76:6 மொழி பெயர்ப்புகளில் எது சரி என்று கேட்ட கேள்விக்கு சரியான பதில் எது?

அடிப்பதாக அடித்தான் 

கொல்வதாக கொன்றான்; 

உதவுவதாக உதவினான்

பெற்றுக் கொள்வதாக பெற்றுக் கொள்வார்கள்

என்பது போன்ற வார்த்தைகள் தமிழில் பயன்படுத்தும் முறை உண்டா?


https://mdfazlulilahi.blogspot.com/2020/09/766.html


அரபு மொழியில் மஃப்வூல் முத்லக் என்று ஒரு வகை உள்ளது ஒரு வினைச் சொல்லுக்குப் பின் அதே வினைச் சொல்லில் இருந்து பிறந்த மஸ்தர் – தொழிற்பெயரைப் பயன்படுத்துவது மஃப்வூல் முத்லக் எனப்படும்.ஒரு செயலை நிறைவாக சிறப்பாக செய்வதைக் குறிக்க இவ்வாறு பயன்படுத்துவார்கள்.உதாரணமாக...........


இதன் தொடரை காணும் முன் ஒரு விளக்கம்.


நான்  அரபி கல்லூரிகளில் படித்தவன் அல்ல. படித்தவர்களுடன் பழகிய  பழக்கத்திலும்  அரபிகளுடன்  உள்ள தொடர்பிலும் ஓரளவு அரபு மொழியை தெரிந்து இருக்கிறேன் அவ்வளவுதான்.  அரபி ரெஸ்ட்டாரண்ட்டில் தான் வேலை செய்கிறேன். இதை பல முறை பதிந்து விட்டேன்.  


 

ரெஸ்ட்டாரண்ட் ஊழியன் என்று சொல்லிக் கொள்வதற்கும் டிரைனேஜ்களை அள்ளிக் கொண்டு போய் குப்பைத் தொட்டிகளில் போட்டவன் என்பதையும் சொல்ல  வெட்கப்பட்டவன் அல்ல. 


 

நாம் அளித்து வரும் பதில்களில்  குறை காண்பவர்கள் அது பற்றிய தக்க ஆதாரத்தோடு விளக்கம் தந்தால் பொதுவில் வைப்பானாக உள்ளேன்.  எனது சுட்டிக்  காட்டல்கள்  பொத்தாம் பொதுவானவை அல்ல .

 

முடிந்த வரை எல்லா மொழி பெயர்ப்புகளையும் வெளியிட்டு விட்டுத்தான்  எது சரி  என்பதற்குரிய  விளக்கங்களை  வெளியிட்டு வருகின்றேன். 


 

மாற்று கருத்து உடையவர்கள் நாம் கேட்ட கேள்விகளுக்கு சரியான  பதில்களை விளக்கங்களை குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து தராமல்.  தொழிலைக் கூறி விமர்சனங்கள் செய்வதும். நக்கல் செய்வதுமாக உள்ளார்கள். இவை எல்லாம் அவர்கள் வழிகேடர்கள் என்பதற்குரிய ஆதாரங்களாகவே  எடுத்துக் கொள்கிறேன். 



[12/09, 12:56 am] Fazlul: இதற்கு பதில்?

[12/09, 11:35 am] -----: நீங்க தான் மூத்த அறிஞர் தொடர்பில்  இருக்குகிங்க அவர்கிட்ட கேழுங்க ஜி

[12/09, 11:36 am] -----: அவர்ட தான் What's app la தொடர்புல  இருகிறிங்க

--------------------

76:6 வசனத்திற்கு  அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் ஓடைகளாக ஓடச் செய்வார்கள் என்ற பொருள்பட மொழி பெயர்ப்புகள் உள்ளனவே.  விவசாயத்திற்குத்தானே  உலகில் ஓடைகளாக ஓடச் செய்வோம். 




சுவர்க்கத்தில் கேட்டது கிடைக்கும்  என்று கூட அல்லாஹ் சொல்லவில்லை. அதைவிட   அட்வான்ஸாக  அவர்கள் நினைத்தவை (நாடியவை- விருப்பியவை) அவர்களுக்கு அங்கே உண்டு (25;16) என்றல்லவா அல்லாஹ் கூறி இருக்கிறான்.  



அப்படி இருக்க  அதனை அவர்கள் தாங்கள் விரும்பிய இடமெல்லாம் ஓடச் செய்வார்கள் என்பது பொருத்தமாக இல்லையே என்று ஒரு மவுலவி கேட்டிருந்தார். 



அதை ஒட்டி  76:6 வசனத்தின் எல்லா மொழி பெயர்ப்புகளையும். எது எது யாருடைய மொழி பெயர்ப்பு என்று பெயர் குறிப்பிடாமல்  எல்லாருக்கும் அனுப்பினோம். 



அறிஞர்கள் குழு என்று சொல்லிக் கொண்டவர்களுக்கும் அது போன்றவர்களுக்கும் அவர்களுடன்  தொடர்பில் உள்ளவர்களுக்கும் சம்பந்தப்பட்ட வெளியீட்டாளர்களுக்கும்  மார்க்க விஷயத்தில் ஈடுபாடு உடைய பொது மக்களுக்கும் அனுப்பி  பதில் கேட்டு  இருந்தோம்.   


[22/08, 6:11 pm] கலீல்பாய்: கடைசியாக இருப்பதே சரி



மவுலவிகள் அல்லாத எல்லாருமே  கடைசியில் இருந்த  மொழி பெயர்ப்பே சரியாகத் தெரிகிறது  என்று கலீல்பாய் எழுதி உள்ளது போல் பேசி இருந்தார்கள்.  கடைசியாக  இருந்தது  பீ.ஜே. மொழி பெயர்ப்புதான். 


அவர்களது பதிலை ஒட்டி நாம் கேட்ட கேள்வி.


[23/08, 6:05 am] Fazlul: யுFபஜ்ஜிரூனஹா தFப்ஜீரா - அதனை ஒலித்தோடச் செய்வதாக ஒலித்தோடச் செய்வார்கள். இப்படித்தான் தமிழக அரபுக் கல்லுாரிகளில் பாடம் நடத்தி உள்ளார்கள். அந்த அடிப்படையில் தான் எல்லா மொழி பெயர்ப்புகளும் உள்ளன.


 நீங்கள் சரி என்று கூறி உள்ள  தர்ஜமாவில் இருக்குமிடத்திலிருந்தே என்பதற்கு என்ன அரபு வார்த்தை குர்ஆனில் உள்ளது? அதைப் பெற்றுக் கொள்வார்கள். என்பதற்கும்  என்ன அரபு வாசகம் குர்ஆனில் உள்ளது? 


[23/08, 3:00 pm] கலீல்பாய்: நீங்கள் போட்ட வசனத்தில் நான் படித்ததில் அதுதான் சரி என்று சொன்னேன் அரபு வாசகம் கேக்குரிங்க அது எனக்கு தெரியாது


[23/08, 3:01 pm] கலீல்பாய்: என்னுடைய கருத்து அது தான் சரி என்று தெரிந்தது


[23/08, 5:42 pm] Fazlul: ஜெஸாக்குமுல்லாஹு கைரன்

------------------------


இறுதியாக  பீ.ஜே. க்கும் அனுப்பினோம் அவர் தந்த பதிலை மவுலவிகளுக்கும் அனுப்பினோம்.  யாருமே பதில் தரவில்லை. மீண்டும் நினைவூட்டினோம். அதைப்  பார்த்த ஒரு மவுலவி மட்டும் தந்த பதில் 

[30/08, 7:48 am] -------: அருமை  இப்போ தான் படித்தேன் என்னவோ என்று படிக்காமல் இருந்து விட்டேன்  நன்றி.


வரட்டு கவுரவம் பார்க்காமல் உண்மையை ஒப்புக் கொண்ட  இந்த மவுலவி மீது அல்லாஹ்வின் பேரருள் என்றென்றும் உண்டகாட்டுமாக ஆமீன்.

--------


இனி பீ.ஜே. அளித்த பதிலும்  விளக்கமும் .


[28/08, 11:59 am] PJ வாட்ஸப்: அஸ்ஸலாமு அலைக்கும்

 

6. ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.

 

يُفَجِّرُونَها تَفْجِيراً

 

அரபு மொழியில் மஃப்வூல் முத்லக் என்று ஒரு வகை உள்ளது.

 

ஒரு வினைச் சொல்லுக்குப் பின் அதே வினைச் சொல்லில் இருந்து பிறந்த மஸ்தர் – தொழிற்பெயரைப் பயன்படுத்துவது மஃப்வூல் முத்லக் எனப்படும்.

 

ஒரு செயலை நிறைவாக சிறப்பாக செய்வதைக் குறிக்க இவ்வாறு பயன்படுத்துவார்கள்.

 


உதாரணமாக

 

லரப என்றால் அடித்தான் என்று பொருள். இதன் பின்னால் லர்பன் என்ற மஸ்தரைச் சேர்த்து

 


லரப லர்பன் என்று சொன்னால் நன்றாக அடித்தான் என்ற கருத்தைச் சொல்வது இதன் நோக்கம். ஆனால் தமிழக மதரஸாக்களில் இதற்கு பொருள் கொள்ளும் போது அடிப்பதாக அடித்தான் என்று சொல்லிக் கொடுப்பார்கள்.

 


கொல்வதாக கொன்றான்; உதவுவதாக உதவினான் என்பது போல் தமிழில் பயன்பாடு இல்லை. பிழைக்க முடியாதவாறு கொன்றான். நன்கு உதவினான் என்ற கருத்தைச் சொல்வதற்காகவே இந்த பயன்பாடு.

 


மேற்கண்ட வசனத்தில் இரு விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்

 


யுஃபஜ்ஜிரு என்பதன் பொருள் என்ன?

 


ஃபஜ்ஜர என்றால் பீறிடச் செய்தான் என்பது பொருள். யுஃபஜிர் அல்லாஹ் என்று சொன்னால் அல்லாஹ் பீறிடச் செய்தான் என்று நேரடிப் பொருளாகும்.

 

ஆனால் யுஃபஜ்ஜிரு அல் இன்ஸான் என்று சொல்லும் போது நேரடிப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் ஊற்றுக்களைப் பீரிடசெய்பவன் அல்லாஹ் தான். எனவே அல்லாஹ் பீரிடச் செய்வதை அடைந்து கொள்வார்கள். பெற்றுக் கொள்வார்கள் என்று பொருள் கொள்வதே சரியாகும்.

 

ஒரு அர்த்தம் இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றமாக அமைந்தால் அதை தவிர்த்து விட்டு மாற்று அர்த்தம் கொடுக்க வேண்டும்.

 

ஸலவாத் என்பதை அல்லாஹ்வுடன் சேர்க்கும் போது அருள் செய்கிறான் என்றும் மனிதர்களுடன்  சேர்க்கும் போது அருள் வேண்டுகிறான் என்றும் பொருள் கொள்வதை நாம் அறிந்துள்ளோம்.

 

எனவே பீரிடச் செய்யும் செயல் சொர்க்கவாசிகளின் செயல் அல்ல. அல்லாஹ்வின் செயல். அல்லாஹ் பீரிடச் செய்வதை சொர்க்கவாசிகள் பெற்றுக் கொள்கிறார்கள்  என்பது தான் இதன் கருத்து.

 

எனவே தான் ஒடச் செய்வார்கள் பீரிடச் செய்வார்கள் என்று பொருள் கொள்ளாமல் அதை பெற்றுக் கொள்வார்கள் என்று மொழி பெயர்த்துள்ளோம்.

 

இது முதல் விஷயம்.

 

யுஃபஜ்ஜிரூனஹா என்பதுடன் தஃப்ஜீர் என்ற மஸ்தர் உள்ளது

 

மதரஸா தமிழில் பெற்றுக் கொள்வதாக பெற்றுக் கொள்வார்கள் என்று மொழி பெயர்க்க வேண்டும். இப்படி ஒரு சொற்பிரயோகம்  தமிழில் இல்லை.

 

எனவே அதை சிறந்த முறையில் பெற்றுக் கொள்வார்கள் என்ற கருத்தில் தான் இது சொல்லப்படும். ஒன்றைப் பெற்றுக் கொள்வதறாக நாம் இடம் பெயர்ந்து பெறுவதை விட நாம் இருக்கும் இடத்தில் இருந்து பெறுவது தான் சிறந்த முறையில் பெற்றுக் கொள்வதாகும்.

 

எனவே தான் இருக்கும் இடத்திலிருந்தே பெற்றுக் கொள்வார்கள் என்று மொழி பெயர்த்துள்ளோம். மஃப்வூல் முத்லக் சொற்களுக்கு கருத்து அடிப்படையில் தான் பொருள் கொள்ள வேண்டும்.

 

இதை அரபு  தப்சீர்களிலும்  இப்படித்தான் விளக்குவார்கள்.

 

உதாரணமாக இப்னு கஸிர் இதற்கு பின்வருமாறு விளக்குகிறார்.

 

وَقَوْلُهُ تعالى: يُفَجِّرُونَها تَفْجِيراً أَيْ يَتَصَرَّفُونَ فِيهَا حَيْثُ شَاؤُوا وَأَيْنَ شَاؤُوا مِنْ قُصُورِهِمْ وَدُورِهِمْ وَمَجَالِسِهِمْ وَمَحَالِّهِمْ

 

அவர்கள் தாங்கள் இருக்கும் மாளிகைகள் வீடுகள் இருக்கும் சபைகள் ஆகிய இடங்களில் இருந்தே அதை விரும்பியவாறு பெற்று பயன்படுத்துவார்கள்

 

இப்படி இப்னு கஸிர் விளக்குகிறார்.

 

இருக்கும் இடத்திலிருந்தே என்ற சொல் எங்கே உள்ளது என்று மஃப்வூல் முத்லக் விஷயத்தில் கேட்க கூடாது.


மேற்கண்டவாறு பீ.ஜே. அவர்கள் விளக்கம்  தந்துள்ளார்கள். 


----------------




 

عَيْنًا - ஃஅய்னன் 

ஓர் ஊற்று -  ஒரு சுனை - நீர் வசந்தம்

يَّشْرَبُ -யஷ்ரபு 
பருகுவார்கள் - அருந்துவார்கள்

بِهَا  - பிஹா
அதிலிருந்து 
 عِبَادُ - ஃஇபாது 
அடியார்கள்

 اللّٰهِ- அல்லாஹி 
அல்லாஹ்வின்


 يُفَجِّرُوْنَهَا யுFபச்சிரூனஹா
அதை அவர்கள் ஓட வைப்பார்கள்-  அவர்கள் அதை வெடிக்கிறார்கள்

 تَفْجِيْرًا‏ - தFப்ஜீரா
ஓட வைத்தல் - வெடிப்பு 




இந்த வசனத்தின் முதல் வார்த்தை  ஃஅய்னன் 


[27/08, 5:50 am] Fazlul: காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள். -டாக்டர். முஹம்மது ஜான்

 

76:6. அது (சொந்தமாக) அல்லாஹ்வினுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். - அப்துல் ஹமீது பாகவி

 

76:6. அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள். - இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)

 

76:6. (இவ்வாறு கலக்கப்பட்ட அது) ஒரு ஊற்றாகும், அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள், அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள். - மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)


 

76:6. ஓர் ஊற்று! அதில் அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப் பெற்றுக் கொள்வார்கள்.  -- PJ

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு