சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது ஷிர்க்கா? (இணை வைப்பா?)


வஹீயை (இறைச் செய்தியை) மட்டுமே பின்பற்ற வேண்டுமா?


வஹீ  (இறைச் செய்தி) அல்லாததை பின் பற்றுவர்களை அல்லாஹ் எந்த லிஸ்டில் சோ்த்துள்ளான்?


சுமந்து திரிகிறார்களா? அறிந்து செயல்படுகிறார்களா?

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_17.html

சட்டம்  இயற்றும்  மன்றங்களுக்கு சென்று உலக  சட்டங்களை இயற்றினால் அவன்  ஷிர்க் (இணை வைப்பு)  செய்து விட்டான் என்பார்கள் கிலாபத்காரர்கள். 


மரம், மட்டை, சிலை என   வணங்கும் பிற மதத்தவர்களின் இந்த செயல்கள் மட்டுமே ஷிர்க்(இணை வைப்பு)  என்பார்கள்  தர்கா, தரீவாதிகள்.


தர்கா வழிபாடுகள் கூடாது என்று பிரச்சாரம் செய்யும்  தவ்ஹீது இயக்கத்தவர்கள் தர்கா, தரீவாதிகள் தான் ஷிர்க் வைத்து விட்டான் என்று பிரச்சாரம் செய்வார்கள். 


இந்த தவ்ஹீது இயக்கத்தவர்கள் உட்பட அனைவருமே அல்லாஹ்வுக்கு இணை (ஷிர்க்) வைத்து விட்ட முஷ்ரிக்களாகத்தான்.  இருக்கிறார்கள். இதை அவர்கள் புரிவதே இல்லை.


அல்லாஹ்வை வைக்க வேண்டிய இடத்தில் வேறு ஆட்களை வைத்தால் அது இணை வைப்பு (ஷிர்க்) என்று சாமான்யனும் எளிதில் புரிவான். ஆனால் சவூதி சென்று படித்தவர்களும் இதை  புரிவது இல்லை.


இவர்கள் நடத்தும் தவ்ஹீது இயக்கத்தின் தலைவர் (அமீர்) சொன்னதை விட்டு விட்டு அடிமட்டத் தொண்டன் சொன்னதை ஒருவன் செயல்படுத்தினால், தவ்ஹீது இயக்கத் தலைவர் என்ன சொல்வார்?


நான் தலைவனா? அவன் தலைவனா? என்று கேட்பாரா இல்லையா? யார் சொல்லை கேட்க வேண்டுமோ அந்த இடத்தில் வேறு ஆளை வைத்தால். என்ன அர்த்தம்? சமம் ஆக்கி விட்டான்  இணை ஆக்கி (ஷிர்க் வைத்து) விட்டான் என்றுதானே அர்த்தம்.


இறைவனின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூட அல்லாஹ்விடமிருந்து வந்தததைக் கொண்டே மார்க்க தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரமான கட்டளைகளை முந்தையை  ஜும்ஆ உரைகளில் கண்டோம்.


சட்டம்  இயற்றும்  மன்றங்களுக்கு சென்று உலக  சட்டங்களை இயற்றினால் அவன்  ஷிர்க் (இணை வைப்பு)  செய்து விட்டான் என்று அல்லாஹ் சொல்லவில்லை.


மார்க்க சட்டங்களை இயற்றினால் தான் அவன்  ஷிர்க் (இணை வைப்பு)  செய்து விட்டான் என்று அல்லாஹ் சொல்லி உள்ளான்.


அல்லாஹ்விடமிருந்து வராததை கொண்டும், தங்கள் இஷ்டப்படியும் மார்க்க தீர்ப்பு வழங்கும் அதிகாரம் எந்த நபிமார்களுக்கும் கொடுக்கப்படவில்லை. வஹீ  (இறைச் செய்தி)யை மட்டுமே பின் பற்ற வேண்டும் என்பதே அனைத்து  நபிமார்களுக்கும்  அல்லாஹ் இட்டக் கட்டளை. 


இந்த உண்மையைச் சொன்னால் பலருக்கு எட்டிக்காயாக இருக்கிறது. புதிய கொள்கையாகவும் தெரிகிறது. 


முந்தைய ஜும்ஆ உரைகளில்  நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் அனைத்தும் வஹீ(இறைச் செய்தி)யை மட்டுமே பின் பற்ற வேண்டும் என்று தான் அழுத்தமாக சொல்லி உள்ளன.

 

எவ்வளவு வலுவான ஆதாரங்களை எடுத்துச் சொன்னாலும் பலருக்கு புரிவதே இல்லை.


வஹீ(இறைச் செய்தி)யை பின்பற்றாமல் மற்றவற்றை பின்பற்றுவது நிச்சயமாக ஷிர்க்காகும். இதை நாம் சொல்லவில்லை. அல்லாஹ்தான் 6:106ல் அழுத்தமாகச்   சொல்லி உள்ளான்.


வஹீ(இறைச் செய்தி)யை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்லக் கூடியவர்கள் கூட தங்கள் தர்ஜமாவில்   இறைவனிடமிருந்து  அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!  என்றுதான்  தமிழ்படுத்தி உள்ளார்கள். 


மற்ற முதர்ஜிமீன் (மொழி பெயர்ப்பபளர்)கள் எல்லாருமே   “மா ஊஃஹிய”  என்பதற்கு அறிவிக்கப்படுவதை  என்று  தமிழ்படுத்தினால் அதன் வீரியம் - தாக்கம் - கனம்  குறைந்து விடும் என்று எண்ணினார்களோ என்னவோ. வஹீயை  வஹீமூலம் என்று அரபு வார்த்தையை அப்படியே  இடம் பெறச் செய்துள்ளார்கள்.


அந்த மொழி பெயர்ப்புகளை  ஆதரிப்பவர்கள் அனைவரும்  அவற்றை சுமந்து திரிபவர்களாகவே இருக்கிறார்களே தவிர. வஹீ மூலம் வந்ததையே பின்பற்றுவீராக என்ற கட்டளையை அறிந்து செயல்படுவர்களாக இல்லை. 



அல்லாஹ்விடம் இருந்து வந்த வஹீ   அல்லாததை பின் பற்றுவர்களை அல்லாஹ் எந்த லிஸ்டில் சோ்த்து உள்ளான்? 


இறந்தவர்களை சிலைகளாக ஆக்கி வணங்கிய மக்கா காபிர்களை எந்த லிஸ்டில்  வைத்துள்ளானோ அதே  லிஸ்டில் தான் வைத்து உள்ளான்? 



இவர்கள், குதிரை, கல்லு, மண்ணு, கழுதை,  எலி, பன்றி என மிருகங்களை வணங்குவது தான் இணை (ஷிர்க்) வைத்தல் என்று எண்ணுகிறார்கள். 


மார்க்க சட்டத்தை  உருவாக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு இருக்கிறது என்று எண்ணுவதும் ஷிர்க் (இணை)  வைத்தல்தான்.   இதை நாம் சொல்லவில்லை. அல்லாஹ்தான் சொல்லி உள்ளான்.


(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக! என்று சொன்ன அல்லாஹ்


அடுத்து என்ன சொல்கிறான்?  அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை என்கிறான். 


வஹீ மூலம் அறிவிக்கப்படாத மார்க்க சட்டத்தை  உருவாக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு  உண்டு என்று நினைத்தால். அது அந்த மனிதர்களை வணக்கத்திற்குரிய இறைவனாக ஆக்கி விட்டார்கள் என்று அர்த்தம். என்கிறான். 


அது மட்டுமா? அந்த வசனத்தின் இறுதியில் இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடுங்கள் என்றும் கட்டளை இட்டுள்ளான்.


இப்பொழுது சொல்லுங்கள்.  ஸலபுகள், இமாம்கள்,  பெரியார்கள்,   நாதாக்கள்,   தலைவர்கள், முப்திகள், தஃவா சென்டர் முதீர்கள் போன்றவர்கள் சொன்னதையும் மார்க்க சட்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்கிறார்களே  அவர்கள் யார்? இந்த 6:106 வசனப்படி.


அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு உண்டு என்று இணை வைப்பவர்கள்தானே! 


நாமறிந்த எல்லா  தமிழாக்கங்களிலும்  106 வது வசனமாக  இடம் பெற்றுள்ள  6:106  பஷாரத், மலிவு பதிப்பு, திரியெம் ஆகிய பதிப்புகளில் 107வது வசனமாக  இடம் பெற்றுள்ளது.  


அதை போட்டோ பைலாக இணைத்துள்ளோம்.





இந்த வித்தியாசத்தை குர்ஆன் ஆயத்துக்கு நம்பர் போட்டவன் அல்லாஹ். எப்படி வித்தியாசம் வரும்?  ஆகவே பீ.ஜ. தர்ஜமாவில் குறிப்பு 26ஐ நீக்க வேண்டும் என்று வாதம் செய்த  விருதுநகர்  முஜிபுர்றஹ்மான்  உமரியும் அவரது ஆதரவாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். 

 

இனி  6:106 வசனத்தின்  வார்த்தைக்கு வார்த்தையையும்  தமிழாக்கங்களையும் பாருங்கள்.


اِتَّبِعْ- இத்தபிஃ 

பின்பற்றுவீராக!

مَاۤ اُوْحِىَ  மா ஊஃஹிய 

வஹீயை - அறிவிக்கப்படுவதை

 اِلَيْكَ -இலைக  

உமக்கு

مِنْமின் 

இருந்து

رَّبِّكَ‌‌ۚ -றப்பிக 

உமது இறைவன்

لَاۤ  லாா 

அறவே இல்லை

 اِلٰهَ -இலாஹ

வணக்கத்திற்குரியவன்

 اِلَّا هُوَ‌ۚ - இல்லாஹுவ 

அவனைத் தவிர

وَاَعْرِضْ  - வஅஃரிழ் 

புறக்கணிப்பீராக!

عَنِ الْمُشْرِكِيْنَ‏ -ஃஅனில் முஷ்ரிகீன

இணை கற்பிப்போரை - இணை வைப்பவர்களை
 

 


தமிழாக்கங்கள்

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! - (PJதொண்டி)



(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை, இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும். - ஜான் டிரஸ்ட் 



(நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீங்கள் பின்பற்றுங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)



 

 

(நபியே!) உம்முடைய அதிபதியிடமிருந்து உமக்கு அருளப்படுகின்ற வஹியைப் பின்பற்றி நடப்பீராக! அந்த அதிபதியைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும், இறைவனுக்கு இணை வைப்பவர்களை நீர் புறக்கணித்து விடுவீராக!  (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)



 

(நபியே!) உம் இரட்சகனால் உமக்கு வஹீமுலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லவேயில்லை, இன்னும் (அவனுக்கு) இணை வைப்போரை விட்டும் நீர் புறக்கணித்து விடுவீராக! (அல்-மதீனா அல்-முனவ்வரா)


அல்லாஹ்வின் கட்டளை (வஹீ)க்கு மட்டும் அடிபணிந்து செயல்படுபவர்களில் முதன்மையானவனாக இருக்க எனக்குக் கட்டளை வந்துள்ளது. இன்னும் அக்கட்டளைக்கு இணையாக வேறு எதையும் கடைப்பிடிக்க மாட்டேன்என்றும் அவர்களிடம் கூறிவிடுங்கள்


மேலும் உம்மிடம் இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள வஹீ என்னும் இறைவழிகாட்டுதலை மட்டும் பின்பற்றி வாருங்கள். அதைத் தவிர வேறு எந்தக் கட்டளைக்கும் அடிபணியாதீர்கள். மேலும் மார்க்க விஷயத்தில் மனோ இச்சையின்படி வாழும் முஷ்ரிக்குகளை விட்டு விலகியே இருங்கள். -6:14


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.