சமுதாயமோ, சமுதாய உதவியோ தேவை இல்லை என்று மனிதனால் தனித்து வாழ முடியுமா?
மனிதனுக்குத் தான் விஞ்ஞான முன்னேற்றத்தின் நவீன கண்டு பிடிப்புகள் தேவை. அவற்றில் அத்தியாவசிய தேவையான வாகனங்கள் போன்றவை தேவை. அது மட்டுமல்ல டெலிபோன், ரேடியோ , டேப் ரிக்கார்டர் , டி . வி , வீடியோ , கம்யூட்டர் , லேப்டப் , டேப்லெட், கேஸட், சி.டி, பென் டிரைவ் என விஞ்ஞான வளர்ச்சியின் புதிய புதிய கண்டுபிடிப்புகள் பயனுள்ளவைகளாக வருகின்றன. அவற்றை பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல் பொழுது போக்காக பயன்படுத்த அத்தனையும் தேவை என உள்ளான் . மிக மிக அடிமட்டத்தில் உள்ள ஏழையாக இருந்தால் குறைந்த பட்சம் ஆடை தேவை என்ற நிலையில் உள்ளான் . மற்ற உயிரினங்களுக்கு ஆடை தேவையா ? ஆடை அணிந்து கொண்டுதான் அவைகள் நடமாட வேண்டுமா ? என்றால் . இல்லை தேவையும் இல்லை . அந்த ஆடை அணியும் கலை நுட்பம் அவைகளுக்குத் தெரியவும் செய்யாது . அடிமட்டத்தில் உள்ள ஏழைக்கு மானத்தை மறைக்க ஒரு சாதரண ஆடை கிடைத்தால் போதும் என்ற தேவையில் உள்ளான். வசதியுள்ளவர்களுக்கு அந்த ஆடையிலும் நவீன கண்டு பிடிப்புகள் தேவை. அந்த தேவைகளை ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அவர்களாகவே நிறைவேற்றி கொள்