2:70ல் அம்மாடு என்று ஒருமையில் அப்துல் ஹமீத் பாகவி போன்றோர் மொழி பெயர்த்துள்ளார்கள்.

 மற்றவர்கள் மாடுகள் என்று பன்மையில்  மொழி பெயர்த்துள்ளார்கள். 


இன்னல் பஃகர என்பதில் இன்ன என்பது தஃகீத் சொல்.


லமுஹ்ததுான என்பதில் ல(ாம்) தஃகீத் சொல்.  


ஆக 2:70ல் இரண்டு தஃகீத் சொற்கள் உள்ளன. 


அவற்றில் ஒன்றை  பாகவி, (IFT)     தாருஸ்ஸலாம் - ரியாத்  ஆகியோர் மொழி பெயர்க்கவில்லை


இது போன்றவற்றை கவனத்தில்  கொண்டு இணைப்பில் உள்ள 7+8= 15 மொழி பெயர்ப்புகளை  ஆய்வுடன் படியுங்கள். 


அல்லாஹ்வின் அருளால்  விளக்கம்  பெறுவீர்கள்.


https://mdfazlulilahi.blogspot.com/2020/09/270.html




قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِن شَاءَ اللَّـهُ لَمُهْتَدُونَ ﴿٧٠﴾

قَالُوا - ஃகாலுா
கூறினார்கள் - என்றார்கள் - கேட்டனர்

ادْعُ - உத்ஃஉ
வேண்டுவீராக! - கேட்பீராக -பிரார்த்திப்பீராக

لَنَا - லனா 
எங்களுக்காக

رَبَّكَ - ரப்பக 
உமது இறைவனிடம்

يُبَيِّن - யுபய்யின்
தெளிவுபடுத்துவான்- விவரிப்பான் - விளக்குவான்

لَّنَا - லனா
எங்களுக்கு

مَا  மா  
என்ன

هِيَ ஹிய 
அது


 إِنَّ الْبَقَرَ  - இன்னல் பஃகர 

அந்த மாடு - அம்மாடு 

تَشَابَهَ - தஷாபஹா 
குழப்புகிறது


عَلَيْنَا - ஃஅலைனா 
எங்களுக்கு


وَإِنَّا வஇன்னா
 நாங்கள்

إِن شَاءَ اللَّـهُ  - இன்ஷாஅல்லாஹ் 
அல்லாஹ் நாடினால்

لَمُهْتَدُونَ - லமுஹ்ததுான
 நேர்வழி பெறுவோம்





எழுத்து வடிவில் 7  மொழிப் பெயர்ப்புகள் :


"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர். -(PJதொண்டி)  


அதன் தன்மை பற்றி இன்னும் தெளிவாக எங்களுக்கு விளக்கும்படி உமது இறைவனிடத்தில் வேண்டுவீராக! அஃது எப்படிப்பட்டது என்பதை அவன் எங்களுக்கு ஐயமறத் தெளிவு படுத்துவான். எங்கள் பார்வைக்கு எல்லாப் பசுக்களும் ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன. அல்லாஹ் நாடினால் திண்ணமாக நாங்கள் நேர்வழி பெற்றவர்களாகி விடுவோம் என்று அவர்கள் மூஸாவிடம் கூறினார்கள். -  (அதிரை ஜமீல்)


அதற்கவர்கள் அம்மாடு எங்களைச் சந்தேகத்திற் குள்ளாக்குகின்றது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்தறிவிக்கும்படி உங்களுடைய இறைவனை நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நாடினால் இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்" எனக் கூறினார்கள். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)


அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) அது எத்தன்மை உடையது என (மிக மிகத்)தெளிவாக எங்களுக்கு விவரிக்கும்படி உம் இறைவனை வேண்டுவீராக! ஏனெனில், நிச்சயமாக அந்தப் பசு (எதுவென்பது) பற்றி எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மேலும், அல்லாஹ் நாடினால் (உரிய பசுவின் பக்கம்) நாங்கள் வழிகாட்டப் பெறுவோம்.” -இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)


அவர்கள் (மூஸாவே உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! (அவ்வாறு நீர் பிரார்த்தித்தால்) அந்தப் பசு எந்த வகையைச் சேர்ந்தது என எங்களுக்கு அவன் தெரியப் படுத்துவான்; நிச்சயாமாக எல்லாப் பசுக்களும் எங்களுக்கு ஓன்று போல் ஆகி அவற்றில் அந்தப் பசு எது என்பது எங்களை சந்தேகத்துக்குள்ளாக்கி விட்டது; மேலும் அல்லாஹ் நாடினால், இனி நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறக் கூடியவர்கள் என்றும் கூறினார்கள்.- (அல்-மதீனா அல்-முனவ்வரா)



எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக ! அது எது என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் எங்களுக்கு குழப்பமாகிவிட்டன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம் எனக் கூறினார்கள். - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)



"உமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக! அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம்" என்று அவர்கள் கூறினார்கள். - ஜான் டிரஸ்ட்


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு