அல் குர்ஆன் 8 : 48 வசனத்தை எப்படி புரிந்து கொள்வது?
ஷய்த்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகானதாகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!
"இன்று மனிதர்களில் உங்களை வெல்ல யாருமில்லை; நான் உங்களுக்கு அருகில் இருக்கிறேன்'' எனவும் கூறினான்.
இரு அணிகளும் நேருக்குநேர் சந்தித்தபோது பின்வாங்கினான்.
"உங்களை விட்டும் நான் விலகிக் கொண்டவன். நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்'' என்று கூறினான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/09/8-48.html
https://www.youtube.com/watch?v=oCCVQ_5RwxA
இந்த 8 : 48 வசனப்படி ஷய்த்தான் மனித உருவில் வந்து அவர்களை வழி கெடுத்தான் என்று எடுத்துக் கொள்வதா?
ஷய்த்தான் உருவமாக வர மாட்டான் என்ற காரணத்தால் நேரடி பொருள் கொள்ளாமல் வேறு மாதிரி விளங்க வேண்டுமா?
ஷய்த்தான் உரு மாற முடியுமா? அவன் மனிதர்களை குழப்ப உரு மாறி கூட வருவானா?
இதற்கு பீ.ஜே. அளித்துள்ள விளக்கம் இணைப்பில் உள்ளது.
இந்த வசனத்திற்க்கும் இது போன்ற இன்னுமுள்ள பல வசனங்களுக்கும் விளக்கம் கேட்டு பலருக்கு அனுப்பினோம் பதில் விளக்கம் தரவில்லை.
ஆகவே பதில் விளக்கம் தர இயலாத அவர்களுக்கு பீ.ஜே. தந்த விளக்கத்தை அனுப்பினோம். அந்த விளக்கம் சரியா தவறா? என்று கூறாமல் பீ.ஜே. விளக்கம் வேண்டாம் என்று பதில் அனுப்பினார்.
பீ.ஜே. விளக்கம் வேண்டாம் என்று கூறும் மவுலவி அவர்களே!
https://mdfazlulilahi.blogspot.com/2020/09/blog-post_81.html
என்ற தலைப்பில் அவருக்கு பதில் பதிவு போட்டோம். அதைக் காண விரும்புவோர் லிங்கை கிளிக் செய்யவும். அல்லது தலைப்பை போட்டு சர்ச் செய்து பார்த்துக் கொள்ளவும்.
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன்.
Comments