என் வீட்டிற்கே வந்து என்னை கன்னத்தில் அடித்து விட்டதாகக் கூறி பெருமைபட்டுக் கொண்டிருப்பவர்களே! உங்களைத்தான்.
பைசல்
ரெஸ்ட்ராரண்ட்டில் வேலை செய்தவர்கள் மேலப்பாளையத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம்
கேட்டுப் பாருங்கள். 1997 ஆம் ஆண்டு இறுதியில் பைசலை சுற்றி வளைத்தது உளவுத்துறை போலீஸ். கடையில் வேலை செய்து
கொண்டிருந்த யாருக்கும் போலீஸ் சுற்றி வளைத்துள்ள எந்த விபரமும் தெரியாது.
உள்ளே வந்த குறிப்பிட்ட இரு அதிகாரிகள் அரபி பைசலிடம் ஏதோ பேசுகிறார்கள்.
அரபி வந்து அவர்களுடன் செல் என்கிறார். நான் இயல்பாக
பின் பக்கம் வழியாக செல்கிறேன்.
பின் பக்க கதவை ஒட்டி மிக மிக நெருக்கமாக
கார் நின்றது. ஏன் இப்படி இடைவெளி இன்றி நிறுத்தி உள்ளான் என்று எண்ணினேன்.
மெர்ஸிடிஸ் காரின் பின் பக்க கதவை ராஜ மரியாதையுடன் திறந்தார்கள்.
நான் ஏறியவுடன் இருபக்கமும் இரண்டு முரட்டு உருவத்தினர் ஏறினர்.
என் அரபி வந்து கை அசைத்ததை முழுமையாக பார்க்கும் முன் கார் மின்னல்
வேகத்தில் பின் வாங்கி பறந்தது.
கடையில் இருந்த எனது தம்பிகள், மச்சான்மார்கள்,
மற்றும் ஊர்வாசிகளுக்கு அபுசயீத் என்ற அரபி சொல்லித்தான் தெரியும். என்னை அழைத்துச் சென்றது போலீஸ் என்று. கார் இருட்டில்
போய் நின்றது. எனது கண்களைக் கட்டினார்கள். பிறகு மீண்டும்
பறந்தது.
எந்த சிக்னலிலும் நிற்காவண்ணம் ஜாமரில்
செல்கிறது என உணர்ந்தேன். என்னைக் கொண்டு போனவர்கள் 2 நாள் உறங்க விடாமல் கண்களை கட்டிய நிலையில் ஒருவர் மாற்றி ஒருவர் அடித்தார்கள்.
பற்கள் உடைந்தன.
அல்லாஹ்வின் பேரருளால் வெளியில் வந்தேன். எல்லாரும்
என்ன என்று கேட்டார்கள். களவு கேஸ் ஆள் மாறாட்டமாக என்னைப் பிடித்து
விட்டார்கள் என்று கதை விட்டேன்.
எனது நெருங்கிய நண்பர் மட்டும்
இதை நம்பவில்லை. தனியாகக் கேட்டார். பி.ஜே.யின் பிரதிநிதியாக இருந்து செயல்பட்டதால் உள்ள பிரச்சனை
என்ற விபரம் சொன்னேன். இந்த வழக்கிலிருந்து வெளிவர என்ன செலவு
ஆனது என்ன செய்தீர்கள் என்பது பற்றி நன்றி உள்ள நல்ல மனிதர் என்றால் விசாரித்து இருப்பார்.
எங்களிடம் சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்கு சேர்ந்தவர்கள். சம்பளத்திற்காக தாங்கள் செய்த வேலையை தியாகம் தியாகம்
என்று பெருமையாக சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் இதை தியாகமாக
சொல்லிக் காட்டவில்லை. மேலே சொன்ன அடிக்கு முன்னால் உங்கள் அடி
மிகச் சாதாரணம் அற்பம். நீங்கள் எனது நெஞ்சில் அடித்தது.
முகத்தில் குத்தி கண்ணாடியை உடைத்தது என் மகனை மிதித்தது மிக மிக சாதாரணம். அற்பத்திலும் அற்பம்.
இதுவரை நான் வெளியிட்ட உண்மை ஆதாரங்களை
பொய்ப்படுத்தினீர்களே அது எனது அடி மனதை பாதித்து விட்டது. பாதிக்கப்பட்ட நான் கேட்கிறேன். யா
அல்லாஹ் இவர்கள் கை,கால்களை நாசமாக்குவாயாக. இவர்கள் குடும்பத்தார் மீது உனது சாபத்தை இறக்குவாயாக என்று தொடர்ந்து துஆச்
செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் மனைவி மக்கள் மீதும் அவனது லஃனத்தை இறக்கி உங்களை கூண்டோடு அழித்தொளிப்பானாக!
Comments
பற்கள் எங்கே? என்று கேட்ட எனக்கே காது குத்தப் பார்த்தீர்கள்.
அவனை மட்டும் நம்பி வாழ்பவர்களை அல்லாஹ் என்றுமே கைவிட்டதில்லை. நம்மையும் கைவிடமாட்டான்