2:69 கருமஞ்சள் - கலப்பற்ற மஞ்சள் - அடர் மஞ்சள்
தூய்மையானது – பிரகாசமானது – பளீர்ரென்றானது – கெட்டியானது பரவசப்படுத்தும் - (மனதைக்) கவரும் மகிழ்விக்கும் இப்படியாக இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மாட்டின் நிறம் பற்றியும் தன்மை பற்றியும் அவரவர் ஆய்வுக்கு தக்கவாறு மொழி பெயர்த்துள்ளார்கள்.
அவற்றை இணைப்பில் உள்ள (7+8=15) பதினைந்து மொழி பெயர்ப்புகளில் காண்கிறீர்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/09/269.html
2:66. வசன மொழி பெயர்ப்புகளை ஒட்டி பாவப்பரிகாரம் - தண்டனை செயலுக்கா? செயலை செய்தவருக்கா? என்ற கேள்விக்கு அவரது விளக்கம் வேண்டாம் இவரது விளக்கம் வேண்டாம் என்று சொன்ன விபரமுள்ளவர்களிடமிருந்தும் பதில் வரவில்லை.
2:69ல் உள்ள இரண்டு தஃகீத் சொற்களில் பாகவி இரண்டையும் மொழி பெயர்க்கவில்லை.
அதற்கவர்கள்
"அதன் நிறம் என்னவென்று அறிவிக்கும்படி நீங்கள் உங்களுடைய இறைவனைக் கேளுங்கள்"
என்றார்கள். (அதற்கு மூஸா) "அது பார்ப்பவர் மனதைக் கவரக்கூடிய கலப்பற்ற மஞ்சள்
நிறமான மாடு என அவன் கூறுகிறான்" என்றார். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)
அதன் நிறம் என்ன என்பதை
எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனைக் கேட்பீராக! என அவர்கள் கூறினார்கள்.
"அது மஞ்சள் நிறமுள்ள பசுவாகும். அதன் நிறம், பார்ப்பவர்களுக்குப்
பரவசமூட்டும் அடர் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்" என்றார்.- (அதிரை ஜமீல்)
படி
நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!” என அவர்கள் கூறினார்கள்; அவர் கூறினார் “திடமாக அது
மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும்
அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்” என்று மூஸா கூறினார். - ஜான் டிரஸ்ட்
மீண்டும் அவர்கள் கூறினார்கள்: (“மூஸாவே!) அதன் நிறம் என்ன என்று எங்களுக்கு விவரிக்குமாறு உமது இறைவனிடம் நீர் வேண்டுவீராக!” அதற்கு அவர், “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசுவாக இருக்க வேண்டும்; அதன் நிறம் பார்ப்பவர்களைப்பரவசப்படுத்தும் வண்ணம் (அடர்த்தியாக) இருக்க வேண்டும்!” என்றார். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)
அவர்கள் (மூஸாவிடம்) “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக!
(அவ்வாறு பிரார்த்தித்தால்” அதன் நிறம் என்ன,” என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்
என்று கூறினார்கள்; அதற்கு நிச்சயமாக அது (கலப்பற்ற மஞ்சள் நிறமான ஒரு பசுவாகும்; அதன்
நிறம் கெட்டியானது; பார்ப்பவர்களை பசு கவர்ந்து, அது மகிழ்விக்கும்” என நிச்சயமாக அவன்
கூறுகிறான் என மூஸாவாகிய அவர் கூறினார்.- (அல்-மதீனா அல்-முனவ்வரா)
Comments