(இது வரலாற்றில் ஒரு கிரந்தம்)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.