உன் சமுதாயத்தால் நீ இருக்கும் இயக்கத்திற்கு என்ன பலன் கிடைக்கும் என்று பாராதே என்று சொன்னவர் இறந்து விட்டார்


திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இறந்து விட்டார். இன்று அதிகாலை 6-30 மணி அளவில் வயது முதிர்ச்சி காரணமாக ஆயிரம் விளக்கு உசேன் இறந்து விட்ட செய்தி அறிந்தோம். 
சென்னையில் உள்ள த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபா அவர்களை தொடர்பு கொண்டோம். துபையில் உள்ள நீங்கள் சொல்லித்தான் செய்தி தெரிகிறேன் என்றார். அவரது இழப்பை அல்லாஹ் ஈடு செய்வானாக, அவரது குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைக் கொடுப்பானாக ஆமீன்.
https://mdfazlulilahi.blogspot.com/2019/08/blog-post_6.html

சென்னையில் தி.மு.க. கொடி கட்டி பறக்க தனது உடல் பொருள் ஆவி  வாழ்வு என அனைத்தையும் அர்ப்பணித்தவர் உசேன். தி.மு.க.வில் செய்த செயல்பாடுகளின் காரணமாக அவர் இருந்த பகுதி பெயருடன் ஆயிரம் விளக்கு உசேன் என்று அழைக்கப்பட்டார்.
சென்னையில் திமுகவிற்கு இஸ்லாமிய வாக்குகள் கிடைக்க இவரின் பிரச்சார பங்கு முக்கிய காரணமாக இருந்தது. கட்சி தொடர்பான பல்வேறு பணிகளிலும் அவர் ஈடுப்பட்டு வந்தார். திமுக தலைமை நிலைய செயலாளராகவும் ஆயிரம் விளக்கு உசேன் பணியாற்றினார்.
துடிப்புமிக்க செயல்கள்,  கட்சியின் மீது கொண்ட ஆர்வம்,  மக்களிடம் தொடராக இருந்த செல்வாக்கு. திமுகவின் மிக முக்கியமான உறுப்பினர்களாக இருந்தவர்களில் ஒருவர் என இருந்தவர் தான் ஆயிரம் விளக்கு உசேன். ஆனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார்.
சன் டி.வி.யில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுகியபொழுது நாங்கள் மத நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப மாட்டோம் என்ற காரணம் கூறி மறுத்து விட்டார்கள்.
ஆனால் தினமும் அதிகாலையில் வேறு பெயர்களில் பிற மத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்ன. இது பற்றி அண்ணன் ஆயிரம் விளக்கு உசேன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
உங்களுக்கு சன் டிவியில் இஸ்லாமிய நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் அவ்வளவுதானே! உங்கள் நிகழ்ச்சிதான் நடத்தப்பட வேண்டும் என்று இல்லையே! போங்கள் உங்கள் எண்ணம் நிறைவேறும். சன் டிவியில் இஸ்லாமிய நிகழ்ச்சி வரப் போகிறது என்று தம்பட்டமாகவோ விளம்பரமாகவோ பேசித் திரியாதீர்கள் என்றார்.
2000 ரமழானில் சன் டிவியில் விளம்பரம் வந்தது. ஆயிரம் விளக்கு உசேன் வழங்கும் ஸஹர் நிகழ்ச்சி என்று. ஆயிரம் விளக்கு தொகுதியில் எம்எல்ஏவாக ஆனதால் ஆயிரம் விளக்கு உசேன் என்று அழைக்கப்பட்டார் என்று தவறாக சொல்வார்கள். 
அவர் எம்எல்ஏவாக ஆனது திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து. அதுவும் 2001 ஆம் ஆண்டுதான். அதற்கு முன்பே  ஆயிரம் விளக்கு உசேன் என்றே அழைக்கப்பட்டார்.
உன் சமுதாயத்தால் நீ இருக்கும் இயக்கத்திற்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்காதே என்று சொன்னவர் அப்படி செயல்பட்டாரோ இல்லையோ அந்த சொல் முத்தானது.
எம்.ஜி.ஆர் தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்பட்ட பின் தென் மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவு கருணாநிதிக்கு இல்லை.
வட மாவட்ட முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளைச் சிந்தாமல் சிதராமல் கலைஞர் கருணாநிதி அரசுக்கும், தி.மு.க.வுக்கும் அள்ளிப் போட்டார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன் ஆதரவைத் தொடர்ந்தது. கலைஞர் ஆட்சி கலீபாக்கள் ஆட்சி என்றார் அப்துல் லத்தீப்
அறிஞர்அண்ணா காலத்திய அமைச்சர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சாதிக்பாட்சா தி.மு.கழகத்தின் பொருளாளராக பொறுப்பு வகித்தார். அப்படி இருந்தும் அவரது கடைசி காலம் வாடகை வீட்டில் தான் கழிந்தது. அவரது ஏழ்மையை மு.லீக் தலைவர் அ.கா.அ. அப்துல் ஸமது அவர்கள் தான் கலைஞருக்கு எடுத்துச் சொன்னார்.
தி.மு. கழகத்தின் முப்பெரும் தலைமைக்கு அணிகலன்போல பொலிவைத் தந்த மாநில பொருளாளராகவும் அமைச்சராகவும் இருந்தாலும். சமுதாய பிரச்சனை என்று வந்து விட்டால் அவரால் பேச இயன்றதில்லை. 
மு.லீக் தலைவர் அ.கா.அ. அப்துல் ஸமது அவர்களையோ, மேலப்பாளையம் சாந்து காஜா மைதீன் Ex M.P அவர்களையோ தொடர்பு கொண்டு இன்ன ஊரில் இன்ன பிரச்சனை உள்ளது. நான் பேச முடியாது கலைஞரை தொடர்பு கொண்டு நீங்கள் பேசுங்கள்.
இன்ன பதவிக்கு இன்ன முஸ்லிம் தான் முறைப்படி வர வேண்டி இருக்கிறது. அந்த முஸ்லிமை வர விடமால் வேறு ஒரு சமுதாயத்தவரை கொண்டு வருகிறார்கள். ஆகவே நீங்கள் பேசுங்கள் என்று சொன்ன நிகழ்வுகள் பல உண்டு. அந்த துறை சாதிக்கிடம் தானே இருக்கிறது அவரையே நீங்கள் தொடர்பு கொண்டிருக்கலாமே என்று  பதில் சொல்லி கலைஞர் முடித்து கொடுத்ததும் உண்டு.
அதே மாதிரி தான் அ.தி.மு..வில் அமைச்சராக இருந்த தன்னை MGRன் கொத்தடிமை என்று சொன்ன Y.S.M. யூசுப்   அவர்கள் இருந்தபொழுதும் நடந்தது. நாங்கள் தோழமை கட்சி இல்லையே எப்படி பேச என்று கேட்டார்கள். எங்கள் சமுதாயத்திற்கு வர வேண்டிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவது ஏன் என்று கண்டன அறிக்கையோ கடிதமோ அனுப்புங்கள் என்றார்.
MGRன் நண்பராக இருந்த கீழக்கரை B.S.A. அப்துல் ரஹ்மான் (மேரா நாம் அப்துல் ரஹ்மான் பாட்டுக்குரியவர்) அவர்கள் மு.லீக். தலைமை நிலையச் செயலாளராக இருந்த மேலப்பாளையம் சாந்து காஜா மைதீன் Ex M.P அவர்களுக்கும் நண்பர். ஆகவே MGR இடம் அவர் போனில் பேசி சமுதாயத்திற்கு வர வேண்டிய பிரதிநிதித்துவத்தை தக்க வைத்தார்.
பிற கட்சிகளில் முஸ்லிம்கள் என்ன பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று எதுவும் செய்ய முடிவதில்லை. மற்ற சமுதாயத்தவர்கள் குரு நில மன்னர்கள் போல் தங்கள் சமுதாயத்திற்கு என்றால் செயல்படுவார்கள்.
இன்று பெரும்பாலானவர்கள். தங்கள் முஸ்லிம் சமுதாயத்தால் தாங்கள் இருக்கும் அமைப்பிற்கு என்ன பயன் என்றுதான் பார்க்கிறார்கள். தான் இருக்கும் இயக்கத்தால் தனது முஸ்லிம்  சமுதாயத்திற்கு என்ன பயன் என்று பார்ப்பதில்லை. இதைத்தான் நாம் எல்லாரிமும் சொல்கிறோம்.
சாதிக்பாட்சாவின் காலத்திலேயே செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் கருணாநிதியின் நெருங்கிய தொண்டர்களாய் இருந்தார்கள். அவர்கள் மேலே வர வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை.
MGR ஐ சட்டமன்றத்தில் கடுமையாக எதிர்த்து புகழ் பெற்ற மூவரில் (சுப்பு, துரைமுருகன்) ஒருவரான, முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ரகுமான்கான், கா.மு. கதிரவன், களந்தை ஜின்னா, நெல்லை மஸ்தான், 2006ல் அமைச்சர்களாயிருந்த மைதீன்கான், உபயதுல்லா போன்றோரும் கட்சியின் மாநில நிர்வாக அதிகாரத்தைப் பெறவில்லை. பெற முடிவதில்லை.
சென்னை நகரின் பல தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்கு பலத்தைக் கொண்டவை. ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி. துறைமுகம். சைதாப்பேட்டை, சேப்பாக்கம் (முன்பு சேப்பாக்கம் தனியான ஒரு தொகுதியாக இருந்தது), திருவல்லிக்கேணி போன்றவற்றில் பெரும்பாலும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
ஆயிரம் விளக்கு உசேன் அவர்கள் மறைவு மூலம் தி.மு.க.வில் உள்ளவர்களுக்கு நாம் சொல்லும் விழிப்புணர்வு இதுதான். உன் சமுதாயத்தால் நீ இருக்கும் இயக்கத்திற்கு என்ன பலன் கிடைக்கும் என்று பாராதே என்று சொன்னவர் இறந்து விட்டார்.
நீயாவது உன் சமுதாயத்தால் நீ இருக்கும் அமைப்பிற்கு என்ன பயன் என்று பாராமல் நீ இருக்கும் இயக்கத்தால் உன் சமுதாயத்திற்கு என்ன பயன் என்று பார்த்து செயல்படு.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.