மறுமையில் பரிந்துரை ஏற்கப்படாதவன் யார்? உதவி செய்ய ஒருவர் கூட இல்லாமல் தனித்து விடப்படுபவன் யார்?
புனிதமிக்க ரமழானில் உள்ளோம்.
நோன்பாளிகளுக்கு மறுமையில் நோன்பு மட்டுமல்ல அவன் செய்த எல்லா அமல்களும் பரிந்துரை
செய்யும். ஆனால் ஏற்றுக் கொள்ளப்படாது ஏன்?
நோன்பு
யா அல்லாஹ் பகல் முழுவதும்
பட்டினி கிடந்த மாபெரும் தியாகி. தாகம், பசி, பட்டினி என இருந்தவன் இந்த நோன்பாளி.
ஆகவே எங்களுடைய பரிந்துரையை ஏற்றுக் கொண்டு உனது இந்த அடிமையை மன்னிப்பாயாக என்று நோன்புகள்
மன்றாடும்.
அல்குர்ஆன்
யா அல்லாஹ் என்னை திரும்பத் திரும்ப ஓதி உள்ளத்தில் பாதுகாத்தான். பிற மக்களுக்கும்
எடுத்துச் சொல்லி கண்ணியப்படுத்தினான். அவன் வாழ்க்கையிலும் பின்பற்றி உயர்வான இடத்தில்
வைத்திருந்தான் என்று திருக்குர்ஆன் பரிந்துரை செய்து சாட்சி சொல்லும்.
சூரத்துரல் பகரா, ஆல இம்ரான்,
கஹ்பு போன்ற அத்தியாயங்களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு பரிந்துரை செய்யும்.
தொழுகைகளெல்லாம் பரிந்துரை
செய்யும் குறிப்பாக பஜ்ர் அல்லலாஹ்விடத்தில் சாட்சி சொல்லும். அதிகாலையிலும் அசராமல்
வந்து தொழுதான் என்று.
இப்படி இந்த அமல்கள் மட்டுமல்ல அவன் செய்த எல்லா அமல்களும்
பரிந்துரை செய்யும். அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அல்லாஹ் அனுமதித்து அல்லாஹ்வுடைய
துாதரும் பரிந்துரை செய்வார்கள். அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை
கூட அவன் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரிக்கப்படும் ஏன்?
நபியாலேயே உதவி செய்ய
முடியாமல் தனித்து விடப்படும் இந்த வணக்கசாலி யார்?
புனித ரழானில் அருளப்பட்ட
அல்குர்ஆனிலேயே பதில் இருக்கிறது பாருங்கள்.
எவர்களை அல்லாஹ் சபித்து விட்டானோ (எவர்கள் மீது
அல்லாஹ்வின் சாபம் இறங்கி விட்டதோ) அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
4:52
இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்ய
ஒருவர் கூட இல்லாமல் தனித்து விடப்படுபவன் யார்? அல்லாஹ்வின் சாபத்தை பெற்றவன். ஆகவே
அல்லாஹ்வின் சாபத்திற்கு அஞ்சி வாழ்வோமாக! எந்த காரணங்களுக்காக அல்லாஹ் சபிக்கிறான்
என்பதை அடுத்தடுத்து பார்ப்போம்.
Comments