ஸூனன் திர்மதீ.
60, ''நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர்'' என அனஸ் (ரலி) கூறியபோது ''நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள்?'' என்று கேட்டேன். ''ஒளூவை முறிக்கின்ற காரியங்கள் எங்களிடம் ஏற்படாதவரை ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளை நாங்கள் தொழுவோம்'' என்று அனஸ் (ரலி) கூறியதாக அம்ரு இப்னு ஆமிர் அல் அன்ஸாரி அறிவிக்கிறார்.

இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்ததாகும். ஹூமைத் என்பவர் அனஸ் (ரலி) வாயிலாக அறிவிக்கும் (இதே) ஹதீஸ் ஹஸன் கரீப் என்ற நிலையிலுல்லதாகும் என்று அபூகூறுகிறேன்.

குறிப்பு:- புகாரி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

பாடம் 45, ஒரு ஒளுவில் பல தொழுகைகள் தொழுதல்

61, நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்பவர்களாக இருந்தனர். (மக்கா) வெற்றியின் போது ஒருஒளூவின் மூலம் தங்களின் எல்லாத் தொழுகைகளையும் தொழுதார்கள். அப்போது (கால்களைக்கழுவுவதற்கு பதில்) தங்கள் காலுறைகள் மீது மஸஹ் செய்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ''இதற்குமுன் செய்திராத செயலை செய்கிறீர்களே!'' என்று கேட்டார்கள். ''நான் வேண்டுமென்றே அவ்வாறு செய்தேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள், என புரைதா (ரலி) அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலைமைந்ததாகும். (மேற்கூறிய அறிவிப்பாளர் வரிசையில் ஸூப்யான் ஸவ்ரீ வழியாக அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தி என்பவர் அறிவிப்பதாக உள்ளது.) ஸூப்யான் ஸவ்ரீ வழியாக அலி இப்னு காதிம் என்பவரும் இதை அறிவிக்கிறார். இந்த அறிவிப்பில் (தங்கள் உறுப்புக்களை) ஒவ்வொரு தடவை (கழுவி) ஒளூ செய்தார்கள் என்ற வரி அதிகமாக உள்ளது. (மேற்கூறிய ஹதீஸ் அல்கமா வழியாக ஸூப்யான் அறிவிப்பதாக உள்ளது.) இதே ஹதீஸை முஹாரிப் இப்னு திஸார் வழியாகவும் ஸூப்யான் அறிவிக்கிறார்கள். (மேற்கூறிய ஹதீஸ்கள் புரைதா (ரலி) என்ற நபித்தோழர் அறிவிப்பதாக அமைந்துள்ளது.) புரைதா (ரலி) அவர்களின் மகன் ஸல்மான் (இவர் நபித்தோழர் அல்ல) நேரடியாக அறிவிப்பது போல் முர்ஸலாகவும் இந்த ஹதீஸை அப்துர்ரஹ்மான் இப்னு மஹ்தீ அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்று அபூஈஸா கூறுகிறேன்.

ஒளூ முறியாமலிருக்கும் போது ஒரே ஒளூவின் மூலம் பல தொழுகைகள் தொழலாம் என்பதே அறிஞர் உலகின் முடிவாகும். விரும்பத்தக்கது சிறந்தது என்ற அடிப்படையில் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒளூ செய்வதை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். நபி (ஸல்) அவர்கள் லுஹரையும், அஸரையும் ஒரே ஒரே ஒளூவில் தொழுததாக ஜாபிர் (ரலி) வாயிலாக அறிவிக்கப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன்.

குறிப்பு:- இந்த 61-வது ஹதீஸை முஸ்லிம், அபூதாவூத் ,இப்னுமாஜா ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.

பாடம் 46, ஒரு பாத்திரத்தில் ஆணும், பெண்ணும் ஒளூசெய்தல்

62, நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்பை நிறைவேற்றுபவர்களாக இருந்தோம் என அன்னை மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள.

இது ஹஸன் ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். ஆணும் பெண்ணும் ஒரு பாத்திரத்தில் குளிப்பது தவறில்லை என்பதே அறிஞர்களில் பெரும்பகுதியினரின் முடிவாகும். இந்தக்கருத்து அலி (ரலி) ஆயிஷh (ரலி) அனஸ் (ரலி) உம்முஹானி (ரலி) உம்மு ஸூபய்யா அல்ஜூஹனிய்யா (ரலி) உம்முஸலமா (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது. (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அபஷ;ஷஃஸா என்பவர் இடம் பெறுகிறார்.) இந்த அபஷ;ஷஃஸாவுடைய இயற்பெயர் ஜாபிர் இப்னு ஸைத் என்பதாகும் என அபூஈஸா கூறுகிறேன்.

குறிப்பு:- புகாரி, முஸ்லிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

பாடம் 47, பெண் ஒளு செய்து எஞ்சிய தண்ணீரைப் பயன்படுத்தலாகாது!

63, பெண் ஒளூ செய்து மீதம் வைத்த தண்ணீரை (பயன்படுத்த) நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று பனீகிபார் வகையராவைச் சேர்ந்த நபித் தோழர் ஒருவர் அறிவித்ததாக அபூஹாஜிப் அறிவிக்கிறார்.

இந்தக்கருத்து அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் என்ற நபித்தோழர் வாயிலாகவும் அறிவிக்கப்படுகிறது, பெண் ஒளூசெய்து மீதம் வைத்த தண்ணீரில் ஒளூசெய்வதை மக்ரூஹ் (வெறுக்கத்தக்கது) என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். பெண்கள் ஒளூசெய்து மீதம் வைத்தது மக்ரூஹ் என்றும் அவர்கள் வாய்வைத்து அருந்தி மீதம் வைத்ததில் ஒளூசெய்வதில் தவறில்லை என்று இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் குறிப்பிடுகின்றனர், என்று அபூஈஸா கூறுகிறேன்.

குறப்பு:- இந்த ஹதீஸ் அபூதாவூத், நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது.

64, ஒரு ஆண் ஒரு பெண் ஒளூசெய்து மீதம் வைத்ததையோ, அல்லது அவள் அருந்தி மிச்சம் வைத்ததையோ (ஒளூசெய்யப்) பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹகம் இப்னு அம்ரு அல்கிபாரி (ரலி) அறிவித்ததாக அபூஹாஜிப் குறிப்பிடுகிறார்.

இது 'ஹஸன்' என்ற நிலையிலுள்ள ஹதீஸாகும். அபூஹாஜிப் என்பவரின் இயற்பெயர் ஸவாதா இப்னு ஆஸிம் என்பதாகும். (இந்த ஹதீஸில் ஒளு செய்து மீதம் வைத்ததையோ அல்லது அருந்தி மிச்சம் வைத்ததையோ என்று சந்தேகத்திற்கிடமான முறையில் கூறப்படுகிறது.) முஹம்மது இப்னு பஷ;ஷhர் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் சந்தேகத்திற்குரிய முறையிலன்றி பெண் ஒளு செய்து மிச்சம் வைத்த தண்ணீர் என்று மட்டும் குறிப்பிடப்படுகிறது என்று அபூஈஸா கூறுகிறேன்.

குறிப்பு:- அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.

பாடம் 48, இது பற்றி வந்துள்ள அனுமதி!

65, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒரு பாத்திரத்தில் குளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதில் ஒளு செய்ய விரும்பியபோது ''அல்லாஹ்வின் தூதரே! நான் குளிப்புக் கடமையானவளா இருந்து குளித்தேன்'' என்று அந்த மனைவிக் கூறினார்கள், ''அதனால் தண்ணீர் பயன்படுத்தத் தகாததாக ஆகாது'' என்று பதில் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

இது ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்திலமைந்த ஹதீஸாகும். ஸூப்யான் ஸவ்ரி, மாலிக், ஷhபியீ ஆகியோரின் கருத்தும் இதுவே என்று அபூஈஸா கூறுகிறேன்.

குறிப்பு:- அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஸிமாக் இப்னு ஹர்பு என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவரே எனினும் இக்ரிமா வாயிலாக இவர் அறிவிப்பவை மட்டும் பலவீனமானவை. இந்த ஹதீஸை இக்ரிமா வாயிலாகவே இவர் அறிவிக்கிறார்.

பாடம் 49, தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது!

66, ''அல்லாஹ்வின் தூதரே! மாதவிடாயத் துணிகளும், நாய்களின் மாமிசத் துண்டுகளும், நாற்றமான பொருட்களும் போடப்படுகின்ற ஷபுளா ஆ என்ற கிணற்றில் நாங்கள் ஒளு செய்யலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது ''தண்ணீர் தூய்மைப் படுத்தும் பொருளாகும். எப்பொருளுமே அதை அசுத்தப்படுத்தாது'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஸயீத் அறிவிக்கிறார்கள்.

இது ஷஹஸன் என்ற தரத்திலைமைந்த ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அபூ உஸாமா அவர்கள் இந்த ஹதீஸை (குழப்பமின்றி) உறுதியான சொற்களால் அறிவிக்கிறார்கள். அபூ ஸயீத் (ரலி) வழியாக இந்த ஹதீஸ் பல்வேறு வழிகளில் அறிவிக்கப்படுகின்றது. எனினும் அபூஉஸாமவைப் போல் அவ்வளவு அழகிய முறையில் மற்றவர்கள் அறிவிக்கவில்லை. இந்தக் கருத்து இப்னு அப்பாஸ் (ரலி) ஆயிஷh (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்படுகின்றது என்று அபூஈஸா கூறுகிறேன்.

குறிப்பு:- அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.