சிந்திப்பீர்களா? சுட்டிக் காட்டுவதால் எங்களை நிந்திப்பீர்களா?


ஒற்றுமைக்காக ஒருவர் வருந்துகிறேன், மன்னியுங்கள் என்றால் அவர் தலையில் இருந்த கிரீடம் இறங்கி இருக்குமா? அவர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்கி இருக்குமா? 

முன்னோடிகளே! நீங்களெல்லாம் ஷைத்தான்களை வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு பிரச்சாரம் செய்தவர்கள். இப்பொழுதுள்ள சூழல் ஷைத்தான்கள் அல்லவா உங்களை கூண்டோடு வென்று விட்டான். சிந்திப்பீர்களா?
----- இதழ் மூலம் - - - அவர்கள் வரம்பு மீறி விட்டார்கள். (ஒற்றுமை) ஒப்பந்தத்தை முறித்து விட்டார்கள் என்று வாதத்திற்காக வைத்துக் கொள்வோம்

----- அமைப்பினர் என்ன செய்திருக்க வேண்டும்? புதுப்பிக்கப்பட்ட உறவின் உரிமையுடன் ---- அவர்களிடம் நேரில் சென்று தவறை சுட்டிக் காட்டி திருத்தி இருக்க வேண்டும்.

(ஒற்றுமை ஒப்பந்தத்தை மீறி அவர் எழுதியதால்) ஏற்பட்ட மன வருத்தத்தை நேரில் வெளிப்படுத்தி இதனால் மீண்டும் பிரச்சனை வந்து விடா வண்ணம் பேசி விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்க வேண்டும். இந்தக் கடமையை ----- அமைப்பினர் செய்யத் தவறி விட்டனர்.

( ---- அவர்கள் கூற்றுப்படி ----- இதழில் எழுதியது) ஒப்பந்த மீறல் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அந்த இதழைக் கண்டு ---- அமைப்பினர் வருத்தத்திற்குள்ளாகி விட்டதால் ---- அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

வருத்தத்திற்குள்ளாகி விட்ட சம்பந்தப்பட்ட சகோதர அணியினரை நேரில் சந்தித்து அடுத்த இதழில் பக்கம் பக்கமாக எழுதிய தன்னிலை விளக்கத்தை இன்னும் இதமாக (பதமாக. நளினமாக) கூறி இருக்க வேண்டும்.

இதற்குப் பிறகும் வரம்பு மீறியதாக அவர்கள் கூறினால் இஸ்லாஹைக் கருதி. நான் ஒப்பந்தத்திற்கு உட்பட்ட செயல்தான் என்று எண்ணியே எழுதினேன். ஒப்பந்தத்திற்கு மீறிய செயல் என்று எண்ணி மனமறிந்து எழுதவில்லை.

உங்கள் மனதை புண்படுத்தி இருப்பின் வருந்துகிறேன். என்று வருத்தம் தெரிவித்து பிரச்சனை எழாமல் முற்றுப் புள்ளி வைத்து இருக்கலாம். இந்த வகையில் --- அவர்கள் தன் கடமையில் தவறி விட்டார்.

ஒற்றுமைக்காக, வருந்துகிறேன், மன்னியுங்கள் என்றால் அவர் தலையில் உள்ள கிரீடம் இறங்கி இருக்குமா? அவர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்கி இருக்குமா?

---- vs ---- அணிகள் தான் மோதிக் கொண்டன என்றால் மற்றவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர் அப்படித்தான் இவ்வளவு காலமாக நான் சொல்லி புரியாமல் ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனுபவ ரீதியாக அனுபவிக்கிறீர்கள். என்று ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்ட எங்களிடம் சொல்லி இருக்கக் கூடாது.

இப்படி எங்களிடம் சொல்லாமல் எத்தனை தடவை ஒற்றுமைப் படுத்தினார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு, பொருள் நஷ்டப்பட்டு ஒற்றுமை ஏற்படுத்தினார்கள். அவர்கள் செய்த முயற்சிகளை, ஒற்றுமைக்காக செய்த பணச் செலவுகளை, பயணச் செலவுகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா? மனிதன் என்றால் தவறு ஏற்படத்தான் செய்யும் என்று மூச்சுக்கு மூச்சு பிரச்சாரம் செய்யும் நீங்கள் ஒருவருக்கொருவர் உபதேசித்து இருக்க வேண்டும்.

அவர் பத்திரிக்கையில் எழுதி விட்டார் என்று காரணம் காட்டி இவர் மாநாடு மேடையில் பேசியதும். மாநாடு மேடையில் பேசி விட்டார் என்று காரணம் காட்டி அவர்  பத்திரிக்கையில் எழுதியதும். (ஆகிய இந்த செயல்கள்) அவரவர் பங்குக்கு ஒற்றுமை ஒப்பந்தத்தை முறித்து விட்டீர்கள். பகைமைக்கு வித்திட்டு விட்டீர்கள். என்றே சொல்ல வேண்டும்.

நீங்கள் அனைவரும் பட்டம் பதவிக்காகவே புதியதோர் கொள்கையைச் சொல்வதாக பாமர மக்களிடம் அவதுாறு பரப்பி வந்தவர்கள். இப்பொழுது உங்களுக்குள் யார் பெரியவன் என்ற பதவிச் சண்டை, பணச் சண்டை நடப்பதாக பேசி வருவது உங்கள் காதுகளிலும் ஒலித்து இருக்கும்.

நீங்கள் ஓரணியாய் இருந்தபோது குர்ஆனையும் ஹதீஸ் கிரந்தங்களையும் ஹதீஸ் அறிவிப்பாளர்களையும் பற்றி மக்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள்

நீங்கள் பிளவுபட்டு பிறகு கூட்டணி அமைத்து பிறகு பிரிந்து விடும் பணியால், குர்ஆன் ஹதீஸ் பற்றி ஆராய்ச்சியான பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்த மக்களை திசை திருப்பி விட்டீர்கள். சதா உங்களைப் பற்றி பேசச் செய்து விட்டீர்கள்.

நீங்கள் ஓரணியாய் இருந்தபோது ஜமாஅத் வளர்ச்சிக்கு உரிய அடுத்தக் கட்ட பணி என்ன? என்பது பற்றி சிந்தித்து செயல்பட்டீர்கள். இதைப் பொறுக்க முடியாத ஷைத்தான் உங்களிடையே சூழ்ச்சி செய்து விட்டான்.

இதனால் ஜமாஅத்தின் வளர்ச்சிப் பணி (சமுதாயத்தின் வளர்ச்சிப் பணி) பற்றி சிந்திக்காமல் உங்களுக்குள் உள்ள விவகாரம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய அவல நிலைக்குள்ளாகி விட்டீர்கள்.

முன்னோடிகளே! நீங்களெல்லாம் ஷைத்தான்களை வெல்ல வேண்டும் என்று எங்களுக்கு பிரச்சாரம் செய்தவர்கள். இப்பொழுதுள்ள சூழல் ஷைத்தான்கள் அல்லவா உங்களை கூண்டோடு வென்று விட்டான். சிந்திப்பீர்களா? சுட்டிக் காட்டுவதால் எங்களை நிந்திப்பீர்களா?

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.