தவ்ஹீது கொள்கைக்கு வந்த எதிர்ப்பா?

அன்று சினிமா நடிகர் நாடு கடத்தப்பட்டார். இன்று சின்னத் திரை நடிகர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

வெளிநாடுகளில் தனக்கு ஏற்பட்டவைகளை கேவலமானதாக, அவமானமாகக் கருதி வெட்கப்படவில்லை, வேதனைப்படவில்லை என்கிறார் பி.ஜெ. அது உண்மையானால் வளைகுடாவில் நடந்தது என்ன? இலங்கையில் நடந்தது என்ன? என்று டி.வி.க்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்? மலேசியாவில் நடந்தது என்ன? என்று ஏன் பொதுக் கூட்டம் போட்டார். அதை டி.வி.க்களில் ஏன் ஒளி பரப்பி வருகிறார்?

அந்தக் காலத்தில் அவர் நாடு கடத்தப்படவில்லை.

இப்பொழுது பிளாக் இண்டியன் முத்திரை குத்தி எந்த மலேசிய நாட்டிலிருந்து பி.ஜெ. நாடு கடத்தப்பட்டாரோ அந்த மலேசியாவுக்கு இலங்கை, சிங்கப்பூர் வழியாக 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்றார். தவ்ஹீது பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு நல்ல முறையில் நாடு திரும்பினார். தவ்ஹீது பிரச்சாரத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் மட்டுமே இருந்த காலம் அது. ஆதரவாளர்கள் மிக மிக குறைவாக இருந்த காலம் அது. தவ்ஹீது கொள்கைக்கு எதிர்ப்பாளர்கள் மிக மிக அதிகமாக இருந்த காலம் அது. அந்தக் காலத்தில் அவர் நாடு கடத்தப்படவில்லை. இப்பொழுது நாடு கடத்தப்பட்டது ஏன்?

அதே 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மலேசியா, சிங்கப்பூருக்கு போகும் வழியில் பி.ஜெ. இலங்கைக்கு சென்றார். பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். நல்ல முறையில் இலங்கையிலிருந்து திரும்பினார்.

1993 டிசம்பரில் இலங்கை சென்ற பி.ஜெ. மவுலவி ஷர்புத்தீன் அணியினருடன் கந்தூரி வைபவங்களில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படும் உணவுகளை உண்பது ஹராமா? ஹலாலா? என்ற தலைப்பில் விவாதம் செய்தார். பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார். 1994 ஜனவரியில் நல்ல முறையில் நாடு திரும்பினார்.

அதன் பிறகு இன்னொரு முறை சென்று பி.ஜெ. காபிராகி விட்டாரா? என்ற தலைப்பில் இலங்கை உமர் அலியுடன் விவாதம் செய்தார். பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். பிரச்சனைகள் இன்றி நாடு திரும்பினார்.

சுன்னத் ஜமாஅத் மவுலவிகளுடன் விவாதம் செய்ய 2001இல் பி.ஜெ. இலங்கை சென்றார். மத்ஹபுகள் சம்பந்தமாக விவாதங்கள் செய்தார். பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். விவகாரங்கள் இன்றி நாடு திரும்பினார்.

இப்பொழுது நாடு கடத்தப்பட்டது ஏன்?

இப்படி பல முறை இலங்கை சென்று வந்த பி.ஜெ. 2005 ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கை சென்றார். இப்பொழுது மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மாதிரி இலங்கையிருந்தும் நாடு கடத்தப்பட்டார். தவ்ஹீது பிரச்சாரத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் மட்டுமே இருந்த காலத்தில், ஆதரவாளர்கள் மிக மிக குறைவாக இருந்த காலத்தில், தவ்ஹீது கொள்கைக்கு எதிர்ப்பாளர்கள் மிக மிக அதிகமாக இருந்த காலத்தில் இலங்கையிருந்து பி.ஜெ. நாடு கடத்தப்படவில்லை. இப்பொழுது நாடு கடத்தப்பட்டது ஏன்?

அப்படியானால் விவகாரம் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனைகள் அல்ல. பி.ஜெ. என்ற தனி நபருக்கு உள்ள வில்லங்கங்கள்தான் பிரச்சனை என்பதை விளங்கிக் கொள்ளலாம். பி.ஜெ. என்ற தனி நபர் தனக்குள்ள வில்லங்கங்களைத்தான் தவ்ஹீது கொள்கைப் பிரச்சனை என்று பொய் சொல்லி திசை திருப்பி ஆதாயம் தேடி வருகிறார்.

இலங்கையிருந்தும் தான் நாடு கடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

2005இல் இலங்கையிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த பி.ஜெ. அப்பொழுது தான் நாடு கடத்தப்படவில்லை என்று வாதித்தார். தனக்கு வி.ஐ.பி. விஸா வர இருப்பதாகப் பொய் சொன்னார். மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த பிறகு இலங்கையிருந்தும் தான் நாடு கடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.

துபையில் எந்தக் கூட்டமும் நடக்கவில்லை என்று பொதுக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

துபை சென்று வந்தபொழுது அந்த நாட்டு மன்னராயிருந்தவர் இறந்து 40 கழியவில்லை. அதனால் 10.12.2004 தேதிய கிரசண்ட் ஸ்கூல் நிகழ்ச்சி மட்டும் ரத்தானது. மற்றபடி எல்லாக் கூட்டங்களும் திட்டமிட்டபடி நடந்ததது என பொய்களை கட்டி விட்டார். களவாடிய பத்திரிக்கையில் படத்துடனும் செய்தி வெளியிட்டார். இப்பொழுது மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த பிறகு துபையில் எந்தக் கூட்டமும் நடக்கவில்லை என்று பொதுக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

பி.ஜெ. வெளியேற்றப்பட்டதற்குரிய காரணத்தை வெளிப்படுத்த உள்ளோம்.

இதுபோல் மலேசியா, கத்தர், இலங்கை, துபை என ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டதற்குரிய உண்மைக் காரணத்தை ஒப்புக் கொள்ளும் காலம் விரைவில் வரும். இன்ஷாஅல்லாஹ். மலேசியா,இலங்கை, துபை என ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்பட்ட பிரச்சனைகளையும் கத்தர் நாட்டில் வெளியான விஸா ரத்து செய்யப்பட்டதையும் உடனுக்குடன் வெளிப்படுத்திய நாம் ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பி.ஜெ. வெளியேற்றப்பட்டதற்குரிய காரணத்தை வெளிப்படுத்த உள்ளோம்.

தீவிரவாத குற்றச்சாட்டின் காரணத்துக்காகத்தான்.

மலேசியாவிலிருந்து தன்னைத் தவிர வேறு யாரையும் நாடு கடத்தவில்லை என்ற பொய்யையும் கூறி அனுதாபம் தேடுகிறார். நடிகவேள் என்றழைக்கப்பட்ட எம்.ஆர். ராதா 1973இல் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். எம்.ஜி.ஆரை சுட்டவர் என்பதற்காக அன்றைய மேடை (நாடக) நடிகரும் சினிமா நடிகருமான எம்.ஆர். ராதாவுக்கு தீவிரவாத எதிர்ப்பு காட்டப்பட்டது. எனவே மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அதே தீவிரவாத குற்றச்சாட்டின் காரணத்துக்காகத்தான் இன்றைய மேடை நடிகரும் சின்னத் திரை சிறப்பு நடிகருமான பி.ஜெ. மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கிறார். அன்று சினிமா நடிகர் நாடு கடத்தப்பட்டார். இன்று சின்னத் திரை நடிகர் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

தவ்ஹீது கொள்கைக்கு வந்த எதிர்ப்பாக காட்டி ஆதாயம் தேடி வருகிறார்.

மலேசியா, கத்தர், இலங்கை, துபை என ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் மனித நேய விரோதியும் தீவிரவாதியுமான பி.ஜெ. என்ற தனி நபர் மக்களால் எதிர்க்கப்பட்டு அரசாங்கத்தால் அடித்து விரட்டப்பட்டார். பி.ஜெ. என்ற தனி நபரான அந்த சமூக விரோதி தனக்கு வந்த எதிர்ப்பை வழக்கம் போல் தவ்ஹீது கொள்கைக்கு வந்த எதிர்ப்பாக காட்டி ஆதாயம் தேடி வருகிறார்.

ஈரானுக்குள் ஸுன்னி முஸ்லிம் பிரச்சாரகர்கள்.

கொள்கைப் பிரச்சனையால் எந்த நாடும் எந்த நாட்டவரையும் வெளியேற்றுவதில்லை. ஷியா கொள்கைக்கு முற்றிலும் எதிரான சவூதியில் ஷியா முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஈரானிலிருந்து ஷியா பிரிவு தலைவர்கள் சவூதிக்கு வந்து விட்டுச் செல்கிறார்கள். ஷியா கொள்கையில் ஊறிப் போன ஷியா கொள்கையின் தலைமைப் பீடமான ஈரானுக்குள் ஸுன்னி முஸ்லிம் பிரச்சாரகர்கள் வந்து பிரச்சாரம் செய்து விட்டுச் செல்கிறார்கள்.

கொள்கைப் பிரச்சனை அல்ல. பி.ஜெ. ஒரு தீவிரவாதி என்பதே காரணம்.

ஷியா ஸுன்னி முஸ்லிம்களுக்குள் பாகிஸ்தானில் அடித்துக் கொண்டனர். இன்று ஈராக்கில் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இரு கொள்கை உடைய அறிஞர்களும் வெளிநாடுகளிலிருந்து வந்து பிரச்சாரம் செய்து விட்டு போகத்தான் செய்கிறார்கள். பல அரபு நாடுகளில் போராக்களின் பள்ளிகள் மட்டுமல்ல இந்து, கிறிஸ்துவ, சீக்கிய மத கோயில்களும் உள்ளன. அந்தந்த மத பிரச்சாரகர்கள் வந்து பிரச்சாரம் செய்து விட்டுச் செல்லத்தான் செய்கின்றனர். எனவே பி.ஜெ.க்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் கொள்கைப் பிரச்சனை அல்ல. பி.ஜெ. ஒரு தீவிரவாதி என்பதே காரணம்.

ஆலீம் பிணத்தை அடையாளம் தெரியாத அனாதை பிணம் போல் ஆக்கி விட்டார்.

பள்ளிவாசலில் பேஷ் இமாமாக இருந்த முஸ்தபா ரஷாதி என்ற ஆலிம்ஸாவை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியவர் பி.ஜெ. சிந்தாதிரிப் பேட்டை குண்டு வெடிப்பில் முஸ்தபா ரஷாதி உயிரிழக்க காரணமாக இருந்தவர் பி.ஜெ. உயிரிழந்தது முஸ்தபா ரஷாதி என்பது அவரது குடும்பத்தாருக்கு தெரியாமல் இருக்க முஸ்தபா ரஷாதிபணம் அனுப்புவது போல் குறிப்பிட்ட காலம் வரை பணம் அனுப்பி ஏமாற்றினார். தான் பிடிபடாமல் இருக்க முஸ்தபா ரஷாதி என்ற ஆலீம் பிணத்தை அடையாளம் தெரியாத அனாதை பிணம் போல் ஆக்கி விட்டார். இன்று வரை அடக்காமல் ஐஸ் பெட்டியில் வைக்கச் செய்திருக்கிறார். இதை மறைக்க அனாதை பிணங்களை அடக்குவது போலும் விபத்தில் இறந்தவர்களுக்கு உதவுவது போலும் நடித்து வருகிறார்.

வேறு வேறு வழக்குகள் மூலம் உள்ளே தள்ள முயற்சிப்பது உலக நடப்பு.

1993இல் சேத்துப்பட்டில் நடந்த குண்டு வெடிப்பு முதல் தமிழகத்தில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணம் தான்தான் என்று ஒரு ரகசிய கூட்டதில் பி.ஜெ.வாக்கு மூலம் அளித்துள்ளார். இது போன்ற தகவல்களையும் 38 மவுலவிகள் கலந்து கொண்ட அந்த ரகசிய வாக்கு மூல ஆடியோ கேஸட்டையும் கேட்டுப் பார்த்த பின்தான் கத்தர் அரசு வெளியான விஸாவை ரத்து செய்தது. துபை உளவுத் துறை அவரை கண்காணித்தது. அந்த ஆடியோ கேஸட்டை கேட்டுப் பார்த்த பின்தான் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட விரும்பிய மலேசிய போலீஸ் பி.ஜெ.யை உள்ளே தள்ள முடிவு செய்தது. ஒரு நாட்டில் செய்த குற்றத்திற்கு வேறு நாட்டில் வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே சொந்த நாட்டில் பாம் வைத்த இது போன்ற தீவிரவாதிகள் நமது நாட்டிற்கு வரக் கூடாது என்பதற்காக வேறு வேறு வழக்குகள் மூலம் உள்ளே தள்ள முயற்சிப்பது உலக நடப்பு.

கோவை பாஷா போன்றவர்களை தவறுதலாக உள்ளே தள்ளி விட்டார்கள்.

நான் சொல்லும் இந்த ரகசிய வாக்கு மூல ஆடியோ கேஸட் ஆதாரத்தை பொய் என்று பி.ஜெ. மறுத்தால் என் மீது வழக்கு தொடரட்டும். அவர் வழக்குத் தொடர்ந்தால் அந்த ரகசிய வாக்கு மூல கேஸட்டைக் கொண்டே அவர் தீவிரவாதி என்பதையும் தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜெ.தான் என்பதையும் நான் நிரூபிப்பேன். இன்ஷாஅல்லாஹ். தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் மூல காரணமானவர் பி.ஜெ. அவரை விட்டு விட்டு அப்பாவிகளான குணங்குடி ஹனீபா, அப்துல் நாஸர் மதானி, சேத்துப்பட்டு வழக்கில் சம்பந்தமில்லாத கோவை பாஷா போன்றவர்களை தவறுதலாக உள்ளே தள்ளி விட்டார்கள்.

லுஹா வீட்டிலிருந்து மொட்டை ஈ-மெயில் அனுப்பினார்.

உண்மைக் குற்றவாளியான பி.ஜெ.யை கைது செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமாக அநியாயமாக சிறையில் வாடி விட்ட கோவை மற்றும் மேலப்பாளையவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். அநியாயமாக பாதிக்கப்பட்டு விட்ட அவர்களுக்கு அநியாயமாக சொத்து சேர்த்து விட்ட பி.ஜெ.யிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கி கொடுக்க வேண்டும். இப்படி இவரது சுய ரூபத்தை அடையாளம் காட்டியதால் சத்திய நேசன் sathiyanesan_2004@hotmail.com என்ற மெயில் ஐ.டி.யை உருவாக்கி குவைத்தில் உள்ள ரசூல் மைதீன் என்பவரைக் கொண்டு மொட்டை ஈ-மெயில் அனுப்பினார். பிறகு அதே ஐ.டி.யைக் கொண்டு சவூதியில் உள்ள மீரான் என்பவரிடமிருந்து மொட்டை ஈ-மெயில் அனுப்பினார். பிறகு தனது மூன் பப்ளிகேஷனிலிருந்து மொட்டை ஈ-மெயில் அனுப்பினார். அதன் பிறகு லுஹா வீட்டிலிருந்து மொட்டை ஈ-மெயில் அனுப்பினார்.

சத்திய நேசன்கள் என்ற ஷைத்தான்கள்.

சத்திய நேசன் என்ற பெயரில் மொட்டைக் கடிதம் போட்டவர்கள் ஏகத்துவம் ஆசிரியர் குழுவில் உள்ள பி.ஜே, லுஹா, செய்யது இபுறாஹீம் ஆகியவர்கள்தான் என்று பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன் என்ற தலைப்பில் அடையாளம் காட்டினோம். மறுத்தால் முபாஹலா பண்ணட்டும் என்று எழுதிய பின்தான் சத்திய நேசன் என்ற பெயரில் வந்த மொட்டைக் கடிதங்கள் நின்றன. அப்துர்றஹ்மான் ஆதம் ஆகிய புதிய பெயர்களிலான மொட்டைக் கடிதங்களும் சத்திய நேசன்கள் என்ற ஷைத்தான்கள் யார் என்று அடையாளம் காட்டப்பட்ட பிறகே வருகின்றன. அப்துர் றஹ்மான் என்ற பெயரிலும் ஆதம் என்ற பெயரிலும் மொட்டை கடிதங்கள் அனுப்பி வருவது ஒரு நபரே என்றும் அடையாளம் காட்டினோம்.

இது போன்ற பல மெயில்களை அனுப்பியவர்கள்தான் beauty_aunty@yahoo.com என்ற ஐ.டி. மூலமும் அனுப்பி இருக்கிறார்கள். இப்பொழுதும் அனுப்பி இருக்கிறார்கள். எங்கிருந்து அனுப்பி இருந்தாலும் யார் மூலம் அனுப்பி இருந்தாலும் அந்த மெயிலை நியாயப்படுத்தி இருக்கும் அபு நூராவாக இருந்தாலும் அவர்கள் அனுபவத்தை அவர்கள் குடும்பத்தில் அவர்களது ஜமாஅத்தில் அவர்கள் செய்து கொண்டிருப்பதைத்தான் அதில் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.