குறுக்கு விசாரனை

ஃ குனூத்தை ருகூவுக்கு முன் ஓதியதாக உபை இப்னு கஃபு (ரலி) அறிவிக்கும் ஹதீஸை எழுதியிருந்தீர்கள்! அந்த ஹதீஸில் 'வித்ரு' தொழுகை என்று கூறப்படவில்லையே!
''நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழும்போது ருகூவுக்குமுன் குனூத் ஓதுபவர்களாக இருந்தனர்' என்று அந்த ஹதீஸ் தெளிவாக வித்ருபற்றிக் குறிப்பிடுகின்றது. நாம் தான் வித்ரு தொழும்போது என்று ஹதீஸின் மூலத்தில் உள்ள வார்த்தையை விட்டிருக்கிறோம்.

ஃ ''முஸாபஹா'' இரண்டு கைகளில்தான் செய்ய வேண்டுமென்று ஹதீஸ் ஆதாரத்துடன் யூசுப் அன்ஸாரி மவ்லவி அவர்கள் எழுதி இருக்கிறார்களே! ஒருகையில்தான் முஸாபஹா என்று நீங்கள் கூறி வருவதன் காரணம் என்ன?

முஸாபஹா பற்றி வருகின்ற எல்லா ஹதீஸ்களிலும் 'ஒரு கை' வார்த்தையே இடம் பெற்றுள்ளது. 'இருகைகள்' என்ற வார்த்தை 'முஸாபஹா' பற்றி ஹதீஸ்களில் அறவே இல்லை. இரு கைகளால் 'முஸாபஹா' செய்வதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸை நீங்கள் கவனியுங்கள்! அதில் ''நபி (ஸல்) எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத்தரும் போது தன்னுடைய இரு கைகளால் என்னுடைய ஒரு கையைப்பிடித்துக் கொண்டார்கள்'' என்று புகாரியில் இடம் பெற்ற அந்த ஹதீஸ் கூறுகிறது. ஒருவரைச் சந்திக்கும் போது முஸாபஹா செய்வதைப் பற்றி இந்த ஹதீஸ் கூறவில்லை. ஒருவருக்கு ஒன்றைக் கற்றுக் கொடுக்கும் போது கற்றுக்கொடுப்பவர், தனது இரு கைகளால் மாணவரின் கையைப்பிடித்துக் கொண்டு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்கே அந்த ஹதீஸ் ஆதாரமாகும். அதிலும் கூட அந்த ஹதீஸ் இருவரும் இரண்டுகைகளை கொடுக்கவில்லை. மாறாக ஒருவர் இரு கைகளையும், மற்றவர் ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர் 'முஸாபஹா' ஒருகையில்தான் செய்யவேண்டும் என்று தெளிவாக பல ஹதீஸ்கள் கூறும்போது அதைவிடுத்து, முஸாபஹா பற்றிக் கூறாத ஹதீஸிலிருந்து சுற்றிவளைத்துக் கொண்டு ஏன் வரவேண்டும்?

ஃ காபிர்கள் ஷய்த்தானிடமிருந்து தான் குர்ஆன் இறங்கியது என்று சொல்லிக் கொண்டிருந்தபோது 56:79 வசனம் அது பற்றியே இறங்கியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்! ஆனால் பரேலவி ஏடு ஒன்று அது வீண் கற்பனை என்று கூறியுள்ளதே!

நாம் வீண் கற்பனையாக எழுதவில்லை. மக்கத்து காபிர்களில் சிலர் குர்ஆனைப்பற்றி இத்தகைய எண்ணம் கொண்டிருந்தனர் என்பதற்குத் திருக்குர்ஆன் அனேக இடங்களில் 26:210, 81:25 போன்ற வசனங்களில் இது ஷய்த்தானுடைய சொல் அல்ல என்று குர்ஆன் மறுக்கின்றது. அத்தகைய குற்றச்சாட்டை மக்கள் கூறி இராவிட்டால் இந்த மறுப்பு அவசியப்படாது. இதே வகையைச் சேர்ந்த வசனம் தான் 56:79 வசனமும். காபிர்களின் அந்த குற்றச்சாட்டை மறுத்திடவே அந்த வசனம் இறங்கியது என்று இப்னு கஸீர் அவர்கள் தமது தப்ஸீரில் ஊர்ஜிதம் செய்கிறார்கள் பரேலவி ஏடு குறிப்பிட்டது போல் நாம் எழுதியது வீண் கற்பனை அல்ல.

ஃ டிசம்பர் இதழில் குனூத் ஓத வேண்டிய அரபி பதத்தை மட்டும் எழுதிவிட்டு அதன் தமிழாக்கத்தைத் தராமல் குராபிகளின் பாணியை மேற்கொண்டது ஏன்?

ஹஸன் (ரலி) அவர்கள் ஓதிய குனூத்தின் பொருள் பின்வருமாறு: ''இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் (சேர்த்து எனக்கும்) நேர்வழி காட்டுவாயாக! நீ மன்னிப்பு அளித்தவர்களுடன் (சேர்த்து) எனக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! நீ பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்களுடன் (சேர்த்து) எனக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வாயாக! எனக்கு நீ வழங்கியவற்றில் பரக்கத் (புலனுணர்வுக்கு புலப்படாத சிறப்பருள்) செய்வாயாக! எனக்கு நீ விதித்துள்ளவற்றில் தீங்கானவைகளை விட்டும் என்னைக் காப்பாயாக! நீயே தீர்ப்பளிப்பவன் உன் மீது தீர்ப்பளிக்க முடியாது. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவன் நிச்சயமாக இழிவடையமாட்டான்''.

அலி (ரலி) அவர்கள் அறிவிக்கும் குனூத்தின் பொருள்:
இறைவா! உன் திருப்தியின் மூலம் அதிருப்தியை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன் உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத்தேடுகிறேன். உன் தண்டனையை விட்டும் உன்னிடமே காவல் தேடுகிறேன். உன்னை (உன்தகுதிக்குத்தக்கவாறு) புகழ நான் இயலமாட்டேன். நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொள்கிறாயோ அவ்வாறே நீ இருக்கிறாய்'' என்பது அதன் பொருள்.

ஃ குனூத் ஓதும் போது கைகளை உயர்த்த நபிவழியில் ஆதாரம் எதுவுமில்லை என்றும், ஆனால் இரு நபித்தோழர்கள் அவ்வாறு செய்தார்கள் என்று எழுதியுள்ளீர்கள்! நபி (ஸல்) செய்யாததை அந்த நபித்தோழர்கள் எவ்வாறு செய்யமுடியும்?

பொதுவாகவே மற்ற சந்தர்ப்பங்களில் துஆ ஓதும்போது கைகளை உயர்த்திட ஆதாரங்கள் உள்ளன. குனூத்தையும் மற்ற துஆக்களைப் போன்று கருதிக்கொண்டு அவர்கள் கையை உயர்த்தி இருக்கலாம். அல்லது குனூத்தின் போது நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தியதைப் பார்த்திருக்கக் கூடும். திட்டவட்டமாக கூறமுடியாது. இப்படி சந்தேகத்திற்குரியதாக உள்ளதால் கைகளை உயர்த்த வேண்டியது இல்லை என்று எழுதினோம். நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்தும் போது அதைப்பார்த்துதான் அந்த நபித்தோழர்கள் கைகளை உயர்த்தி இருப்பார்கள் என்று எவராவது கருதி கைகளை உயர்த்தினால் நாம் அவர்களை தடுக்க முடியாது.

ஃ ஒரு மாதம் ஓதி விட்டுவிட்ட குனூத்தையும், ஐங்காலத் தொழுகையில் சில சமயங்களில் ஓதிய குனூத்தையும் ருகூவிலிருந்து எழுந்தபின் ஓதியதாக புகாரி, முஸ்லிம், அஹ்மத், ஆகிய நூல்களில் உள்ளதைக் கூறி நீங்கள் அதன் அடிப்படையில் 'ருகூவுக்குப்பின்' என்று முடிவு செய்யாமல், ருகூவுக்கு முன்னால் ஓத வேண்டும் என்று எழுதியது ஏன்? புகாரி, முஸ்லிமில் இடம் பெற்ற அந்த ஹதீஸ்கள் பலவீனமானதா?

ஒருமாதம் ஓதிவிட்டு விட்ட குனூத்தையும், ஐங்காலத் தொழுகையில் ஓதிய குனூத்தையும் ருகூவுக்குப் பின்பு தான் நபி (ஸல்) ஓதினார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை, அந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையே! அதிலும் சந்தேகமில்லை. நீங்கள் ஐங்காலத் தொழுகையில் குனூத் ஓத நேர்ந்தால் ருகூவுக்குப் பின்பு தான் ஓத வேண்டும். ஆனால் வித்ருடைய ஐங்காலத் தொழுகையில் ருகூவுக்குப் பின் குனூத் ஓதிய நபி (ஸல்) அவர்கள், வித்ரு தொழுகையில் மட்டும் ருகூவுக்கு முன் ஓதியதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது. ஐங்காலத் தொழுகைப்பற்றிய ஹதீஸை ஐங்காலத் தொழுகை சம்பந்தமானது என்றும், வித்ரு பற்றிய ஹதீஸை வித்ரு சம்பந்தமானது எனவும் நாம் கூறுகிறோம். ஐங்காலத் தொழுகைக்கு உள்ளதை வித்ருக்கு பொருத்துவது எப்படி சரியாகும்? வித்ரில் 'ருகூவுக்கு முன்' குனூத் ஓதியதாக எந்த ஹதீஸூம் இல்லாவிட்டால், ஐங்காலத் தொழுகையின் குனூத் போலவே முடிவு செய்யலாம். வித்ருக்கு தனி முறை ஹதீஸில் வரும்போது அதை ஏற்பதே முறையாகும்.

ஃ 34:13 வசனத்தில் முந்தைய சமுதாயத்துக்கு உருவங்கள் அனுமதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்! அக்கருத்து அந்த வசனத்தில் இல்லையே!

சுலைமான் நபி அவர்களுக்கு ஜின்கள் போர்க்கருவிகளை உருவச்சிலைகளையும் (தமாஸீல்) செய்து கொடுத்ததாக அந்த வசனம் கூறுகிறது. ஒரு நபிக்கு அவர்களின் கட்டளைப் பிரகாரம் ஜின்கள் உருவச்சிலைகளைச் செய்து கொடுத்ததிலிருந்து அந்த நபிக்கும், அவர்களின் சமுதாயத்துக்கும் உருவச்சிலைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது என்று விளங்குகிறதல்லவா? அனுமதிக்கப்படாததை செய்து தருமாறு நபிமார்கள் கோரவும் பெறவும் மாட்டார்கள்.

வித்ருடைய குனூத்தை ருகூவுக்கு முன் ஓத வேண்டும் என்று எழுதியுள்ளீர்கள்! ஆனால் அஹ்மத், நஸயீ, ஆகிய நூல்களை மேற்கோள்காட்டி, ருகூவுக்குப் பின் குனூத் ஓத வேண்டும் என்று சிலர் கூறுகிறார்களே!

அஹ்மத், நஸயீ, ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களில் வித்ருடைய குனூத் பற்றிக் கூறப்படவில்லை. ஒரு மாதம் ஓதிவிட்டு விட்ட ஐங்காலத் தொழுகையில் ஓதும் குனூத் பற்றியே அந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. வித்ரு பற்றி தெளிவாக ஹதீஸில் 'ருகூவுக்கு முன்' என்று வருவதால் அதையே ஏற்கவேண்டும்.

இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.