2:66. பாவப்பரிகாரம் - தண்டனை செயலுக்கா?செயலை செய்தவருக்கா?

அவரது விளக்கம் வேண்டாம் இவரது விளக்கம் வேண்டாம் என்று சொல்லும் விபரமுள்ளவர்களும்(?) இதனை படித்து விட்டு விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறோம்.

இந்த 2:66ல் லிமா பைன யதைஹா வமா ஃகல்Fபஹா  என்ற அந்த வார்த்தைக்கு 


அதற்கு முந்தைய காலத்திற்கும்  அதற்கு பிந்தைய காலத்திற்கும் என்று மொழி பெயர்க்கக் கூடிய சொல் தான் அது.  

 

யதைஹா என்றால் முன்னாலும் கல்பஹா என்றால்  பின்னாலும்  என்ற பொருள் வரக் கூடிய வார்த்தைகள் தான் அது.


https://mdfazlulilahi.blogspot.com/2020/09/266.html

அக்காலத்தவருக்கும்,  அடுத்து வரும்  காலத்தவருக்கும்  என்று மொழி பெயர்த்து உள்ளவர்கள். அதற்கான விளக்கம் தர வேண்டும்.

 

யதைஹா யதைஹி என குர்ஆனில் எத்தனையோ இடங்களில் வருகின்றன அங்கே எல்லாம் அதற்கு முன்னால் என்றே மொழி பெயர்த்து உள்ளார்கள்.

 

2:97. 2:255. 3:3. 3:50 5:46 5:48. 6:92. 7:17.  7:57. 10:37

 

ஹா,  ஹி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது ஹா பெண்பாலைக் குறிக்கும்  ஹி ஆண்பாலைக் குறிக்கும்  

---------------------------  இது ஒரு  வித விமர்சனம்.

 

லிமா பைன யதைஹா வமா ஃகல்Fபஹா  என்பதற்கு பலர்  மனிதர்களாக மொழி பெயர்த்து உள்ளார்கள். 


அதை ( - அந்த தண்டணையை -)  அதற்கு முந்திய   பாவங்களுக்கும்  (அது போன்ற)  அதற்குப் பிந்திய  பாவங்களுக்கும் ஓர் எச்சரிக்கை  மிகுந்த  படிப்பினையாகவும்  அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாகவும்  ஆக்கினோம். 

இப்படி இணைப்பில் உள்ள மாதிரி  அந்த மொழி பெயர்ப்பாளர் பாவம் என்று செயலுக்கு  மொழி பெயர்த்து உள்ளார்


அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், 

ஆட்களுக்கு பாவப்பரிகாரம் என்கிறார்கள்  மற்றவர்கள்.

அவரோ செயலுக்கு  பாவப்பரிகாரம் என்கிறார்.

மா பைன என்பது உயர்திணை அல்ல அஃறிணை

 

லிமன்,வமன்

 

லிமன் பைன யதைஹா வமன் ஃகல்Fபஹா என்று சொன்னால்தான் உயர்திணையாகப் பயன்படுத்த முடியும்

அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும்  என்று சொல்ல முடியும் அதாவது உயர்திணையாக சொல்ல முடியும்

திணை இருவகைப்படும் உயர்திணை, அஃறிணை

உயர்திணை: மக்களைக் குறிக்கும் சொல் ...

மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் அஃறிணை ஆகும்.


இப்படியாக  உள்ள கருத்துக்கள் சம்பந்தமாக எல்லாரின் பார்வைக்கும் தந்துள்ளோம்.  அவரது விளக்கம் வேண்டாம் இவரது விளக்கம் வேண்டாம் என்று சொல்லும் விபரமுள்ளவர்களும்(?) இதனை படித்து விட்டு விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறோம்.

 இனி வார்த்தைக்கு வார்த்தை

فَجَعَلْنَا - Fபஜஃஅல்னா  

ஆகவே நாம் ஆக்கினோம் 

هَا - ஹா 

அதை - இதனை 

نَكَالًا - நகாலன் 

படிப்பினை 

  لِمَا بَيْنَ يَدَيْهَا - லிமா பைன யதைஹா

அக்காலத்தவருக்கும் - அக்காலத்தில் உள்ளவர்கள் 

وَمَا خَلْفَهَا -  வமா ஃகல்Fபஹா 

அடுத்து வரும் காலத்தவருக்கும் - அதற்குப் பின்னால் இருக்கிறதே அதற்கு - அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், 

وَمَوْعِظَةً - வமவ்ஃஇழதன் 

பாடம் - உபதேசம்

 لِلْمُتَّقِينَِ லில் முத்தகீன 

அஞ்சுவோருக்கு - பயபக்தியுடையவர்களுக்கு


தமிழாக்கங்கள்

(அந்நிகழ்வை) அக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும் அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சம் உடையோருக்கு அறவுரையாகவும் ஆக்கினோம். - (அதிரை ஜமீல்)


அதை அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும் பாடமாகவும், (நம்மை) அஞ்சுவோருக்குப் படிப்பினையாகவும் ஆக்கினோம். (PJதொண்டி)

 

இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம். -(K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்) ஜான் டிரஸ்ட்


இதனை (அக்காலத்தில்) அவர்களுக்கு எதிரில் இருந்தவர்களுக்கும், அவர்களுக்குப் பின் (பிற்காலத்தில்) வருபவர் களுக்கும் ஒரு எச்சரிக்கை மிகுந்த படிப்பினையாகவும், இறை அச்சம் உடையவர்களுக்கு ஒரு உபதேசமாகவும் ஆக்கினோம்.  -( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

(இவ்வாறு) அவர்களின் இறுதி முடிவை அன்று வாழ்ந்த மக்களுக்கும் அதற்குப் பின்னர் வரக்கூடிய வழித்தோன்றல்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் இறையச்சம் உடையோர்க்கு நல்லுரையாகவும் ஆக்கினோம். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

ஆகவே, இதனை (அக்காலத்தில்) அவர்களின் எதிரிலிருப்பவர்களுக்கும் அவர்களுக்குப்பின் (காலத்தில்) வருபவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் பயபக்தியுடையோருக்கு ஒரு உபதேசமாகவும் நாம் ஆக்கினோம். -(அல்-மதீனா அல்-முனவ்வரா)



Comments

Gani Aziz said…
மாஷா அல்லாஹ்... தமிழையும் சேர்த்து அறியும் வகையில் இந்த விளக்கங்கள் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு