2:71 ஜீப் ஜீப் என்றால் என்ன?

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள ஜிஃத என்ற வார்த்தைக்கு நேரடிப் பொருள். நீங்கள் வந்துவிட்டீர்கள்  என்பதாகும்.   அல்ஆன என்றால்  இப்போது என்று அர்த்தம்.


அல்ஆன ஜிஃத  என்றால்  நேரடிப் பொருள்  இப்போது தான் வந்தீர்கள்  என்பதே.  இதற்கு அடுத்து வரும் வார்த்தையை  வைத்துதான்  இந்த  இடத்தில்  சொல்லப்பட்டுள்ள சரியான  பொருள்  வரும். அடுத்து வந்துள்ள வார்த்தை என்ன?

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/271.html

பி- கொண்டு .  இந்த ப வை சேர்க்கும் போது,  முதலில் ஆள் வந்தது போல்  நீர் வந்தீர் என்று பொருள் தந்த வார்த்தை (செய்தியைக்)   கொண்டு வந்தீர்  என்று ஆகி விடும்.






ஃஹக்கி  - உண்மையை.  பில் ஃஹக்கி - உண்மையைக் கொண்டு

அல்ஆன ஜிஃத  பில் ஃஹக்கி  என்று சேர்க்கும் போது தான் உண்மையைக் கொண்டு வந்தீர்  என்ற சரியான பொருள் தரும். 


இது போன்றவற்றை அவ்வப்போது விளங்கிக் கொள்வது நலம்.  இது இனி வரும் மொழி பெயர்ப்புகளில் எது சரியானது என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள உதவும்.


ஜீப் ஜீப் என்ற சொல்லை  அரபு நாட்டில் உள்ள எல்லாரும் கேட்டு இருக்கிறோம்.  ஜீப் ஜீப் என்றால் கொண்டு வா, அதைக் கொண்டு வா என்று பழக்க வழக்கத்தில்  புரிந்து இருக்கிறோம்.  


அதன் முழு வார்த்தை என்ன என்பதை அரபு  மொழி படிக்காதவர்கள்  தெரிந்து  இருக்கிறோமா? என்றால் இல்லை . அதையும் இந்த இடத்தில் விளங்கிக் கொள்வோம் 

ஜாஅ  -வந்தான்

யஜீஉ - வருவான்   

இவற்றில்  இருந்து வரும் கட்டளைச் சொல் தான் 

ஜிஃ  நீ வா  

பி - கொண்டு

ஹி  -அதை 

ஜிஃபிஹி - நீ  அதைக் கொண்டு வா

 இந்த  ஜிஃபிஹி தான்  பேச்சு வழக்கில் மருவி ஜீப் என்று ஆகி விட்டது


இந்த வசனத்தில் 

இன்னஹு யஃகூலு என்பதில் இன்னஹு என்பது தஃகீத் சொல்.

இன்னஹா பஃகரதுன் என்பதில் இன்னஹா தஃகீத் சொல்.


ஆக  இரண்டு தஃகீத் சொற்கள்   2:71ல்  உள்ளன. 


இதில் இரண்டையும்  IFT, றஹ்மத் போன்றோர்  மொழி பெயர்க்கவில்லை.    


இரண்டு தஃகீத் சொற்களில்  ஒன்றை     

பாகவி, பஷாரத், ஜான், உமர் ஷரீப்,   இம்தாதி,  அதிரை ஜமீல் தாருஸ்ஸலாம்,- ரியாத்  மொழி பெயர்க்கவில்லை.



இது போன்றவற்றை கவனத்தில்  கொண்டு இணைப்பில் உள்ள 7+8= 15 மொழி பெயர்ப்புகளை  ஆய்வுடன் படியுங்கள். 


அல்லாஹ்வின் அருளால்  விளக்கம்  பெறுவீர்கள்.


இனி 2:71  வார்த்தைக்கு வார்த்தை

قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَّا شِيَةَ فِيهَا ۚ قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ ۚ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ ﴿٧١﴾

قَالَ -  ஃகால
கூறினார்


إِنَّهُ - இன்னஹு 

அவன்

يَقُولُ - யஃகூலு
கூறுகிறான்

إِنَّهَا - இன்னஹா
 அது

بَقَرَةٌ -  பஃகரதுன்
மாடு; 

لَّا ذَلُولٌ -  லாத(ர)லுாலுன் 
பழக்கப்படுத்தப்படாதது - பயன்படுத்தப்படாதது

تُثِيرُ - துதீ(ஸீ)ரு 
உழுவதற்கு - கிளருவதற்கு

الْأَرْضَ - அல் அர்ழ 
நிலத்தை

وَلَا تَسْقِي - வலா தஸ்ஃகீ
நீர் இறைக்காது

الْحَرْثَ - அல் ஃஹர்(ஸ)த 
விவசாயத்துக்கு - விளை நிலத்திற்கு

مُسَلَّمَةٌ - முஸல்லமதுன் 
குறைகளற்றது


لَّا-லா 
இல்லை 


 شِيَةَ فِيْهَا  -ஷியத Fபீஹா
 
அதில் தழும்புகள் (வடு)


 لَّا شِيَةَ فِيْهَا ‌ؕ- லாஷியத Fபீஹா 

அதில் தழும்புகள் இல்லாதது' 

---------

قَالُوا - ஃகாலுா 
கூறினார்கள்

الْآنَ جِئْتَ - அல்ஆன ஜிஃத 
இப்போது வந்தீர் ("இப்போது தான் சரியாகச் சொன்னீர்'') 

بِالْحَقِّ - பில் ஃஹக்கி 
உண்மையை

فَذَبَحُوهَا - Fபத(ர)பஃஹுஹா 
அதை அறுத்தார்கள்

وَمَا كَادُوا - வமா காதுா(வ்) 
அவர்கள் நெருங்கவில்லை - கிட்டத்தட்ட ஒருபோதும்

يَفْعَلُونَ - Fப்ஃஅலுான
செய்வார்கள்

மொழிப்பெயர்ப்புகள் :



அவர் (மூஸா) “நிச்சயமாக அது ஒரு பசு, பூமியில் உழவடித்து வேலை செய்ததும் அல்ல! பயிருக்குத் தண்ணீர் (இறைத்துப்) பாய்ச்சியதும் அல்ல! குறையற்றது, அதில் வடுவில்லாதது என நிச்சயமாக (அல்லாஹ்வாகிய) அவன் கூறுகிறான்” என்றார். அ(தற்க)வர்கள், “இப்பொழுதுதான் நீர் சரியான (விபரத்)தைக் கொண்டு வந்தீர்” எனக் கூறி, பின்னர் அதை அவர்கள் அறுத்தார்கள். அன்றியும், அவர்கள் (மனமுவந்து) செய்வதற்கு நெருங்கவில்லை. - (அல்-மதீனா அல்-முனவ்வரா)

"அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். "இப்போது தான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர். - (PJதொண்டி)


ண்ணமாக அப்பசு நிலத்தில் உழவடிக்கவோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன் படுத்தப்படாததாக, ஊனமற்றதாக, எவ்வித வடுவும் இல்லாததாக இருக்க வேண்டும் என்று இறைவன் வரையறுக்கிறான் ன்று மூஸா கூறினார். "இப்பொழுதுதான் நீர் அனைத்து விபரத்தையும்  முழுமையாக அறிவித்தீர்" என்று சொல்லி, மறுக்க முடியாத நிலையில் அப்படிப் பட்ட ஒரு பசுவை அறுத்தார்கள்.-  (அதிரை ஜமீல்)




நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத நிலத்திற்கு நீர் இறைக்காத பசுகுறையற்றது அதில் வடு அறவே இல்லை என்று அவன் ( இறைவன் ) கூறுகிறான் என ( மூசா) கூறினார். இப்போது தான் உண்மையைக் கொண்டு வந்தீர் எனக் கூறி அதை அறுத்தார்கள். அவர்கள் ( அதை விரைவாக ) செய்ய நெருங்கவில்லை.- (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


 

அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள். - முஹம்மது ஜான்

 

(அதற்கு மூஸா) "நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, யாதொரு வடுவுமில்லாததுமான ஒரு மாடு" என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் "இப்பொழுதுதான் நீங்கள் சரியான விவரம் கொண்டு வந்தீர்கள்" எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதனை அறுத்தார்கள். - அப்துல் ஹமீது பாகவி

 

மூஸா பதிலளித்தார்:“பூமியை உழுவதற்கோ, வேளாண்மைக்கு நீரிறைப்பதற்கோ பயன்படுத்தப்படாத, ஊனமேதுமற்ற, எவ்வித வடுவுமற்ற பசுவாக அது இருக்க வேண்டும் என அவன் கூறுகின்றான்.” பிறகு அவர்கள் (ஆரவாரத்துடன்) கூறினார்கள்: “இப்போதுதான் நீர் சரியான (விளக்கத்)தைத் தந்துள்ளீர்.” பின்னர் அவர்கள் அந்தப் பசுவை அறுத்தார்கள். ஆயினும் அவர்கள் அதனை முழு மனத்தோடு செய்பவர்களாய் இருக்கவில்லை. - இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

 












Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.