2: 67 ல் உள்ள பகரத் என்ற சொல்லுக்கு விளக்கமாக உள்ளது தான் 6;144 வசனம்

வரிசையாக வார்த்தைக்கு வார்த்தை பார்த்து வரும் நாம். இடையில்   7:40 , 76;6  போன்ற வசனங்களுக்க வந்த கேள்விகளை ஒட்டி விளக்கம் எழுதி உள்ளோம். அது போல் 2:67க்கும்  எழுதி இருக்கிறோம்.


கடையநல்லுாரைச் சார்ந்த ஒரு பெண் குர்ஆன் தமிழாக்கங்களை ஒப்பீடுடன் படித்து அதை ஒட்டி கேட்ட கேள்விக்கு அழித்த பதிலில்  ஒரு பகுதி  விளக்கம்  முன்பு எழுதி விட்டோம் என்பதை நினைவூட்டிக் கொள்கிறோம்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/09/2-67-6144.html



இந்த  67வது வசனம் முதல் 71வது வசனம் வரை மாட்டுடன் தொடர்புடைய அதிசய நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இடம் பெற்றதன் காரணமாக "அந்த மாடு' என்ற பெயர் இந்த அத்தியாயத்துக்கு வந்தது.  


காளை, பசு இரண்டையும் இச்சொல் குறித்தாலும், பெயர் வரக் காரணமான 67 முதல் 71 வரை உள்ள வசனங்களைக் கவனித்தால் காளையையே குறிக்கிறது என அறியலாம்.


இது சம்பந்தமாக  

பகரா ஆண்பாலா? பெண்பாலா? பசு ஆண்பாலா? பெண்பாலா?


பசு என்பது நந்தியா? நந்தினியா? இரண்டுக்கும் பொதுவானதா?


ஆகிய  தலைப்புகளில் விளக்கம் தந்துள்ளோம். 

6;144 வசனத்திற்கு  ஆரம்ப கால  மொழி பெயர்ப்பாளர்களான் ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி , தென்காசி  E.M. அப்துர் ரஹ்மான் நூரிய்யி, பாஜில், பாகவி   போன்றவர்கள் தந்துள்ள தமிழாக்கங்களையும் ஆதாரமாக முன்பு  தந்துள்ளோம். 





وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّـهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً ۖ قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا ۖ قَالَ أَعُوذُ بِاللَّـهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ ﴿٦٧﴾

وَإِذْ -  வஇது(ர்) 
போது -சமயம் - நேரம்

قَالَ - ஃகால  
கூறினார் - கூறினான் -சொன்னான்

وَاِذْ قَالَவஇது(ர் ஃகால 
கூறியபோது

مُوسَىٰ மூஸா 
மூசா

لِقَوْمِهِ லிகவ்மிஹி 
 தமது சமுதாயத்திடம் - தன் சமுதாயத்திற்கு

إِنَّ اللَّـهَ - இன்னல்ழாஹ
  அல்லாஹ்

يَأْمُرُكُمْ -  யஃமுறுகும் 
கட்டளையிடுகிறான் - உங்களை ஏவுகிறான் - ஆணய்யிடுகிறான்

أَن تَذْبَحُوا - அன்த(ர்)துபஹுவ்  
 -நீங்கள் அறுக்க வேண்டும்- நீங்கள் அறுப்பதற்கு

بَقَرَةً - பகரதன்

قَالُوا -  ஃகாலுா 
கேட்டனர் - கூறினார்கள்  

أَتَتَّخِذُنَا - அதத்தகி(ரு)துனா? 
"எங்களைக்  கருதுகிறீரா? - எங்களை எடுத்து கொள்கிறீரா 

هُزُوًا - ஹுZஸுவா 
கேலிப் பொருளாக - பரிகாசமாக -

قَالَ - ஃகால 
என்றார் - கூறினார் 

أَعُوذُ - அஃவூ(ரு)து 
பாதுகாப்புத்தேடுகிறேன்

بِاللَّـهِ- பில்லாஹி
அல்லாஹ்விடம்


أَعُوذُ بِاللَّـهِ - அஃவூ(ரு)துபில்லாஹி 
அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுகிறேன்


أَنْ أَكُونَ  - அன்அகூன 
நான் ஆவதைவிட்டும்

مِنَ الْجَاهِلِينَ - மினல் ஜாஹிலீன
அறிவீனனாக - அறிவிலிகளில்

மொழிப்பெயர்ப்பு :


 "ஒரு காளைமாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது "எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.24 - (PJதொண்டி)


https://onlinepj.in/index.php/alquran/alquran/quran-descriptions/bakara-enral-pasumaadaa-kalaimada



மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுவை அறுக்க வேண்டும் என்று திண்ணமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னதையும் நினைத்துப் பாருங்கள். அப்போது அவர்கள், "எங்களைக் கிண்டல் செய்கின்றீரா?" என்று வினவினர். அவர், "அல்லாஹ் என்னைப் பாதுகாப்பானாக! (அப்படிப் பட்ட) அறிவீனர்களில் நான் ஒருவனல்லன்" என்று கூறினார். -  (அதிரை ஜமீல்)



ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான் என மூசா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூறுங்கள். ( அதற்கவர்கள் மூசாவே !) எங்களை பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா எனக் கூறினார்கள் . அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் எனக் கூறினார் - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார். -ஜான் டிரஸ்ட்

 

தவிர, "ஒரு மாட்டை நீங்கள் அறுக்கும்படி நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான்" என மூஸா தன் சமூகத்தார்களுக்குக் கூறியதற்கு அவர்கள் (மூஸாவே!) "நீங்கள் எங்களைப் பரிகாசம் செய்கிறீரா?" என்றார்கள். (அதற்கு) "நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனனாக ஆவதை விட்டும் அல்லாஹ் விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்றார். -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

மேலும், இந்தச் சந்தர்ப்பத்தை நினைவுகூருங்கள்: மூஸா, தமது சமூகத்தாரிடம் “ஒரு பசுவை நீங்கள் அறுக்க வேண்டும் என்று அல்லாஹ் நிச்சயமாக உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்” எனக் கூறினார். (அப்போது அவர்கள் “மூஸாவே!) நீர் எங்களை கேலி செய்கிறீரா?” என்றார்கள். அதற்கு அவர், “நான் (அவ்வாறு பேசி) அறிவீனர்களில் ஒருவனாகி விடுவதிலிருந்து இறைவனிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்றார். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

இன்னும், (இதையும் நினைவு கூறுங்கள்). “ஒரு பசுமாட்டை நீங்கள் அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாகக் கட்டளையிடுகிறான்” என மூஸா தன் சமூகத்தாரிடம் கூறியபோது, எங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா? என்றனர். அதற்கு அவர் “நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆகிவிடுவதை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்றார். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)






Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு