தமிழ்நாட்டு மவ்லிதுகள்.
(நன்றி அல் ஜன்னத் 1989 ஜனவரி)

''மகத்தான இரட்சகரே!'' என்று தன்னுடைய அடிமைகளில் ஒருவரை அல்லாஹ்வே அழைத்துவிட்டான் என்ற நச்சுக் கருத்தைக் கூறுகின்ற பாடல் வரிகளை சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். இந்த நச்சுக் கருத்துக்கும் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் எந்த சம்பந்தமுமிருக்கவில்லை. இது போன்ற கருத்துக்களைத் தாங்கள் வாழ்ந்த காலத்திலேயே அந்தப் பெரியார் மறுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அவர்கள் தன் கையால் எழுதிய ''குன்யதுத் தாலிபீன், அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்புகளாகிய 'புதூஹூல் கைப்' 'அல் பத்ஹூர் ரப்பானி' ஆகிய நூல்களில் இவற்றைப் பரவலாக காணமுடியும்.

'இதா ரகன்த இலா கைரிஹி ப கத் அஷ்ரக்த (இறைவன் அல்லாத மற்றவர்கள் மேல் நீ நம்பிக்கை வைத்தால் நீ இணை வைத்துவிட்டாய்) என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது ஃபுதூஹூல் கைப் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

''அலைக பிதக்வல்லாஹீ அஸ்ஸவஜல்ல வலா தகஃப் அஹதன் ஸிவல்லாஹி, வலா தர்ஜீ அஹதன் ஸிவல்லாஹி, வகிலில் ஹவாயிஜ இலல்லாஹி அஸ்ஸவஜல்ல, வலா தக்தமித் இல்லா அலைஹி, வத்லுப்ஹா ஜமீஅன் மின்ஹூ, வலாதஸிக் கைரல்லாஹி அஸ்ஸவஜல்ல, அத்தவ்ஹீத், அத்தவ்ஹீத்''

பொருள்:- வல்லமையும் கண்ணியமுமிக்க அல்லாஹ்வின் அச்சத்தை விட்டுவிடாதே! அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் நீ அஞ்சாதே! அல்லாஹ்வைத்தவிர வேறு எவரிடமிருந்தும் எதையும் எதிர் பாராதே! எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்துவிடு. அவன் மீது மட்டுமே நம்பிக்கை வை! அவனிடமிருந்தே எல்லாத் தேவைகளையும் கேட்டுப் பெறு! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் பற்றிப் பிடிக்காதே! தவ்ஹீத்! தவ்ஹீத்!! அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் சொற்பொழிவுத் தொகுப்பாகிய 'புதூஹூல் கைப்' நூலில் இது இடம் பெற்றுள்ளது.

'லாமுயீன இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத்தவிர உதவுபவன் எவனுமில்லை) என்றும், 'பிஹி யுக்ஷபு குல்லுகம்மதின், வபலா இன், (அவன் மூலமே எல்லாக் கவலைகளும், சோதனைகளும் விலகும்) என்றும் தம் கைப்பட எழுதி குன்யதுத் தாலிபீன் நூலில் குறிப்பிடுகிறர்கள்.

''லாமஹூஸ லிமக்லூகின் மினல் கதரில் மக்தூரி அல்லதீ கத்தஃபீ லவ்ஹில் மஸ்தூர், வஇன்னல் கலாயிக லவ்ஜஹதூ அன் யன்பவுல் மர்அ, பிமா லம்யக்லிஹில்லாஹூ தஆலா லம் யக்திரூ அலைஹி, வலவ் ஜஹதூ அன்யலுர்ரூஹூ பிமா லம் யக்ளிஹில்லாஹூ லம்யஸ்ததீவூ''

பொருள்:- விதிப்பலகையில் இறைவனால் எழுதப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விதியிலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை. இறைவன் விதிக்காத ஒன்றை ஒரு மனிதனுக்கு வழங்க படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவைகள் ஆற்றல் பெற்றிருக்கில்லை. இறைவன் விதிக்காத ஒரு தீமையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்திவிட படைப்பினங்கள் அனைத்தும் முயன்றாலும் அதற்கு அவைகள் சக்தி பெற்றிருக்க மாட்டாது என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது குன்யதுத் தாலிபீன் நூலில் வரைந்துள்ளார்.

''இன்னஹூ கஸ்ஸமல் அர்ஸாக வகத்தரஹா பலா யஸூத்தஹா ஸாத்துன், வலாயம்னவுஹா மானிவுன், லா ஸாயிதுஹா யன்குஸூ வலாநாகிஸூஹா யஸீது, வலா நாயிமுஹா யக்ஷனு, வலா கஷனுஹா யன்அமு''

பொருள்:- இறைவன் (மனிதர்களின்) உணவைப் பங்கிட்டு நிர்ணயித்துவிட்டான். அதைத் தடுப்பவன் எவனுமில்லை. கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது குறையப் போவதுமில்லை குறைவாக நிர்ணயிக்கப்பட்டது கூடப்போவதுமில்லை. கஷ்டம் என நிர்ணயிக்கப்பட்டது சுகமளிப்பதாக மாறப்போவதுமில்லை. இன்பம் என நிர்ணயிக்கப்பட்டது துன்பமாக மாறப்போவதுமில்லை. என்று அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது குன்யதுத் தாலிபீனில் வரைந்துள்ளார்கள்.

'வமின் தாலிக அன்னல் இமாம யஃலமு குல்லiஷயின் மாகான, வமாயகூனு' (ஒரு பெரியார்-அறிஞர் நடந்ததையும், நடக்கவிருப்பதையும் அறிவார் என்ற கொள்கையும் வழிகெட்ட 72 கூட்டத்தினரின் கொள்கைகளில் ஒன்றாகும்) என அந்தப் பெரியார் தமது குன்யதுத் தாலிபீனில் வரைந்துள்ளார்கள்.

யுக்ரஹூ மினல் அன்காபி, வல் அஸ்மாயி மாயுவாஸீ அஸ்மா அல்லாஹி (அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு நிகரான பெயர்கள் சூட்டுவதும் கூடாத ஒன்றாகும்) எனவும் அவர்கள் தமது குன்யதுத் தாலிபீனில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் கூடாது என்று தீர்ப்பளித்துள்ள 'கவ்துல் அஃலம்' மகத்தான இரட்சகர் என்ற பட்டத்தை அவர்களுக்குச் சூட்டுபவர்களின் நிலையை என்னென்பது?

'இன்னல் அம்வாத யர்ஜிவூன இலத்துன்யா' (இறந்தவர்கள் இந்த உலகத்துக்குத் திரும்பி வருவார்கள் என்ற கொள்கை வழிகெட்ட ராபிஜியாக் கூட்டத்தாரின் கொள்கையாகும்) என்றும் அந்தப் பெரியார் தமது குன்யதுத் தாலிபீன் நூலில் தம் கையால் வரைந்துள்ளார்கள்.

அறிவுடைய மக்களுக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் இந்தப் போதனை போதுமானதாகும். அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே எல்லாத் தேவைகளையும் கேட்கவேண்டும் என்று வலியுறுத்திய-அல்லாஹ்வின் நல்லடிமைகளில் ஒருவராகத் திகழ்ந்த அப்பெரியாரின் பெயரால் எவ்வளவு பெரிய பொய்களைக் கட்டவிழ்த்திருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் தெளிவாக உணர முடியும்.

அவர்கள் பெயரால் யாகுத்பா பாடிய இந்தக் கவிஞன் அவர்களை மகத்தான இரட்சகர் என்ற அடைமொழியைப் பயன்படுத்தியதோடு, அல்லாஹ்வே அவரை மகத்தான இரட்சகர் என்று அழைத்தான் என்றால் இதைவிட மாபாதகம் என்ன இருக்க முடியும்?

அவர்களின் இந்தப் போதனைகளுக்கு பின்பாவது இந்தச் சமுதாயம் 'யா குத்பா' என்ற நச்சுக் கவிதையைப் புறக்கணிக்காவிட்டால், அல்லாஹ்வின் கட்டளையும், அவனது திருத்தூதரின் வழிகாட்டுதல்களையும், அவர்கள் புறக்கணிப்பதோடு அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் போதனைகளையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.