1428 ரமழான், ஷவ்வால் முதல் நாள் துவக்கம் பற்றிய அறிவிப்பு.

12.9.2007 புதன் அன்று நோன்பு துவங்கியது பற்றி தவ்பா ஜமாஅத் அறிக்கை.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா ஜமாஅத், மஸ்ஜித் தக்வா ஜமாஅத், பாளையங்கோட்டை தி.வா. ஜமாஅத், தென்காசி மஸ்ஜிதுர்றஹ்மான் ஜமாஅத், ஏர்வாடி மஸ்ஜிதுல் முஸ்லிமூன் ஜமாஅத், கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத், மற்றும் நாகர்கோயில், குளச்சல், நாகூர், ராமநாதபுரம், கோவை என பல பகுதிகளிலும் இன்று 12.9.2007 புதன் கிழமை புனிதமிகு நோன்பை துவங்கியுள்ளார்கள்.

எப்பொழுதும் முந்தக் கூடிய சவூதி, துபை, கத்தர் போன்ற வளைகுடா நாடுகளில் 13.9.2007 அன்றுதான் நோன்பு என்று நேற்று இரவு 9மணிக்கு இந்திய நேரம் 10.30 மணிக்கு அறிவிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மேற்கண்ட பரவலான பல பகுதிகளில் இன்று நோன்பு துவங்கியுள்ளது பரபரப்பாக உள்ளது. இது சம்பந்தமாக மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா ஜமாஅத் கீழ் காணும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா இமாம் அபுல் காஸிம் பிர்தவ்ஸி கூறுகையில் நாங்கள் மாதம் தோறும் பிறை பார்த்து வருகிறோம். 12.08.2007 ஞாயிறு அன்று அடுத்த மாதத்தின் துவக்கமான முதல் பிறையை பார்த்தோம். எனவே ரஜப் மாதம் பிறை 29துடன் முடிந்தது. 11.9.2007 அன்றுடன் ஷஃபான் 30நாள் முடிவடைந்து விட்டது. 12.9.2007 புதன் கிழமை நோன்பு துவங்கி விட்டது என்றார்.

மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா ஜமாஅத்தின் அறிக்கையில் 12.10.2007 வெள்ளியன்று நோன்புப் பெருநாள் என்றும் அன்று காலை மேலப்பாளையம் பசார் திடலான அல்லாமா இக்பால் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்கள்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு