மாட்டினால் இஸ்மாயில் நாஜி மாட்டட்டும்.

வெளியில் வீரியமிக்க போராட்டம். அந்தரங்கத்தில் அடிமைத்தனம். கோழைத்தனம், பேடித்தனம், பெட்டைத்தனம். இதுவே த.த.ஜ. நிலை. அம்பலப்படுத்திய த.த.ஜ. மாநில நிர்வாகி.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக த.த.ஜ. நிலைப்பாடு எனும் பெயரில் ஒரு கூட்டுக் கூத்தை விண் டி.வி.யில் ஒளிபரப்பினார்கள். களவாடிய பத்திரிக்கையில் நாயினும் கீழானவர்கள் என்று எழுதி அவர்களது தரத்தை காட்டி உள்ளார்கள். ஷஷஎவன் பொய் சொல்வதையும் அதன்படி நடப்பதையும் விட்டு விடவில்லையோ அவன் பசியோடும் தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லைஷஷ என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்;ளார்கள். இந்த ஹதீஸை நூற்றுக் கணக்கான மேடைகளில் விலாவாரியாக விளக்கிப் பேசிய திருவாளர்கள் புனித மிக்க ரமழானில் பொய் சொல்வதற்கென்றே அந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.

அதுக்காக தங்களுக்குள் அடித்துக் கொண்டவர்கள்.

பள்ளித் திருடர்கள், பத்திரத் திருடர்கள், நியாயமற்ற முறையில் ரியல் எஸ்டேட் உட்பட பல்வேறு வியாபாரங்கள் செய்யக் கூடிய பிஸ்னஸ்மேன்கள். கட்டப் பஞ்சாயத்துப் பேர்வழிகள். ஓய்.N;க. மேன்சனில் மாட்டியவர்கள். பெண்கள் அழகு நிலையம் நடத்துபவர்களிடம் மயங்கி போட்டி போட்டு அதுக்காக தங்களுக்குள் அடித்துக் கொண்டவர்கள். தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணமானவர்கள், கொலைகாரர்கள். இப்படிப்பட்டவர்கள்தான் அவர்கள் செய்து வரும் செயல்களுக்கு ஒரு பேக் ரவுண்ட் தேவை என்று த.த.ஜ.வில் பொறுப்பாளர்களாக ஆகி உள்ளார்கள் என்று முன்பே அறிந்திருக்கிறோம். இதை மீண்டும் நிரூபிக்கும் விதமாகவும் அந்த நிகழ்ச்சி நடந்தது.

அட்ரஸ் இல்லாத பேர்வழிகளான.

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் த.த.ஜ. மாநில பொறுப்பாளர் ஒருவர். அந்த தொழில் சம்பந்தமாக கனிமொழி அவர்களை சந்திக்க பத்திரிக்கை நிருபர் பீர்முஹம்து மூலம் முயற்சி செய்தார். அந்தச் செய்தி கசிந்து விட்டதால் அது நடைபெறவில்லை. பிறகு வேறு வழியில் கனிமொழி அவர்களை ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் த.த.ஜ. மாநில பொறுப்பாளர் ஒருவர் சந்தித்திருக்கிறார். பொதுவாக வி.ஐ.பி.களை சந்தித்தால் பிரமுகர்கள் என்றால் உடனே பத்திரிக்கiயில் செய்தியாக போடுவார்கள். அட்ரஸ் இல்லாத பேர்வழிகளான த.த.ஜ. மாநில நிர்வாகிகள் போன்றவர்கள் என்றால் போட்டோ எடுத்து வைத்துக் கொள்வார்கள். அந்த அடிப்படையில் போட்டோவும் எடுத்திருக்கிறார்கள்.

இதனை வெளியிடாமல் இருந்து இருப்பார்களா?

வியாபார நோக்கில் சந்திப்பவர்கள் தாங்கள் இருக்கும் அமைப்புகள் பற்றி பேசிக் கொள்வதும் நடை முறையில் உள்ளதுதான். அந்த முறையில் நடந்ததுதான் முதல் சந்திப்பு. அமைப்பு ரீதியான சந்திப்பு எனில் அது முற்படுத்தப்பட்டு பத்திரிக்கையில் அப்பொழுதே செய்தியாக கொடுத்து இருப்பார்கள். அந்த சந்திப்பு போட்டோக்களை அப்பொழுதே வெளியிட்டிருப்பார்கள். மற்ற பத்திரிக்கைகளில் வராவிட்டாலும் தங்கள் பத்திரிக்கையிலாவது போட்டு இருப்பார்கள். மலேசி பத்திரிக்கையில் ஒரு செய்தியை விளம்பரமாக கொடுத்தார்கள். பிறகு அதை பத்திரிக்கையில் வந்த செய்தி என பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். அப்படிப்பட்டவர்கள். இதனை வெளியிடாமல் இருந்து இருப்பார்களா? இப்பொழுது கூட களவாடிய பத்திரிக்கையில் தங்கள் அமைப்பினருக்கே தெரியாத அட்ரஸ் இல்லாத மாநில நிர்வாகி எனப்படும் ஒருவர் பெயரை மட்டும் குறிப்பிட்டு இருவர் குழு என்றுதான் போட்டுள்ளார்கள்.

அவர்களது பத்திரிக்கையிலே வெளியிட்டு பீற்றியும் இருப்பார்களே.

அட்ரஸ் இல்லாத இன்னொருவர் யார் என்ற பெயர் போடவில்லை. பாக்கரும் பி.ஜெ.யும் போயிருந்தால் பாக்கர் தலைமையிலான இருவர் குழு என எழுதுவார்களா? இட ஒதுக்கீடு சம்பந்தமான விஷயத்திற்கு தாங்கள் களவாடிய பத்திரிக்கையில் கூட பெயர் போட தகுதி இல்லாத, மாநில நிர்வாகி அல்லாத, அட்ரஸ் இல்லாத ஒருவரையா? உடன் அனுப்பி வைப்பார்கள். ஆக வியாபார ரீதியான சந்திப்பை இட ஒதுக்கீடு சம்பந்தமான, அமைப்பு ரீதியான சந்திப்பு என புழுகி வருகிறார்கள். அமைப்பு ரீதியான சந்திப்பு என்றால் அட்ரஸ் இல்லாத ஒரே நிர்வாகிதான் திரும்பத் திரும்ப போவாரா? இட ஒதுக்கீடு சம்பந்தமான கோரிக்கையை 2ஆவது முறை எழுத்து மூலமாக எழுதி கொடுத்து அனுப்பினோம் என்கிறார்கள். இது உண்மையானால் மனுவை கொடுப்பது போல் அல்லவா போட்டோ எடுத்து இருப்பார்கள். அதை அப்பொழுதே களவாடிய பத்திரிக்கையிலே வெளியிட்டு பீற்றியும் இருப்பார்களே.

வியாபார ரீதியான சந்திப்பை பயன்படுத்தி சரண்டர் ஆகியுள்ளார்.

ஆக இது வியாபார ரீதியான சந்திப்பு. இந்த வியாபார ரீதியான சந்திப்பையும் குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்தும் கொலை வழக்குகளிலிருந்தும். காத்துக் கொள்ள பயன்படுத்தி இருக்கிறார்கள். 1998இல் எப்படி முரசொலி மாறன் வீட்டில் வைத்து கருணாநிதியிடம் சரண்டர் ஆகி குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்தும் கொலை வழக்குகளிலிருந்தும். பி.ஜெ. தன்னைக் காத்துக் கொண்டாரோ அது போல் இப்பொழுதும் இந்த வியாபார ரீதியான சந்திப்பை பயன்படுத்தி சரண்டர் ஆகியுள்ளார்.

அதன் பிறகுதான் கும்பகோணத்தில் கூத்தடித்தார்கள்.

வீரியமிக்க போராட்டங்கள் என சொல்லிக் கொள்ளும் இவர்கள் அறிவித்த போராட்டங்கள் ஆட்சியாளர்களை எச்சரிப்பதற்கா? மக்களை ஏமாற்றுவதற்கா? கும்பமேளாவிலிருந்து கல்யாண மண்டபங்களில் கூடி பிரியாணி சாப்பிடும் போராட்டம் வரை இவர்கள் நடத்தி வந்துள்ள போராட்டங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான் நடத்தியுள்ளார்கள். கும்பகோண பேரணி மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் சும்மா பார்முலாவுக்குத்தான். நாங்கள் தேர்தலில் உங்களைத்தான் ஆதரிப்போம் என முன்னதாகவே ஜெயலலிதா அம்மையாருக்கு தூது அனுப்பி நன்கொடையும் வாங்கி விட்டார்கள். அதன் பிறகுதான் கும்பகோணத்தில் கூத்தடித்தார்கள் என்று முன்பே எழுதி இருக்கிறோம்.

அந்தச் தூதுச் செய்தி என்ன தெரியுமா?

இதுதான் த.த.ஜ. நிலைப்பாடு என்பதை இந்த டி.வி. நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி முனீர் என்பவரே அவரை அறியாமல் கக்கி விட்டார். அதை எடிட் செய்ய எண்ணியவர்கள் ஒரு செகண்டு வித்தியாசத்தில் எடிட் செய்து விட்டதால் அது டி.வி.யில் ஒளிபரப்பாகி விட்டது. இதனால் ஆத்திரமடைந்து கடுப்பான பி.ஜெ. திட்டி தீர்த்துள்ளார். இந்த ஆத்திரத்தில்தான் நாயினும் கீழானவர்கள் என்று களவாடிய பத்திரிக்கையில் எழுதி கோபத்தை கொட்டி தீர்த்துள்ளார். அது என்ன வார்த்தை? கும்பகோண பேரணிக்கு முன்னால் ஜெயலலிதா அம்மையாருக்கு தூது அனுப்பிய மாதிரி. திண்டுக்கல் பொதுக்குழுவுக்கு முந்தைய நாள் அந்த மாநில நிர்வாகி முனீர் என்பவரை கனிமொழி அம்மையாரிடம் தூது அனுப்பி இருக்கிறார் பி.ஜெ. அந்தச் தூதுச் செய்தி என்ன தெரியுமா? ஷஷநாங்கள் வீரியமிக்க போராட்ட முடிவு எடுத்தாலும் நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்|| இதுதான் அந்தத் தூதுச் செய்தி. இதைச் சொல்லி விட்டுத்தான் அந்த மாநில நிர்வாகி முனீர் என்பவர் திண்டுக்கல் பொதுக்குழுவுக்கே வந்தேன் என்று வாக்கு மூலம் தந்துள்ளார்.

கெஞ்சி கூத்தாடி மண்டியிட்டு விட்டு வந்துள்ளார்கள்.

இவர்கள் வேஷதாரிகள் இல்லை என்று சொன்னால் என்ன சொல்லி இருக்க வேண்டும். "நாங்கள் வீரியமிக்க போராட்ட முடிவு எடுப்போம் அதை நீங்கள் சாதாரணமாhனதாக எண்ணி விடக் கூடாது" என்று கடுமையாக எச்சரிக்கையான வார்த்தைகளை சொல்லி விட்டு வந்திருக்க வேண்டும். என்ன செய்துள்ளார்கள். வெளியில் வீரியமிக்க போராட்டம் என அறிவித்தார்கள். அந்தரங்கத்தில் அடிமைத்தனமாய், பேடித்தனமாய், பெட்டைத்தனமாய் "நாங்கள் வீரியமிக்க போராட்ட முடிவு எடுத்தாலும் நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்" என கெஞ்சி கூத்தாடி மண்டியிட்டு விட்டு வந்துள்ளார்கள். இதை நாம் சொல்லவில்லை. அவர்கள் தந்துள்ள வாக்கு மூல ஆதாரமே இது.

கோழைத்தனமான பேடித்தனமான, பெட்டைத்தனமான சந்திப்பு.

இப்பொழுது மேற்கண்ட ஆதாரத்துடன் நிரூபிக்கிறோம். வீரியமிக்க போராட்டங்கள் என த.த.ஜ.வினர் அறிவித்த அனைத்து போராட்டங்களும் ஆட்சியாளர்களை எச்சரிப்பதற்காக உள்ளது அல்ல. மக்களை ஏமாற்றுவதற்காகவே செய்துள்ளார்கள். இவர்களது அந்த சந்திப்பு உண்மையானதாக இருந்திருந்தால் அதை அப்பொழுதே வெளியிட்டிருப்பார்கள். திண்டுக்கல் பொதுக்குழுவிலேயே சொல்லி வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த சந்திப்பு கள்ளத்தனமான சந்திப்பு. இவர்களது அடிமைத்தனத்தை பேடித்தனத்தை, பெட்டைத்தனத்தை ஆட்சியாளர்களுக்கு எத்தி வைப்பதற்காக நடந்த கோழைத்தனமான பேடித்தனமான, பெட்டைத்தனமான சந்திப்பு. இதை அவர்கள் மூலமே வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

அவர்களிடம் போய் பி.ஜெ. ஒட்டிக் கொண்டார்.

த.த.ஜ. மாநில நிர்வாகிகள் அனைவரும் வரலாறு இல்லாதவர்கள் வரலாறு தெரியாதவர்கள். எனவே வரலாறு தெரியாத வரலாறு இல்லாத அவர்களின் காதில் பூ சுற்றும் வேலையை பி.ஜெ. செய்து வருகிறார் என்பதும் அந்த நிகழ்ச்சி மூலம் வெளிப்பட்டுள்ளது. த.மு.மு.க. துவங்கப்பட்ட வரலாறு தெரியாத த.த.ஜ. மாநில நிர்வாகி கேள்வி கேட்கிறார். அதற்கு முந்தைய நிலையில் ஜவாஹிருல்லாஹ் இருந்தார் என்று பாக்கர் பி.ஜெ.க்கு பயந்து மெதுவாகச் சொல்கிறார். உண்மை நிலை என்ன ஜவாஹிருல்லாஹ், இஸ்மாயில் நாஜி போன்றவர்கள்தான் இப்படி ஒரு அமைப்பு தேவை என்ற முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் போய் பி.ஜெ. ஒட்டிக் கொண்டார்.

பி.ஜெ.யை சேர்க்க பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குண்டு வெடிப்புகளிலும் கொலைகளிலும் ஈடுபட்ட பி.ஜெ. கைது செய்யப்பட்டால் ஜாக் அவருக்காக குரல் கொடுக்காது என்பது பி.ஜெ.க்குத் தெரியும். ஏனென்றால் பி.ஜெ. தீவிரவாதத்தில் ஈடுபட்டதால்தான் அவரிடமிருந்து ஜாக் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கி இருந்தது. எனவேதான் ஜவாஹிருல்லாஹ்விடம் போய் பி.ஜெ. ஒட்டிக் கொண்டார். பி.ஜெ.யின் சுய ரூபம் தெரியாத, பி.ஜெ. ஒரு அப்பாவி என்று நம்பிய ஜவாஹிருல்லாஹ் சேர்த்துக் கொண்டார். சமுதாய பாதுகாப்புக்காக அரசியல் அமைப்பு துவங்குவது சம்பந்தமாக ஜவாஹிருல்லாஹ், இஸ்மாயில் நாஜி போன்றவர்கள் பலரை சந்தித்து வந்தார்கள். பி.ஜெ.யை சேர்க்க பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு வரலாற்றுப் பொய்யையும் பி.ஜெ. கூறியுள்ளார்.

அப்பொழுது மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணியில் பி.ஜெ. பேசிய பேச்சை சுட்டிக் காட்டி பி.ஜெ.யை சேர்த்துக் கொள்ள பி.ஜெ.க்காக பரிந்து பேசியவர் இஸ்மாயில் நாஜி. இதை மறைப்பதற்காகவும் இன்னொரு விஷயத்தை மறைப்பதற்காகவும் இஸ்மாயில் நாஜி மீது அவ்வப்போது குற்றச்சாட்டு கூறி வருகிறார் பி.ஜெ. அது என்ன விஷயம் என்பதை பிறகு பார்ப்போம். 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி நடந்த கலவரத்தை ஒட்டி மேலப்பாளையத்திலும் கோவையிலும் முஸ்லிம்கள் தடாவில் கைது செய்யப்பட்டார்கள் என்று ஒரு வரலாற்றுப் பொய்யையும் பி.ஜெ. கூறியுள்ளார்.

சமுதாய நலனில் அக்கரை இல்லாத பி.ஜெ. வர மறுத்து விட்டார்.

வரலாறு இல்லாத, வரலாறு தெரியாத தலையாட்டி பொம்மைகள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மேலப்பாளையம் முஸ்லிம்களுக்கு பல வகைகளிலும் ரூபாய் 3 லட்சம் வரை வசூலித்து உதவினோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமாக உதவும் பணத்தை கொடுக்க வாருங்கள் என பி.ஜெ.யை மேலப்பாளையம் ஜாக் பொருளாளரும் மஸ்ஜிதுர்றஹ்மான் பவுண்டேஷன் கமிட்டி பொருளாளருமான சிபகதுல்லாஹ் மூலம் அழைத்தோம். சமுதாய நலனில் அக்கரை இல்லாத பி.ஜெ. வர மறுத்து விட்டார்.

பொய் சொல்லியே பி.ஜெ. அப்பொழுது வசூலித்தார்.

இன்று ரயில்வே அமைச்சராக இருக்கும் மாண்புமிகு வேலு அவர்கள்தான் அன்று நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். 45 பேர் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் அப்பொழுதே வேலு அவர்கள் மூலம் குளோஸ் செய்யப்பட்டு விட்டது. பாபரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி நடந்த கலவர வழக்கில் யார் மீதும் தமிழ் நாட்டில் தடாப் போடப்படவில்லை. பி.ஜெ.யின் தூண்டுதலினால் 1993 ஆகஸ்டில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில்தான் உண்மையான குற்றவாளியான பி.ஜெ.யை விட்டு விட்டு அப்பாவிகள் மீது தடா போடப்பட்டது. அந்த தடாக் கைதிகள் குடும்பத்துக்குத்தான் உதவுகிறேன் என்ற பெயரால் பி.ஜெ. தனிப்பட்ட முறையில் வசூல் செய்தார். தனிப்பட்ட முறையில் வசூலித்துள்ளார் என்பதை பி.ஜெ. இப்பொழுது ஒப்புக் கொண்டு விட்டார். ஐவர்க் குழு அமைத்து இருப்பதாக பொய் சொல்லியே பி.ஜெ. அப்பொழுது வசூலித்தார். http://mdfazlulilahi.blogspot.com/1996/01/blog-post.htmlபழனிபாபா மீது அவதூறு பரப்பியும் வசூலித்தார். http://mdfazlulilahi.blogspot.com/1996/04/blog-post.html

பாக்கர் மூலம் சிறைவாசிகளை ஏமாற்றி.

பி.ஜெ. அதில் மோசடி செய்துள்ளார். ஒரே ஒரு முறை மட்டும் கொடுத்து விட்டு மாத மாதம் கொடுத்தாக ஏமாற்றினார். இது பல தடாக் கைதிகளின் குற்றச்சாட்டு.; வசூல் செய்தால் வரவு செலவு கணக்கு காட்டனும் எனச் சொல்லும் பி.ஜெ. இதில் ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை அவர் கணக்கு காட்டவே இல்லை. தடாக் கைதிகள் குடும்பத்தினருக்கு மாத மாதம் ஆள் அனுப்பி பணம் கொடுத்து வந்ததாக பொய் கூறி உள்ளார். தடாக் கைதிகள் குடும்பத்தினருக்கு மாத மாதம் பணம் கொடுத்து இருந்தால் அந்த குடும்பத்தினரிடம் கையெழுத்து வாங்கி இருப்பார். ஆனால் குடும்பத்தாருக்கு உதவுவதாக பாக்கர் மூலம் சிறைவாசிகளை ஏமாற்றி சிறைவாசிகளிடம் கையெழுத்து வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பி ஏமாற்றினார். இப்படிப்பட்டவர்தான் சிறைவாசிகள் பெயரால் மீண்டும் வசூல் ராஜா வேலையை ஆரம்பித்துள்ளார். சிறைவாசிகளை ஏமாற்றி பி.ஜெ. எழுதி வாங்கிய கடிதங்களை பாருங்கள்.






ஆதாரத்தையும் வரவு செலவு கணக்கையும் வெளியிடட்டும்.

ஒன்றில் முஹம்மது அப்துல் அஸ்லம் என எழுதப்பட்டுள்ளது அதில் அவரது கையெழுத்து இல்லை. இந்தக் கடிதங்களைப் பார்த்தாலே இவை ரெடிமேடு கடிதங்கள் என்று புரியலாம். இதில் உள்ள கடிதங்களில் மேலப்பாளையவாசி என்ற முறையில் 2000இல் சித்தீக், மூஸா, ஞானியார் போன்றவர்களின் பெற்றோர்களிடம் விசாரித்தேன். பி.ஜெ. பணம் அனுப்பி கொடுத்தாரா? என்று கேட்டதற்கு. பி.ஜெ.யா? எங்களுக்கா? என்ன பணம் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி சிறைவாசிகள் பெயரால் பொய்யாக கடிதம் அனுப்பி ஏமாற்றியவர்தான் இன்றைய த.த.ஜ. தலைவர் பி.ஜெ. இவர் ஒழுங்காக குடும்பத்தாரிடம் கொடுத்து இருந்தால் எந்த எந்த குடும்பத்தாருக்கு எவ்வளவு கொடுத்தார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடட்டும். பிராடு பி.ஜெ.யின் பின்னால் உள்ள ஒவ்வொருவருக்கும் விடுக்கும் சவால் இது. ஒரு பிராடின் பின்னால் பிராடுகளால்தான் அணி வகுக்க முடியும். பி.ஜெ.யின் பின்னால் உள்ளவர்கள் பிராடுகள் இல்லை என்றால் மேற்கண்ட குடும்பத்தாருக்கு பணம் கொடுத்த ஆதாரத்தையும் வரவு செலவு கணக்கையும் வெளியிடட்டும்.

அதிகமாக சுன்னத் வல் ஜமாஅத்தினர் கலந்து கொண்டதே காரணம்.

இதுவரை ஒவ்வொன்றிலும் ஜாக்கை விமர்சித்து வந்த பி.ஜெ. கோவை அய்யூப், மசூது, ஏர்வாடி சிராஜ் போன்றவர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டதால் அடக்கி வாசித்துள்ளார். இஸ்மாயில் நாஜி பற்றி பி.ஜெ. பரப்பி வரும் அவதூறுக்கு அவர் பதிலடி கொடுக்காததால் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார். தனக்கு ஆபத்து ஏற்படும்பொழுதெல்லாம், தனக்கு தேவைப்படும்பொழுதெல்லாம் முஸ்லிம்களே வாருங்கள் என்பதும். காரியம் முடிந்ததும் எங்க ஆட்கள் மட்டும்தான் வந்தார்கள் என்று பிதற்றுவதும் பி.ஜெ.யின் வாடிக்கை. மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி வெற்றிக்கும் பத்திரிக்கை திருடனான பி.ஜெ.க்கும் பள்ளித் திருடன்களுக்கும் பத்திரத் திருடன்களுக்கும் எள்ளளவல்ல எள் மூக்கின் முனை அளவும் சம்பந்தம் இல்லை. தவ்ஹீதுவாதிகள் மட்டும் கூடினால் 200பேர் கூட வர மாட்டார்கள் என்று ரகசிய வாக்கு மூலத்தில் பி.ஜெ. கூறி இருக்கிறார். மேலப்பாளையம் தடா எதிர்ப்பு பேரணி வெற்றிக்கு அதிகமாக சுன்னத் வல் ஜமாஅத்தினர் கலந்து கொண்டதே காரணம்.

மாட்டினால் இஸ்மாயில் நாஜி மாட்டட்டும்.

முஸ்லிம் பேரவை தலைவராக பி.ஜெ. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர். சிந்தாதிரிப் பேட்டையில் குண்டு வெடிப்பு நடக்கிறது. பி.ஜெ.யின் பினாமியான மவுலவி முஸ்தபா ரஷhதி என்பவர் அதில் பலியாகிறார். அப்பொழுது தற்கொலை தாக்குதல் கூடும் என்று பத்வா வழங்கிய பி.ஜெ. மவுலவி முஸ்தபா ரஷhதிக்காக காயிப் ஜனாஸா தொழுகை தொழுதிருக்கிறார். அவரது உடல் இன்றும் அடக்கப்படாமலே இருக்கிறது. அப்பொழுதுதான் பி.ஜெ. இதுவரை அரசால் கண்காணிக்கப்படாதவனாக நான் இருக்கிறேன். சிந்தாதிரிப் பேட்டையில் குண்டு வெடித்த நிலையில் புதிய ஒரு அமைப்புக்கு தலைவராக இருந்தால் அரசு அதிகாரிகளின் கவனம் என் மீது திரும்பி விடும். எனவே முஸ்லிம் பேரவை தலைவர் பதவியை இஸ்மாயில் நாஜி தலையில் கட்டி விடுவோம். மாட்டினால் இஸ்மாயில் நாஜி மாட்டட்டும் என பிளான் பண்ணி தஞ்சையில் இஸ்லாமிக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கூட்டத்தைக் கூட்டுகிறார்.

இஸ்மாயில் நாஜி அவர்களை தலைவராக தேர்வு செய்கிறார்கள்.

பி.ஜெ. செய்து வைத்த செட்டப்புபடி ஜாக் என்ற அமைப்பில் கமாலுத்தீன் மதனி என்ற அமீரின் கீழ் இருப்பதால் பி.ஜெ. தலைவராக இருப்பது அமீருக்கு மேல் ஒரு அமீர் என்கிற மாதிரி உள்ளது. எனவே பி.ஜெ. தலைவராக இருப்பது சரி இல்லை. என்பது உட்பட பி.ஜெ. சொல்லிக் கொடுத்த நாடக வாசகங்களை பிர்தவ்ஸி, பக்ரி போன்றவர்கள் பேசி முடிக்கிறார்கள். இந்த தஞ்சை கூட்டத்திற்கு இஸ்மாயில் நாஜி அவர்கள் செல்லவில்லை. பி.ஜெ.யின் சதி திட்டப்படி கூட்டத்தில் இஸ்மாயில் நாஜி அவர்கள் இல்லாத நிலையில் அவரது ஒப்புதல் பெறாமல். இஸ்மாயில் நாஜி அவர்களை தலைவராக தேர்வு செய்கிறார்கள்.

இஸ்மாயில் நாஜி அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க மறுக்கிறார்கள்.

மறுநாள் அதிகாலையில் பஜ்ர் நேரத்தில் பாக்கரும் அப்துல் காதர் மஹ்ஸனி என்ற மாலிமாரும் இஸ்மாயில் நாஜி அவர்கள் வீட்டுக்கு செல்கிறார்கள். இஸ்மாயில் நாஜி அவர்களை முஸ்லிம் பேரவை தலைவராக தேர்வு செய்த விபரத்தை சொல்கிறார்கள். இஸ்மாயில் நாஜி அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். 6 மாதத்திற்கு எந்த வெளி வேலைகளும் செய்ய முடியாது என்பதற்கான குடும்ப சூழல்களை ஓபனாகவே சொல்லி இஸ்மாயில் நாஜி அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்க மறுக்கிறார்கள். உங்க குடும்ப சூழல்களுக்காக நீங்கள் 6 மாதத்திற்கு எந்த செயல்பாடும் பண்ண வேண்டாம். பெயரளவில் தலைவராக இருங்கள். செயல்பாடுகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று நிர்ப்பந்தப்படுத்துகிறார்கள். இஸ்மாயில் நாஜி அவர்கள் முடியாது என்று எவ்வளவோ மறுத்தும் பி.ஜெ.யின் சதி திட்டப்படி முஸ்லிம் பேரவை தலைவர் நீங்கள்தான் என இஸ்மாயில் நாஜி அவர்களிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறார்கள்.

இது சதி செயலா இல்லையா?

சிந்தாதிரிப் பேட்டையில் குண்டு வெடித்த நிலையில் புதிய ஒரு அமைப்பான முஸ்லிம் பேரவைக்கு தலைவராக இருப்பது ஆபத்து என்பதால்தான் பி.ஜெ. இஸ்மாயில் நாஜி தலையில் வைத்து கட்டினார். இது பி.ஜெ. செய்த சதி செயல் என்பதை இஸ்மாயில் நாஜி அவர்கள் இதுவரை உணர்ந்த மாதிரி தெரியவில்லை. பி.ஜெ.யின் சதி திட்டப்படி இஸ்மாயில் நாஜி அவர்களை தலைவராக ஆக்கியதும் சுகமான சுமைகள் சினிமாவை பார்த்த பி.ஜெ. அடுத்த பணிக்கு ஆலோசனை சொல்லி தூண்டி விடுகிறார் பி.ஜெ.யின் தூண்டுதலால் சுகமான சுமைகள் சினிமாவில் உள்ளபடி பகவத் கீதையில் பார்சல் குண்டு அனுப்பப்படுகிறது. நாகூரில் குண்டு வெடித்து கலவரமும் வெடிக்கிறது. 6 மாதத்திற்கு எந்த செயல்பாடும் பண்ண வேண்டாம். பெயரளவில் தலைவராக இருங்கள் என சொல்லி விட்டு அடுத்த வாரமே கூப்பிட்டால் இது சதி செயலா இல்லையா?

எம்.ஜி.ஆர். அவர்கள் குணங்குடி ஹனீபா அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

நாகூர் கலவரத்தின் போது பி.ஜெ. எங்கும் செல்லவில்லை. இதை ரகசிய கூட்டதில் அவரே வாக்கு மூலம் அளித்துள்ளார். ஆனால் இப்பொழுது தான் களப்பணி ஆற்றியதாக தலையாட்டி பொம்மைகளிடம் அவிழ்த்து விட்டுள்ளார். முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக 1985 முதலே குணங்குடி ஹனீபா தனது த.மு.மு.க. மூலம் போராடி வந்திருக்கிறார். பல உண்ணாவிரதங்களில் அவரும் அவரது பிள்ளைகள் மட்டுமே இருந்துள்ளனர். 1987இல் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். உடனே அப்பொழுது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் குணங்குடி ஹனீபா அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். 26.11.87 வியாழன் அன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலக புதிய கட்டிடத்தின் 10ஆவது மாடியில் வைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பின்னர்தான் ராமதாஸ் அவர்கள் குணங்குடி ஹனீபாவை அழைத்து பா.ம.க. பொருளாளராக ஆக்கினார்.

ஒழுகி விட்டு போயிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடத்தியவர் குணங்குடி ஹனீபாதான். இப்படிப்பட்ட குணங்குடி ஹனீபா மீதும் பி.ஜெ. அவதூறுகளை கூறாமல் இல்லை. ஜெயலலிதாவிடம் 2 லாரியும் அவரது இரண்டு பையன்களுக்கு டாக்டர் சீட்டும் வாங்கி விட்டார் என்று கதைகளை கட்டி விட்டார். பாக்கர் கைது செய்யப்பட்டதும் அடுத்து பி.ஜெ.தான் என்று ஆனதும் பி.ஜெ.யை காப்பாற்ற குணங்குடி ஹனீபா, இன்ஜினியர் அப்துல்ஸமது, விஞ்ஞானி அப்துல் ஜலீல் என ஒவ்வொரு வீடாக அழைந்தவர் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள்தான். ராஜகோபலான் கொலை வழக்கிலிருந்து பாக்கரையும் பி.ஜெ.யையும் காப்பாற்றி விட்டவர்கள் ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர் அலியும் தான். இந்த வரலாறு தெரியாதவர்களும் நன்றி கெட்ட பாக்கரும் பி.ஜெ.யும் ஓலைப்பாயில் அவர்கள் எழுதியுள்ளது ஒழுகி விட்ட மாதிரி ஒழுகி விட்டு போயிருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு