ஒற்றுமை பேச்சு வார்த்தையில் முட்டுக் கட்டையாக இருந்தது மஸாயில் பிரச்சைனையா? கருத்து வேறுபாடா? கொள்கையா? எது?


மனக் கசப்புகளை மனம் விட்டு பேசித் தீர்த்து நீங்கள் ஓரணியில் திரண்டுவிட்டால் அல்லாஹ் அருளால் நீங்கள் ஆற்றக் கூடிய பணிகளின் சிறப்புக்களை  எழுதி முடிக்க முடியுமா?

ஒற்றுமையின் விலை என்னஒற்றுமையே உன் விலை தான் என்னஎன்று கேட்டு ஒற்றுமைக்கு கொடுத்த விலை என்னஉங்களுக்குத் தெரியுமா?
(சமுதாய முன்னோடிகளே!) இனிமேல் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம். ஒற்றுமை கூட்டணியால் பிரச்சனைதான் அவரவர் வழியில் அவரவர்கள் செல்லட்டும். அவர்கள் கூட்டணியாகவும் செயல்பட மாட்டார்கள். ஓரணியாகவும் சேர மாட்டார்கள்


எனவே அவர்களை ஒன்றுபடுத்த எடுக்கும் முயற்சிகள் வீணானது என்று விரக்தியின் மேலீட்டால் சொல்லக் கூடியவர்களும் இருக்கிறார்கள். (சமுதாய முன்னோடிகளான) நீங்களும் இனி சமரச முயற்சி தேவை இல்லை ஒற்றுமைக்கு வழியே இல்லை (என்று சொல்லி விட்டீர்கள்)


இனிமேலாவது தனி நபர் பிரச்சனைகளை மேடையில் பேச மாட்டோம். பத்திரிக்கையில் எழுத மாட்டோம். என்று உங்களுக்குள் முடிவு எடுத்து செயல்படுங்கள். இதனால் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் நிலை நீங்கும். மற்றவர்கள் விமர்சித்தாலும் இலட்சியப் பிணைப்பும் உறவும். உரிமையுடன் விமர்சித்தவரை கண்டிக்கச் செய்யும். நல்ல உயரிய நிலை உருவாகும். இல்லை எனில்.
என்னதான் எழுத மாட்டோம் பேச மாட்டோம் என்றாலும் நமது பிரிவைப் பயன்படுத்தி ஷய்த்தான் மூட்டி விடும் கோள்களினால் இரத்தம் சூடேற்றப்பட்ட நிலையில் நேரடியாகப் பேசி விடலாம். நேரடியாகப் பேசா விட்டாலும் மறைமுகமாகப் பேசலாம், எழுதலாம். இன்னும் பொறுமையுடன் மறைமுகமாகக் கூட விமர்சிக்காது இருந்தால் ஷய்த்தான்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.


(உதாரணம் அல்லாஹ்வின் அருளுக்குரிய ஒற்றுமை முயற்சியாளர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அதில்)  ஒரு மவுலவி முனாபிக்குகளின் அடையாளங்கள் பற்றிப் பேசினார். உடனே ஒரு சாரார். ஹஜரத் இன்னவரை கடுமையாகச் சாடி விட்டார். அந்தக் குரூப்பின் முகங்கள் கறுத்து விட்டன. அவர் முகத்தில் ஈயாடவில்லை என்று பேசினார்கள். இதைக் கேட்ட அந்த மவுலவி பேச்சாளரின் கற்பனையில் கூட வராததை கூறுகிறார்களே! என்று கூறி வருந்தினார்.


இது போல் நீங்கள் எண்ணிப் பாரக்காது பேசியவைகளுக்கும் எழுதியவைகளுக்கும் ஷைத்தான்கள் சாயம் பூசுவார்கள். நீங்கள் ஒன்றிணையாதவரை உங்களுக்குள் ஷைத்தான் மூட்டி விட்டுக் கொண்டேதான்  இருப்பான்.


மனக் கசப்புகளை மனம் விட்டு பேசித் தீர்த்து நீங்கள் ஓரணியில் திரண்டு விட்டால் அல்லாஹ் அருளால் நீங்கள் ஆற்றக் கூடிய பணிகளை எழுதவும் முடியுமா? ஆகவே ஏட்டளவில் எழுத்தளவில் ஒன்றிணையாது எண்ணத்தளவில் நல்ல மன வண்ணத்தளவில் ஒன்றிணைவீர். ஈருலகிலும் வெற்றி பெறுவீர்.


இது MLA, MP பதவி ஆசையால் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லப்பட்ட அரசியல்வாதிகளுக்கு எழுதியது அல்ல. அரசியலில் ஈடுபடுவதை இழிகாப் பேசிய தவ்ஹீது அணித் தலைவர்களுக்கு எழுதியது


மு.லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் ஸாஹிபுக்கு எதிராக இன்றைய தலைவர் காதர் மைதீன் அவர்களும் நாடறிந்த நாவலர் A.M. யூசுப் அவர்களும் பிரிந்த சமயத்தில் ஒற்றுமை பேச்சு வார்த்தைக் கூட்டம் கீழக்கரை பணக்காரர்கள் வீட்டில் வைத்துதான் நடந்தது என்று விமர்சசித்து பேசிய தவ்ஹீது முன்னணி தலைவர்களுக்கு எழுதியது.


தவ்ஹீது முன்னோடிகள் என்று சொல்லப்பட்ட இவர்களது ஒற்றுமைக்கான முயற்சிகள் எங்கு நடந்தது தெரியுமா? பல பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் வைத்து நடந்தது. ஒரே அணியாக ஆக்க நடந்த ஒற்றுமை பேச்சு வார்த்தையில் எது முட்டுக்கட்டையாக இருந்தது? கருத்து வேறுபாடா? கொள்கையா? நிச்சயமாக இல்லை. பணம் ஆம் பணம் தான்.


ஒற்றுமையின் விலை என்ன? ஒற்றுமையே உன் விலை தான் என்ன? என்று கேட்டு ஒற்றுமைக்கு கொடுத்த விலை என்ன? உங்களுக்குத் தெரியுமா?


இந்த அணி எங்களுக்கு இத்தனை லட்சம் தர வேண்டும் என்று இன்னொரு அணி சொல்ல. இல்லை இல்லை இதோ கணக்கு ஆதாரம். கணக்கை சரி கண்டு அந்த அணியினர் அனைவரும் கையெழுத்து போட்டுள்ள கெஜட் ஆதாரம் என்று அவர்கள் சொல்ல.


இறுதியில் அல்லாஹ்வின் அருளுக்குரிய சகோதரர்கள் சொன்னார்கள். மீண்டும் ஒரே அணியாக ஆகும் ஒற்றுமைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த பணம்தானே? அந்த பணத்தை தந்து விட்டால் ஒரே அணியாக ஆகி விடுவீர்கள் தானே.


அந்த அணி கணக்கு ஆதாரப்படி அவர்கள் பணம் கொடுக்க வேண்டாம். இந்த அணி சொல்லும் பணத்தை நாங்கள் தந்து விடுகிறோம். நீங்கள் ஒரே அணியாக ஆகி விடுங்கள் என்றார்கள். சரி காணப்பட்டு பணமும் செட்டில்மெண்ட் ஆனது. ஒரே அணியாக ஆகும் ஒற்றுமைதான் ஆகவில்லை. ஒற்றுமை மட்டும் .கே. ஆனது புரியவில்லையா?

முதலில் இருந்த மாதிரியான ஒரே அணிக்கு மற்ற இரு அணித் தலைவர்கள் ஒத்து வரவில்லை. ஆகவே இப்பொழுது இருக்கின்ற மாதிரி 3 அணிகளாக இருப்போம்.  ஆனால் கூட்டணியாக செயல்படுவோம் என்ற ஒற்றுமை .கே. ஆனது. சரி கைர் அல்ஹம்துலில்லாஹ் என்று நிம்மதிப் பெரு மூச்சு விடும் முன். கூட்டணி  உறவையும் முறித்துக் கொண்டார்கள்.


ஒற்றுமை என்ற லட்சியத்திற்காக உங்கள் கையிலிருந்து லட்சங்களையும் கால நேரங்களையும் செலவு செய்தவர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மன நிலை எப்படி இருக்கும்?


எத்தனை தடவை ஒற்றுமைப் படுத்தினார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு, பொருள் நஷ்டப்பட்டு ஒற்றுமை ஏற்படுத்தினார்கள்.  அவர்கள் செய்த முயற்சிகளை,  ஒற்றுமைக்காக செய்த பணச் செலவுகளை, பயணச் செலவுகளை முன்னோடிகள் எண்ணிப் பார்த்தார்களா? இல்லை. நிச்சயமாக இல்லை.


கைப்பட எழுதியதில் அணித் தலைவர்கள் பெயர்கள் அணிகளின் (இயக்கங்கள்) பெயர்கள் எல்லாம் குறிப்பிட்டுத்தான் எழுதி இருந்தோம். இங்கே எடிட் செய்து வெளியிட்டுள்ளோம். இஸ்லாமிய உணர்வுகளை விட இயக்க வெறியும் தனி மனித வழிபாடும், துதி பாடலும் மிகைத்து விட்ட காலத்தில் இருக்கிறோம். 

அப்படியே வெளியிட்டால் உண்மையை பொய்ப்படுத்த ஒரு கூட்டம் வரும். இது பொய் என்றால் என்று நமது பாணியில் பதில் கூற வேண்டி வரும். ஆகவே ஒற்றுமைக்கு முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு முயற்சிகளின் வரலாற்று நிகழ்வில் ஒன்றை வெளியிட்டுள்ளோம்.

அப்துல் ஸமது ஸாஹிப், அப்துல் லத்தீப் ஸாஹிப் ஆகியவர்கள் பிரச்சனை முதல் பலவற்றுக்கு பல வகையில் ஒற்றுமை முயற்சிகள் செய்து உள்ளோம். கை நோக கைப்பட எழுதிய கடிதங்கள் பல. ஒற்றுமையே உன் விலை தான் என்ன



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.