மத்ஹபு சட்டங்கள் நரகில் கொண்டு சேர்க்கும் என்றவர்களே உங்கள் சட்டங்கள் உங்களை எங்கே கொண்டு சேர்க்கும்?


மத்ஹபு சட்டங்களை சாக்கடையில் போடுங்கள் என்று சொன்னவர்களே உங்கள் சட்டங்களை எங்கே போடுவது? அல்லாஹும் அவனது துாதர் முஹம்மது(ஸல்) அவர்களும் சொன்னவைகள் மட்டுமே பின்பற்றவும் செயல்படுத்தவும் தக்க மார்க்க சட்டங்கள். 
மனிதர்கள் கூடி எடுக்கும் சட்டங்கள் மார்க்கமாகாது. ஆகவே அவற்றை துாக்கி எறிவோம்.  எந்த மனிதர்களின் கருத்துக்களையும் ஏற்க மாட்டோம். அது முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய கருத்தாக இருந்தாலும் ஏற்க மாட்டோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post.html 
முஹம்மது(ஸல்) அவர்கள் சொன்னவைகளில் கூட வஹியை மட்டுமே பின்பற்றுவோம். வஹி மட்டுமே மார்க்கம். வஹியில் வராததை யார் சொன்னாலும் துாக்கி எறிவோம் என்று சொன்னவர்கள் யார்? சொல்லத் தேவையே இல்லாத உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.
இவர்கள் சுன்னத் ஜமாஅத்தில் உள்ள ஆலிம்கள் என்போரிடம் நேரடியாகவோ, வெவ்வேறு மேடை சவால்கள் மூலமோ பல விவாதங்கள் செய்து உள்ளார்கள். அதில் இவர்கள் குர்ஆனில் இப்படி உள்ளது ஹதீஸில் இப்படி உள்ளது என்றார்கள். அவர்களோ எங்கள் மத்ஹபு சட்டம் இப்படி உள்ளது என்றார்கள். 

ஒரு விஷயத்தில் குர்ஆன் ஹதீஸ் ஒரு தீர்வு சொல்லி இருக்க, அதற்கு மாற்றமான குர்ஆன் ஹதீஸில் இல்லாத மத்ஹபு சட்டங்களை சாக்கடையில் போடுங்கள். குப்பையில் போடுங்கள் என்று சொன்னார்கள். வஹி அல்லாத சட்டங்களை பின்பற்றினால் செயல்படுத்தினால் நரகில் கொண்டு போய் சேர்க்கும் என்றார்கள்.
இன்று என்ன ஆயிற்று. ஒன்றாக இருந்து இரண்டாக ஆகி விட்டார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சவால் விடுகிறார்கள். குர்ஆன் ஹதீஸில் இப்படி உள்ளது என்று ஒரு சாரார் சொன்னால். இன்னொரு சாரார் இல்லை, இல்லை எங்கள் இயக்க பைலா இப்படி உள்ளது என்கிறார்கள். 

வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னரும் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும்நேர்வழியையும் யார் மறைக்கின்றார்களோநிச்சயமாக அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். மேலும்  சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். 2:159   என்ற ஆயத்தை மத்ஹபு சட்டம் சொன்னவர்களுக்கு எதிராக படித்துக் காட்டினார்கள். இந்த சாபம் பைலா பைலா என்று சொல்பவர்களுக்கு இறங்காதோ?

அன்று அவர்களோ எங்கள் மத்ஹபு சட்டம் இப்படி உள்ளது என்று தமிழில் சொன்னார்கள். இவர்களோ எங்கள் இயக்க சட்டம் இப்படி உள்ளது என்று தமிழில் சொல்லாமல். பை-லா BY LAW (சட்டப்படி) என்று இங்லீஷில் சொல்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

ஒரு காலத்தில் பாலிஸி என்றார்கள். பாலிஸி வியாதி பைலா வியாதியாக ஆகி இருக்கிறது. குர்ஆன் ஹதீஸில் இல்லாததை அவர்களுக்கு புரியும்படி சொல்வதென்றால் வஹியில் வராததை, வஹி அல்லாததை பாலிஸி என்றாலும் பைலா என்றாலும் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். 

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு  இடமளிக்கிறாரோஅவர்கள் மீது அல்லாஹ்வினதும்மலக்குகளினதும்மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.  (அலி (ரழி) நூல்கள்-அபூதாவூதுநஸயீ.) என்ற ஹதீஸை சுன்னத் ஜமாஅத்தினருக்கு எதிராக சொல்லிக் காட்டியவர்களே பாலிஸியும் பைலாவும் பித்அத் எனும் புதுமைகள் தானே! 

ஆயத்து 2:159 ஹதீஸில் உள்ளபடி சாபங்களை ஏற்க தயாராகி விட்டீர்களா? 

ஒரு விஷயத்திற்கு குர்ஆன் ஹதீஸ் ஒரு தீர்வு சொல்லி இருக்க. அதாவது அல்லாஹ்வும் அவனது துாதரும் தெளிவாக கட்டளை இட்டிருக்க. அதை துாக்கி கடாசி விட்டு பைலா பைலா என்று கூறும் கூட்டம் எங்கே போகும்? அவர்கள் வாதப்படி.
வஹியை மட்டுமே பின் பற்றுவோம் என்றவர்கள் பைலாவை பிடித்து தொங்குகிறார்களே! இவர்கள் பைலா தயாரிக்க தனி வஹியா வந்தது? வஹியை விட்டு விட்டு பைலா துாக்கி திரிபவர்கள் செல்லுமிடம் சொர்க்கமா? நரகமா? இதற்கு அவர்களது பழைய உரைகளே பதிலாக உள்ளது. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.