மாநபி வழியில் மத்ஹபுகள்?
இது மத்ஹபு!

நான்கு ரக்அத் தொழுகையில் கடைசியில் இரண்டு ரக்அத்களில் (நிலையில்) விரும்பினால் எதையும் ஓதலாம்! விரும்பினால் தஸ்பீஹூ செய்யலாம்! விரும்பினால் பேசாமல் நின்று கொண்டிருக்கலாம்! அவன் இஷ;டப்பட்டவாறு நடந்து கொள்ளலாம். இமாம் அபூஹனீபா இப்படித்தான் கூறியிருக்கிறார்கள். ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயாவில் முதல் பாகத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.

இது மாநபி வழி!

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர், அஸர் தொழ வைப்பார்கள். முதலிரண்டு ரக்அத்களில் 'அல்ஹம்து' சூராவையும், மற்றும் இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து சூராவை ஓதுவார்கள். அபூகதாதா (ரலி) அறிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. மாநபி வழியோடு மத்ஹபுகள் எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.

இது மத்ஹபு!

'கண் தெரியாதவன் இமாமத் செய்வது மக்ரூஹ் ஆகும். ஏனெனில் அவன் அசுத்தங்களிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியாதவனாக இருக்கிறான்.' இந்த மஸாலா ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா, ஷரஹ் விகாயா, கன்ஸூ, ரத்துல் முக்தார், ஆலம்கிரி ஆகிய நூல்களில் உள்ளன. (அசுத்தங்களிலிருந்து அவன் இமாமத் செய்வது ஒருபுறமிருக்கட்டும்! அவன் தனியாகவும் தொழக்கூடாதே! குருடனுக்குத் தொழுகை இல்லை என்று தீர்ப்பு வழங்குவார்களா?

இது மாநபி வழி!

நபி (ஸல்) அவர்கள் ஒரு போருக்குச் செல்லும் போது இரு கண்களும் தெரியாத இப்னு உம்மி மக்தூம் (ரலி) என்ற நபித்தோழரை மக்களுக்கு இமாமத் செய்ய நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெறுகிறது.
(மாநபி வழிக்கும் மத்ஹபுக்கும் உள்ள சம்மந்தம் புரிகிறதா?)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.