ஒட்டு மொத்த சாபமும் தனித்து விடப்பட்ட இந்த மனிதன் மீது எதனால் இறங்குகிறது?

உதவி செய்ய ஒருவர் கூட இல்லாமல் தனித்து விடப்படுபவனை அல்லாஹ் மட்டுமா சபிக்கிறான். கோடான கோடி மலக்குமார்கள் சபிக்கிறார்கள். இன்னும் யாரெல்லாம் சபிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்களோ அவர்களெல்லாம் சபிக்கிறார்கள். 

அதாவது நபிமார்கள் நல்லடியார்கள் ஷுஹதாக்கள் என ஒட்டு மொத்த மனித சமுதாயமும் சபிக்கிறார்கள் என்று அல் குர்ஆனில் (3:87.) அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான்.

தனித்து விடப்பட்ட இந்த மனிதன் மீது ஒட்டு மொத்த சாபமும் எதனால் இறங்குகிறது?

தெளிவான சான்றுகளை அதாவது அவர்கள் கேட்பார்களே ஆதாரம் ஆதாரம் என்று அந்த  ஆதாரங்களைக் கொண்டு அல்லாஹ் அவனது துாதரை அனுப்பி வைக்கிறான்.

அந்த துாதரை நிச்சயமாக உண்மையாளர் என்று சான்றும் கூறி நம்பிக்கையும் (ஈமானும்) கொள்கிறார்கள்.   அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) நிராகரிப்பாளராக (காபிர்களாக) ஆகி விடுகிறார்கள்.  அந்த அநியாயக்கார கூட்டத்திற்கு அல்லாஹ் ஒரு போதும் நேர் வழி காட்டுவதே இல்லை. (3:86.) 

வார்த்தைகளை நன்கு கவனமாக மீண்டும் படியுங்கள். முஷ்ரிக் என்றால் இணை வைப்பு. காபிர் என்றால் இறை நிராகரிப்பு. கடவுள் இல்லை என்பது. அதாவது நாத்திகராகப் போய் விடுவது புரியுதா?

86ஆவது வசனத்திற்குப் பிறகு 87 என்று தரவில்லை. திரு குர்ஆன் அரபு நடையில் உள்ளது. ஆகவே தமிழர்களுக்கு தக்கவாறு தர வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் எளிதாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே அவர்கள் நடையில் தந்துள்ளோம்.

காபிர் குடும்பத்திலோ நாத்திகக் குடும்பத்திலோ யூத, கிறிஸ்த குடும்பத்திலோ பிறந்து அரைகுறையாக இஸ்லாத்தை அறிந்து வந்து திரும்ப போனவர்களை இப்படி சாபம் இடவில்லை.

முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அல்லாஹ் அருளிய அல் குர்ஆனை ஓதி உணர்ந்து நபி மொழிகள் எனும் ஹதீஸ்களைப் படித்து மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் என்ற பட்டமும் பெற்று பிறருக்கு உபதேசமும் செய்து விட்டு ஒருவன் நாத்திகனாகப் போனால் அவன் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கி தனித்து விடப்படுவான். இவனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.


:86   كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏ 
3:86. தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்து, இத்தூதர் (முஹம்மத்) உண்மையாளர் என்று விளங்கி, நம்பிக்கை கொண்டு விட்டு பிறகு மறுத்த கூட்டத்திற்கு அல்லாஹ் எவ்வாறு நேர்வழி காட்டுவான்? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
3:87   اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏ 
3:87. அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் ஏனைய (நன்) மக்களின் சாபமும் உள்ளது என்பதே அவர்களுக்கான தண்டனை.6




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு