பாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்ல முடியுமா? பொறுமை நபி நாதர் போதித்தது என்ன?


சுமையா(ரலி) அவர்களது  மர்மஸ்தானத்தில் அபு ஜஹ்ல் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து என்ன சொன்னார்கள்? பாளை ரபீக் என்றால் என்ன சொல்லி இருப்பார். 

அவர்கள் பள்ளியைத்தான் இடித்தார்கள். பாளை ரபீக் கூட்டம் மார்க்கத்தை அல்லவா இடிக்கிறார்கள். மற்ற இடங்களில் மோடி. மற்றும் அமித்ஷாவின் உருவ பொம்மையை எரிக்கிறார்கள் செருப்பால் அடிக்கிறார்கள் மோடியின் உருவ பொம்மையை கொண்டு வந்து எரித்தால் என்ன? என்று கேட்டுள்ள பாளை ரபீக் ஆதரவாளர்  Abdul Kader  வர்களே கொடும்பாவி எரிப்பது யார் காட்டிய வழி? அதைச் செய்தால் அல்லாஹ்விடத்தில் எத்தனை நன்மை கிடைக்கும்? 

முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னை இறைத் துாதர் என்று பிரகடனப்படுத்தினார். அதை ஏற்காத மக்கள் இருந்தார்கள். அவர்களிடத்திலே போர் செய்து கட்டாயமாக மத மாற்றம் செய்தார். பலவந்தமாக வாளை காண்பித்து மிரட்டி, கத்தி முனையில் இந்த இஸ்லாத்தை முஹம்மது (ஸல்) பரப்பினார் என்பதுதான் இஸ்லாமிய எதிரிகள் செய்து வரும் பிரச்சாரம்.


வரலாற்றை படிக்காமல் எதார்த்தத்தை புரியாமல், உண்மையை அறியாமல். இஸ்லாத்தின் மீது தப்பும் தவறுமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் 15 ஆண்டு காலம் இந்த பிரச்சாரத்தை செய்தார். இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவர் சுமையா(ரலி).  அம்மார்(ரலி) அவர்களின் தாயார். அவர்களை ஒரு பெண் என்று கூட பார்க்கவில்லை. மக்காவில் உள்ள அத்தனை பேரும் கொடுமைப்படுத்தினார்கள். இறுதியாக அபு ஜஹ்ல் என்பவன் அவர்களது மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான்.


இந்த சம்பவம் நடந்த உடன் இறைவனின் துாதர்(ஸல்) அவர்கள். தான் சொன்ன கொள்கையை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணுக்கு இப்படிப்பட்ட ஒரு அநியாயம் மக்காவில் நடந்து இருக்கிறது. ஆகவே இந்தக் கொள்கையை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்களோ. அவர்கள் அனைவரும் வாளை ஏந்தி வாருங்கள். எல்லோரும் அவர்களுக்கு எதிராகப் போர் செய்து பழி தீர்ப்போம் என்று ஏவி விட்டார்களா? யுத்தப் பிரகடனம் செய்தார்களாபாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்லுங்கள்.


தன்னையும் தன்னுடைய மார்க்கத்தையும் தனது துாதரையும் ஏற்றுக் கொண்ட ஒரு பெண். ப(ம)க்கா மாநகரில் அரக்கர்களால் அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார், இதற்காக அல்லாஹ் தனது துாதருக்கு ஜிஹாது வசனத்தை இறக்கினானா? இந்த கொடுமைக்கு எதிராக போர் செய்யுங்கள் என்று கட்டளை பிரப்பித்தானாபாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்லுங்கள்.


சுமையா(ரலி) அவர்களின் கணவர் அம்மார்(ரலி) அவர்களின் தந்தை யாஸிர்(ரலி). அதே மக்கத்து பெரு வீதியில் படு கொலை செய்யப்பட்டார்கள் எப்படி? 

அவரது இரண்டு கால்களையும் இரண்டு ஒட்டகங்களில் கட்டினார்கள். அந்த ஒட்டகங்களை இரு வேறு எதிர் எதிரான திசைகளை நோக்கி விரட்டி விட்டார்கள். உடல் இரண்டு கூறுகளாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.  


ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டதற்காக. ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பேர் பலி இடப்பட்டு இருக்கிறார்கள். சொந்தப் பிரச்சனையில் ஒருவர்  கொல்லப்பட்டாலே மதப் பிரச்சனையாக ஆக்கி நாட்டை கலவரக் காடாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய துாதரின் கண்கள் எதிரே இரண்டாவது உயிர் பறிக்கப்பட்டது சொந்தப் பிரச்சனையா?. 

அல்லாஹ்வுடைய துாதர்   மக்களை துாண்டி விட்டார்களா?  அப்பொழுதாவது அவர்களது பிடரி நரம்பை வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களுக்கு எதிராக போர் செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இட்டானா?  பாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்லுங்கள்.


அதே குடும்பத்தைச் சார்ந்த அவர்களது மகன் அம்மார்(ரலி) அவர்களை  பாலைவனச் சுடுமணலில் படுக்க வைத்தார்கள்.  நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தார்கள். நினைவுகள் இழக்கும் வரை தண்ணீரில் மூழ்கடித்தார்கள். இப்படி தினமும் தொடர்ந்தது. 

ஒரு நாள் அல்ல. இரண்டு நாட்கள் அல்ல. 10 வருட காலம் சித்திரவதை செய்தார்கள். அப்பொழுதாவது ஜிஹாது வசனத்தை இறக்கி போர் செய்ய துாண்டினானா அல்லாஹ்பாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்ல முடியுமா?

தொல்லைகளை தாங்க முடியாமல், வேதனைகளை தாங்க முடியாமல். மக்களெல்லாம் நாடோடிகளாக ஆனார்கள். தங்களுடைய கொள்கையைக் காப்பாற்ற சொந்த நாட்டை விட்டு அபீஸீனியாவுக்கு ஓடிய  கொடுமை. 

இது உலக வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாதது. அந்த கொடுமைக்குப் பிறகாவது. துாதர் போர் செய்ய துாண்டினார்களா? போர் செய்ய துாண்டுகின்ற ஜிஹாது வசனத்தை அல்லாஹ்தான் இறக்கினானாபதில் சொல்லுங்கள்.

மக்காவில் கடுமையான எதிர்ப்பு. எந்த அளவுக்கு முற்றியது இறைவனின் துாதரான முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்கின்ற அளவுக்கு முற்றி விட்டது. மக்கத்து மக்கள் கொலை செய்ய துணிந்து விட்டார்கள். அப்பொழுதுதாவது மக்களை நபிகள் நாயகம் துாண்டி விட்டார்களா


தாயிபுக்கு சென்றார்கள். அங்கு என்ன நடந்தது? தாயிபு நகரத்து மக்கள் தாஹா நபியை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். மனிதர்களை மனிதர்கள் அடிப்பார்கள் என்பது சகஜம். தன்னுடைய பிரதிநிதி மீது கை வைத்து விட்டார்கள் என்றால் சாதாரண மனிதன் கூட சும்மா இருக்க மாட்டான். 

ஆனால் படைத்த அல்லாஹ்
. தன்னுடைய பிரதிநிதியான துாதரை ஓட ஓட அடித்து விரட்டி விட்டார்கள். அதைப் பார்த்த அல்லாஹ் போர் என கட்டளை இட்டானா? கருணை நபிதான் அவர்கள் அழியட்டும் என்றார்களா? பாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்லுங்கள்.


வருடக்கணக்கில் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்து வைத்து இருந்தார்கள்
. பொருளாதார தடை விதித்து உணவு கூட கிடைக்க முடியாதபடி சித்திரவதை செய்தார்கள். அப்பொழுதுதாவது அல்லாஹ்வின் துாதர்(ஸல்) பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் ஜிஹாது ஜிஹாது என்று முழக்கமிட்டார்களா? . அல்லாஹ்தான் போர் செய்யுங்கள என்று ஆணை இட்டானா


சொந்த ஊரை விட்டு, விட்டு ஓட வைத்தார்கள். உங்கள் பொருளாதாரங்களை எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது. போகின்றவர்கள் போய்க் கொள்ளுங்கள். எல்லா பொருளாதாரங்களையும் விட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று அறிவித்தார்கள். எல்லோரும் சம்பாதித்த சொத்துக்கள், வீடு, நிலங்கள், தோட்டங்கள் என எல்லாவற்றையும் விட்டு விட்டு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்ய வைத்து அகதிகளாக ஆக வைத்தார்கள்.


அப்பொழுதுதாவது அல்லாஹ் மதீனாவிலிருந்து படைகளை திரட்டிக் கொண்டு மீண்டும் மக்காவுக்கு வாருங்கள்
. வந்து நீங்கள் போர் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டானா பதில் சொல்லுங்கள்.

அபீஸீனியா சென்று விட்டவர்களையும் அங்கு சும்மா இருக்க விட்டார்களா? இல்லை. மக்காவிலிருந்து புறப்பட்டுப் போய் குழப்பங்கள் செய்தார்கள். அங்கேயும் நிம்மதியாக வாழ விடாமல் விஷமத்தனம் செய்தார்கள். அந்தக் காபிர்கள் எப்படிப்பட்ட கொடூர மனம் படைத்தவர்கள் என்பதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டி உள்ளான். எப்படி சொல்லிக் காட்டி உள்ளான்?


..... அந்தக் காபிர்களுக்கு வலிமை (சக்தி) இருந்து இயலுமானால் உங்களை மார்க்கத்திலிருந்து மாற்றும் வரை திருப்பி அனுப்பும் வரை உங்களிடத்தில் போர் செய்து கொண்டே இருப்பார்கள்.( 2:217)


இப்படி அல்லாஹ் தெள்ளத் தெளிவாக சொல்லிக் காட்டி விட்டான். அவர்களது மன நிலையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டான்.

இந்தக் கொடூர மனம் படைத்தப் பாவிகள்ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் அல்ல. 15 வருடங்களாக தொடர்ந்து சொல்ல முடியாத அளவு தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்அப்பொழுதெல்லாம் பொறுமை நபி நாதர் போதித்தது என்ன? 


இன்னல்லாஹ மஅஸ்ஸாபிரீன். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதுதான். எப்படிப்பட்ட பொறுமை?  நாக்கைத் துருத்திக் கொண்டு  அலைபவர்கள் சிந்திக்க வேண்டும். இதுவெல்லாம் முன்னாள் சென்ற சமுதாயத்தினருக்கு ஏற்பட்ட சோதனைகள்தான். சோதனைகளை தாங்குங்கள். உறுதியான ஈமானுடன் இருங்கள்.

முழு பொறுப்பையும் அல்லாஹ்விடத்தில் ஒப்படையுங்கள்அல்லாஹ் அவர்களை பார்த்துக் கொள்வான்இப்படித்தான் இறைத்துாதர் முஹம்மது(ஸல்அவர்கள் போதித்தார்கள்


ஒரு நாள் அல்ல. இரண்டு நாட்கள் அல்ல. 10, 15 நாட்கள் அல்ல.  15 வருட காலமாக இதைத்தான் இறைத்துாதர் போதித்தார்இவரா மனித நேயத்துக்கு எதிரானவர்இவரா மனித நேயத்தை மதிக்கத் தெரியாதவர்இவரா வாள் முனையில் இஸ்லாத்தை பரப்பியவர்? என்று எதிரிகளே வியக்கின்றனர். அந்தக் கொடுமைக்காரர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்


”(நபியேகாபிர்களுக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக! (திரு குர்ஆன் 86;17) 


15 ஆண்டு காலம் அல்லாஹ்வுடைய போதனைகுர்ஆன் மூலம் செய்த வழிகாட்டல் இதுதான்.


நாம் வாழ்வது மக்கா வாழ்வா? மதீனா வாழ்வா? அபீ சீனியா வாழ்வா? மூன்றுக்கும் முன் மாதிரி நபியிடத்தில் இருக்கிறது. பாளை ரபீக்கை ஆதரிப்பவர்களே பதில் சொல்லுங்கள்.




Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.