தொழுகையின் வழிகாட்டி.
ஐயம்:- 'ருகூவு' செய்யும்போது கவனிக்கவேண்டிய காரியங்கள் யாவை?
தெளிவு:- ருகூவு செய்யும்போது இரு கைகளையும் இரு முழங்கால் மீது வைக்கவேண்டும்.
''நாங்கள் எங்கள் கைகளை முழங்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டிருந்தோம்'' என்று முஸ்அப் இப்னு ஸஃது அவர்கள் தன் தந்தை வழியாக அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ருகூவு செய்யும்போது இரு கைகளையும் முழங்கால் மீது வெறுமனே வைத்து கொண்டிராமல் முழங்கால்களை இரு கைகளால் பிடித்துக்கொள்வது போல் வைக்கவேண்டும் அந்த சந்தர்ப்பத்தில் இரு கைகளும் வளையாமல் நேராக இருக்கவேண்டும், இருகைகளும் விலாப்புறத்தில் ஒட்டாத வகையிலும் இருக்கவேண்டும். இதற்குரிய ஆதாரங்கள் வருமாறு:-
''நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும்போது தன் இருகைகளையும், தனது முழங்கால் மேல் ''இரு முழங்கால்களையும் பிடித்துக் கொள்வது போல்'' வைத்தார்கள் 'நாண்' போல் நேராக வைத்தார்கள் இருகைகளும் தனது விலாப்புறங்களை விட்டும் அகற்றி வைத்தார்கள் என அபூ ஹூமைத் (ரலி) அறிவிக்கிறார்கள். திர்மிதீ, அபூதாவூதில் இது இடம் பெற்றுள்ளது.
ருகூவின் போது தலையை தொங்கப்போட்டுக்கொள்வதையும், நிமிர்த்திக்கொள்வதையும் தவிர்த்து இரண்டுக்கும் இடைப்பட்ட விதமாக தலையை வைக்கவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும்போது தன் தலையைத் தாழ்த்தவும் மாட்டார்கள் மாறாக இவ்விரண்டுக்கம் இடைப்பட்டவிதமாக வைப்பார்கள் என்று ஆயிஷh (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்து அபூ ஹூமைத் (ரலி) வழியாக நஸயீயிலும் இடம் பெற்றுள்ளது. குனிந்தோம், நிமிர்ந்தோம் என்று அவசரமாக ருகூவு செய்யக்கூடாது. நிறுத்தி நிதானமாக ருகூவு செய்யவேண்டும் இது முக்கியமான ஒரு கடமையாகும். 'திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்' என்று நபி (ஸல்) கூறியபோது ''அல்லாஹ்வின் தூதரே'' தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தனது ருகூவையும் ஸூஜூதையும் பூரணமாக செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அபூகதாதா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், ஹாகிம், தப்ரானி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிம் சமுதாயமே! ருகூவிலும், ஸூஜூதிலும் தன் முதுகுத் தண்டை செவ்வையாக வைக்காதவனுக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல் இப்னு ஷய்பான் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
தொழுகையில் கோழி கொத்துவது போல் (அவசரமாக) குனிந்து நிமிர்வதை நபி (ஸல்) தடுத்ததாக அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. ருகூவின் போதும், ஸஜ்தாவின் போதும் நிதானம் மிகவும் அவசியம் என்பதை இவை வலியுறுத்துகின்றன.
ஐயம்:- ருகூவின் போது என்ன ஓத வேண்டும்?
தெளிவு:- நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவில் ஸூப்ஹான ரப்பியல் அழீம் என்றும், தமது ஸஜ்தாவில் ஸூப்ஹான ரப்பியல் அஃலா என்றும் ஓதுவார்கள் என ஹூதைபா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஐயம்:- ருகூவு, ஸஜ்தாவில் மேற்கூறியதைத்தவிர எதனையும் ஓதலாமா?
தெளிவு:- இன்னும் பல்வேறு சொற்களை நபி (ஸல்) தமது ருகூவு, ஸஜ்தாக்களில் ஓதியுள்ளனர். அவற்றில் எதை வேண்டுமானாலும் ஓதிக்கொள்ளலாம்.
(1) நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ஸூப்பூஹூன், குத்தூஸீன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ் என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.
(2) ஸூப்ஹான கல்லா ஹூம்ம வபிஹம்திக அல்லாஹூம்மஃபிர்லீ என்பதை தனது ருகூவிலும், ஸஜ்தாவிலும் அதிக அளவில் நபி (ஸல்) ஓதுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இது இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது.
(3) ஸூப்ஹானகல்லா ஹூம்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹூம்மஃபிர்லீ என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ஓதுவார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
(4) நபி (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையில் ஸூப்ஹானதில் ஜபரூதி வல்மல கூத்தி வல்கிப்ரியாயி, வல்அழம்தி என்று ருகூவில் ஒதுவார்கள். அவ்பு இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் நஸயீ, அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
(5) அல்லாஹூம்ம லகரஃது, வபிக ஆமன்து, வலக அஸ்லம்து, வஅலைக தவக்கல்து, அன்த ரப்பி கஷிவு ஸம்ஈ, வபஸரீ, வதமீ, வலஹ்மீ, வஅழ்மீ, வஅஸபீ, லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்பதை நபி (ஸல்) அவர்கள் ஓதியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் நஸயியில் இடம் பெற்றுள்ளது. இந்த துஆக்களில் எதை வேண்டுமானாலும் ருகூவில் ஓதிக்கொள்ளலாம்.
ஐயம்:- ருகூவின் போது தனக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களை ஓத அனுமதி உண்டா?
தெளிவு:- ருகூவின்போதும், ஸஜ்தாவின் போதும் குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று அலி (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் நூல் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
ஐயம்:- ருகூவிலிருந்து எழும்போது என்ன கூறவேண்டும்? ருகூவிலிருந்து எழும்போது இரு கைகளையும் உயர்த்தவேண்டுமா?
தெளிவு:- நபி (ஸல்) அவர்கள் தொழுகையை துவக்கும் போது தம் தோள் புஜங்கள் வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும்போது இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து எழும்போது இவ்வாறு செய்வார்கள். மேலும் 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமீதா' என்றும் கூறுவார்கள். ஸஜ்தாவின் போது இவ்வாறு செய்யமாட்டார்கள். என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
ருகூவிலிருந்து எழும் போது கைகளை உயர்த்தவேண்டும். 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமீதா' என்று அப்போது கூறவேண்டும். என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.
ஐயம்:- இமாமைப் பின்பற்றி தொழும்போது பின்னால் இருப்பவர்கள் 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமீதா' என்று கூறவேண்டுமா?
தெளிவு:- இமாமைப் பின்பற்றும் போது பின்னால் இருப்பவர்கள் வேறு சில வார்த்தைகளைக் கூறவேண்டும். அவர்கள் 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமீதா' கூறக்கூடாது.
''இமாம் 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமீதா' கூறும்போது நீங்கள் 'அல்லாஹூம்ம ரப்பனாலகல் ஹம்து' என்று கூறுங்கள்! என்று நபி (ஸல்) கூறினார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து இமாம் ஸமீ அல்லாஹூ லிமன் ஹமீதா எனக் கூறும் போது நாம் மேற்கூறிய வார்த்தையைக் கூறவேண்டுமென்று தெளிவாகின்றது. மேலும் சில வார்த்தைகளையும் கூறலாம்.
'ரப்பனா லகல் ஹம்து (புகாரி)
ரப்பனா வலகல் ஹம்து (புகாரி)
அல்லாஹூம்ம ரப்பனா வலகல் ஹம்து (புகாரி)
அல்லாஹூம்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்லம்மாவாதி வமீல் அல் அர்ழீ, வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது (முஸ்லிம்)
அல்லாஹூம்ம ரப்பனா லகல் ஹம்து மில் அஸ்லம்மாவாதி வமீல் அல் அர்ழீ, வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி, லாமானிஅ லிமா அஃதைத, வலா முஃதிய லிமா மனஃத வலா யன் ஃபஷதல் ஜத்தி மின்கல் ஜத் (முஸ்லிம்)
ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி (புகாரி)
ஆகிய வார்த்தைகளையும் இமாமைப் பின்பற்றித் தொழுவோர் கூறிக்கொள்ளலாம்.
ஐயம்:- இமாமாக இருப்பவர், தனியாக் தொழுபவர் ஆகியோர் 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதா' என்பதை மட்டும் கூற வேண்டுமா? அல்லது மேற்கூறிய துஆக்களில் எதனையும் சேர்த்துக் கூறவேண்டுமா?
தெளிவு:- நபி (ஸல்) அவர்கள் . . . . பின்னர் 'ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதா' என்று கூறுவார்கள். அதன் பிறகு நிலைக்கு வந்தபின் 'ரப்பனா லகல் ஹம்து' என்று கூறுவார்கள் என அபூஹூரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
இமாமாக இருப்பவரும், தனியாகத் தொழுபவரும் இரண்டையும் கூற வேண்டுமென்பதை இதன் மூலம் அறியலாம்.
ஐயம்:- ருகூவிலிருந்து எழுந்து மேற்கூறியவற்றை ஓதியவுடன் உடனே ஸஜ்தாவுக்கு செல்லலாமா?
தெளிவு:- ''நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து உயர்ந்ததும் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கருதும் அளவுக்கு நிற்பார்கள்'' என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ருகூவிலிருந்து எழுந்தவுடன் சற்று நேரம் நிறுத்தி நிதானமாக நின்று அதன் பின்பே ஸஜ்தாவுக்கு செல்லவேண்டும்.
(வளரும் இன்ஷா அல்லாஹ்)

இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.
Comments