முதல் கட்டளை எது? எதைப் பின்பற்றுவது?

மனிதனை அல்லாஹ்தான் படைத்தான் என்று மனிதர்கள் சொல்வது எப்படி? நம்பிக்கை அடிப்படையில் தான். 


அதை முதலில் முழுமையாக உணர்ந்து அல்லாஹ்வின் வல்லமைகளைக் கண்கூடாகப் பார்த்து நம்பியவர் யார்? ஆதம் (அலை)

 

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_3.html


மனிதன் மார்க்கத்தை தீர்மானிக்கலாம் என்பதில் அல்லாஹ்வுக்கு உடன்பாடு இருந்தால் ஆதம்(அலை) அவர்களுக்கு மார்க்கத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை கொடுத்து இருக்க வேண்டும். 


அந்த அளவுக்கு அவர் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட  ஜீனியஸ் (மேதை)

 

அந்த மேதை ஆதம்(அலை) அவர்களை அனுப்பும்போது உன்னை மலக்குகளையெல்லாம் வென்று விட வைத்து விட்டேன். 


அந்த அளவுக்கு ஆற்றலையும் அறிவையும் உனக்கு நான் நிறைய தந்து ஜீனியஸ்ஸாக (மேதையாக) ஆக்கி இருக்கிறேன். 


எனது வல்லமைகளை எல்லாம் நீ கண்கூடாகப் பார்த்து விட்டாய். ஆகவே சிந்தித்து செயல்படு என்று சொன்னானா?  இல்லை.


அப்பொழுதும் ஆதம் (அலை) அவர்களுக்கு கட்டளை தான்  இட்டான். அதுதான்  மனித சமுதாயத்துக்கு இடப்பட்ட முதல் கட்டளையாகும். அந்த முதல் கட்டளை எது?


நான் சொல்கின்றபடி தான் நடக்க வேண்டுமே தவிர உங்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது. அவரவர் இஷ்டப்படி நடக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று கூறியது தான் அந்த  முதல் கட்டளை.

 

உன் இஷ்டப்படி உன் மனதுக்கு சரி என்று பட்டபடி எல்லாம் நீ செயல்படக் கூடாது வழிகாட்டுதல் என்பது அல்லாஹ்விடம் இருந்துதான் வரும் என்று வந்த அந்தக் கட்டளையை முன்பு பார்த்தோம்.

 

மார்க்க விஷயத்தில் சுயமாக சிந்தித்து செயல்படும் உரிமை முதல் மனிதரும் முதல் நபியுமான  ஆதம் (அலை) அவர்களுக்கே அல்லாஹ் வழங்கவில்லை. 


அப்படியானால் இவர்கள் சொல்லும் நாதாக்களும் பெரியார்களும்  வகுத்தது எல்லாம் எப்படி மார்க்க சட்டமாகும்?

 

எல்லாப் பொருள்களின் பெயர்களின் அனைத்துப் பெயர்களையும்  அல்லாஹ் ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். 2:31.

 

இப்படி அல்லாஹ்விடமே நேரடியாக பயின்ற ஆதமாக இருந்தாலும் அவருக்கும்  வழி காட்டுதல் என்பது அல்லாஹ்விடமிருந்துதான் வரும் என்பதில் அவன் சமம் - காம்ரமைஸ்  செய்து  விட்டுக் கொடுக்கவில்லை.  விட்டுக் கொடுக்க  தயாராக இல்லை.

 

அல்லாஹ்வைத்தான் வணங்க வேண்டும் என்ற வணக்க வழிபாட்டை எப்படி விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறானோ, அது போல மார்க்க விஷயத்தில் வழி காட்டுதல்  என்பதை விட்டுக் கொடுக்கவே  மாட்டான்.  விட்டுக் கொடுக்க அணுவும்   உடன்படவே  மாட்டான்.

 

அதற்கு 2:38, 20;123 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள  ஆதம் அவர்களுக்கு இடப்பட்ட  முதல் கட்டளை தான்  அடிப்படை.  


இந்த அடிப்படைக் கொள்கையைத்தான் அல்லாஹ் அதிகமான முறையில் அழுத்த மாகக் கூறி உள்ளான்.


அந்தக் கட்டளைகள்  எல்லாம்  எப்படி இருக்கும்?  என்ன சொல்லும்? 

என்னிடமிருந்து அருளப்பட்டதை (இறக்கப்பட்டதை- வந்த கட்டளையை) பின்பற்றுங்கள். 


உங்கள் இஷ்டத்துக்கு எதையும் பின் பற்றாதீர்கள். அல்லாஹ்வை விடுத்து மற்றவர்களை பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்!  


இதைத்தான் அழுத்தமாகவும் அதிகாமகவும் அல்லாஹ் கட்டளை இட்டுச் சொல்லிக் காட்டி உள்ளான். 


உதாரணத்துக்கு ஒரு வசனத்தைப் பாருங்கள். அதன் ஆரம்ப வார்த்தையே  இத்தபிஃஊ -    பின்பற்றுங்கள்!  என்பதுதான். எதைப்  பின்பற்றுவது? 



 இத்தபிஃஊ  மா உன்Zஸில இலைக்கும் மி(ன்)ர்ரப்பிகும் 

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்!


இந்த வார்த்தையிலேயே எல்லாம் அடங்கி விட்டது.  அல்லாஹ்விடமிருந்து வந்ததை பின்பற்றுங்கள்


இந்த நேரடிக் கட்டளையிலேயே  அறிவுள்ள மக்களுக்கு போதுமான  விளக்கமும் தெளிவும்  இருக்கின்றது. 


இருந்தாலும் சந்தேகமே வரக் கூடாது என்பதற்காக அல்லாஹ்  இதற்கு மாற்றமாக(எதிர்மறையாக -Negative நெகடிவ்வாக)வும்  சொல்லிக் காட்டி உள்ளான். எப்படி? 


வலா தத்தபிஃஊ  மின் துானிஹீ அவ்லியாஃஅ 

அல்லாஹ்வை விட்டு விட்டு  மற்றவர்களை உங்கள்  அவ்லியாக்களாக  (பொறுப்பாளர்களாக  - நேசர்களாக ) ஆக்கி  பின்பற்றாதீர்கள்!  என்கிறான்.


மக்களை வழி கெடுக்க வழி கெடுப்பவர்கள் அதிகமாக  பயன்படுத்தும் வார்த்தை   அவ்லியா என்ற வார்த்தையே 

அந்த  அவ்லியா என்ற   வார்த்தையையே  பயன்படுத்தி கூறி உள்ளான். 


மற்றவர்களை உங்கள்  அவ்லியாக்களாக  ஆக்கி  பின்பற்றாதீர்கள்!  என்பதில்  மனிதர்களுக்கு  அவ்லியா  (பொறுப்பாளன்  - நேசன்)  அல்லாஹ்தான் என்பதும்  அடங்கி  உள்ளது.  



இப்படி உறுதிபடக் கூறி உள்ளான் என்றால் சாதாரண விஷயமா?  
நல்லதை (அல்லாஹ்விடமிருந்து வந்ததை)    பின்பற்றுங்கள் என்றாலே கெட்டதை  பின்பற்றாதீர்கள்!   என்பதே அர்த்தம். 



ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்  என்பார்களே அது போல்  
அல்லாஹ்  இரண்டு  தாழ்பாள் போடுகிறான்


முதல் தாழ்ப்பாள்  உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு   அருளப்பட்டதையே   பின்பற்றுங்கள் 


இரண்டாவது  தாழ்ப்பாள் அதை !விட்டு விட்டு  மற்றவர்களை  பின்பற்றாதீர்கள்!


ஆக  குர்ஆன் ஹதீஸையே பின்பற்றுங்கள் என்கிறான். 


அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டது எது? குர்ஆன் ஹதீஸ்தானே  நேரடியாக வந்தது


மனிதர்கள் உள்ளத்தில் தோன்றக் கூடியது  எப்படி  அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக இருக்கும்?  


பெரியார்கள்,  நாதாக்கள்,  ஸலபுகள், இமாம்கள்,  தலைவர்கள், முப்திகள் என்று மக்களால் சொல்லப்படும்  மனிதர்கள் உள்ளத்தில் தோன்றியவைகளை  தோன்றக் கூடியவைகளை அவர்கள் விளங்கியவைகளை  எப்படி  அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக எடுத்துக் கொள்கிறார்கள்?


அவை யாவும் மனிதர்கள் உள்ளத்தில் தோன்றிவை  மனித அறிவுக்கு தக்கவாறு  விளங்கியவை தானே தவிர  அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவை  அல்ல. 


அல்லாஹ்விடமிருந்து  வந்த வழி காட்டல்  அல்ல.


உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! என்று சொன்ன அல்லாஹ்  அந்த வசனத்தின் முடிவில் முத்தாய்ப்பாக  என்ன சொல்கிறான்?


ஃகலீலம்மாத(ர)தக்கரூன


இதுதான் மிக முக்கிய வார்த்தை மெஜாரிட்டி மக்களாக இருந்தாலும் பார் போற்றும் அல்லாமாக்களாக  இருந்தாலும்    அதிகமானவர்கள் சரியாக விளங்குவதில்லை.  

குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்

குறைவாகவே  சிந்திக்கிறீர்கள், 

குறைவாகவே நல்லுணர்வு  பெறுகிறீர்கள் இதுதான் அடிப்படை. 

இந்த அடிப்டையைத்தான் அனைவரும் கோட்டை விட்டு விடுகிறார்கள்.   


குர்ஆனில் சில வசனங்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். 


சில வசனங்கள் நம்மை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். 

சில வசனங்கள் நபி(ஸல்) அவர்களையும் நம்மையும் நோக்கி சொல்லப்பட்டிருக்கும்.


உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

என்ற இந்த வசனம் நம்மை நோக்கி மட்டும் சொன்ன கட்டளை  அல்ல. நபி(ஸல்) அவர்களையும் நம்மையும் நோக்கி சொல்லப்பட்டுள்ள கட்டளை.  இதை அறிவுள்ளவர்களே விளங்குவார்கள்.


இது அல் அஃராப்  என்ற 7வது  அத்தியாயத்தின் 3வது வசனமாக இடம் பெற்றுள்ளது. 


அதன் வார்த்தைக்கு வார்த்தையையும் பாருங்கள்.

اِتَّبِعُوْا - இத்தபிஃஊ 

 பின்பற்றுங்கள்! 

مَاۤ - மா 

எதை(ப் பின்பற்றுவது?)

اُنْزِلَ- உன்Zஸில 

அருளப்பட்டது - இறக்கப்பட்டது

 اِلَيْكُمْ- இலைக்கும்

உங்களுக்கு

 مِنْ رَبِّكُمْ மி(ன்)ர்ரப்பிகும்

உங்கள் இறைவனிடமிருந்து

اتَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ 

 இத்தபிஃஊ  மா உன்Zஸில இலைக்கும் மி(ன்)ர்ரப்பிகும் 

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்



 وَلَا تَتَّبِعُوْا- வலா தத்தபிஃஊ  

பின்பற்றாதீர்கள்.  

 مِنْ دُونِهِ-மின் துானிஹீ 

அதைத் தவிர 

 اَوْلِيَآءَ‌- அவ்லியாஃஅ

பொறுப்பாளர்கள் 

 وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَவலா தத்தபிஃஊ  மின் துானிஹீ அவ்லியாஃஅ 

அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்


قَلِيْلًا مَّا  

ஃகலீலம்மா - மிகக் குறைவாக படிப்பினை  


 تَذَكَّرُوْنَ‏ த(ர)தக்கரூன
நீங்கள்  படிப்பினை (நல்லுணர்வு) பெறுவது.

قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَ‏- ஃகலீலம்மாத(ர)தக்கரூன
நீங்கள் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.