2:72 ஜீவன் - ஆத்மா - உயிர்

இந்த வசனத்தில்   இடம் பெற்றுள்ள   நFப்ஸன்  என்பதற்கு ஒரு ஜீவனை -   ஓர் ஆத்மாவை - ஒருவரை -     ஒர் உயிரை - ஒரு மனிதனை -  என்று அவரவர் ஆய்வுக்கு தக்கபடி மொழி பெயர்த்துள்ளார்கள்.

 

இதே வார்த்தைக்கு   மனம்  - உள்ளம் -(இ(ரு)தயம் - நெஞ்சம் -  ஆன்மா என்று மற்ற வசனங்களில்  இடத்துக்கு ஏற்றவாறு அவரவர் ஆய்வுக்கு தக்கபடி  மொழி பெயர்த்துள்ளார்கள்.


அதே,  அதுதான்  என்ற பொருளும் உள்ளது. அது  நடைமுறையிலும் உள்ளது.
https://mdfazlulilahi.blogspot.com/2020/10/272.html




وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا ۖ وَاللَّـهُ مُخْرِجٌ مَّا كُنتُمْ تَكْتُمُونَ

وَإِذْ -  வஇது(ர்)  
போது -சமயம் - நேரம்


قَتَلْتُمْ - ஃகதல்தும் 
கொன்றீர்கள்


نَفْسًا - நFப்ஸன்
ஒருவரை - ஒர் உயிரை

فَادَّارَأْتُمْ Fபத்தாரஃதும்
தர்க்கித்தீர்கள் - விவாதீர்கள் - சொல்லாடிக் கொண்டிருந்தீர்கள்.

فِيهَا - Fபீஹா 
அதில்

وَاللَّـهُ வல்ழாஹு 
அல்ழாஹ்

مُخْرِجٌ முஃக்ரிஜுன் 
வெளிப்படுத்துபவன்.- வெளியாக்கக் கூடியவன்

مَّا - ம்மா 
எதை

كُنتُمْ - குன்தும் 
இருந்தீர்கள்

تَكْتُمُونَ - தக்துமூன
மறைக்கிறீர்கள்

மொழிபெயர்ப்பு :

நீங்கள் ஒருவனைக் கொன்றீர்கள். பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி)ச் சொல்லாடிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்ததை அல்லாஹ் வெளிப் படுத்துபவனாக இருந்தான் (என்பதையும் நினைத்துப் பாருங்கள்). -  (அதிரை ஜமீல்)



நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன். - (PJதொண்டி)


நீங்கள்  ஒர்  உயிரைக் கொன்று அதில் நீங்கள் தர்க்கித்த சமயத்தை நினைவு கூறுங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன் - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


."நீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்). - ஜான் டிரஸ்ட் 


நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான். -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

நீங்கள் ஓர் ஆத்மாவைக் கொலை செய்ததையும் பின்னர் அதில் (ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி) நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள் (என்பதையும் நினைவுகூறுங்கள்), அல்லாஹ்வோ நீங்கள் மறைத்துக்கொண்டிருந்ததை வெளியாக்குகிறவன். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.